நூல் : டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க !

“டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க” எனும் எனது புதிய நூலை பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவள் விகடன், பெண்ணே நீ, தமிழ் ஓசை களஞ்சியம், ஹெல்த், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. ஆரோக்கியமான விமர்சனங்கள் இந்த நூலுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினமணி இதை "சிறந்த நூல்" என பிரகடனப் படுத்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. சாதாரண விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் பல அசாதாரண உண்மைகளை இந்த நூல் படம் பிடிக்கிறது என நம்புகிற...
More

வாங்க ஜெயிக்கலாம்

"இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க" எனக்கு முன்னால் கத்தையாய் கொஞ்சம் பேப்பரைப் போட்டார் பிலால், பிளாக் ஹோல் மீடியா நிறுவனர். ஏதோ ஸ்கூல் பிள்ளைங்களோட பரீட்சை பேப்பர் போல இருந்தது. வித விதமான கை எழுத்துகளில் கிறுக்கலாய் கிடந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து வாசித்தேன். புரியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். "என்ன தலைவரே இதெல்லாம் ?" தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அவர், அருகில் ஆசிரியர் யாணன் அவர்கள். ஒருபக்கம் பெண்கள் வளர்கிறாங்கன்னு சொல்றோம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு எத...
More

குழந்தையால் பெருமையடைய வேண்டுமா

நூலின் முன்னுரை அவசர அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். படியில் அமர்ந்து ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது பின்னால் வந்து கழுத்தில் கட்டிக்  கொண்டாள் ஐந்து வயது மகள். “ஏன் டாடி ஆபீஸ் போறீங்க ?”  “ஆபீஸ் போனா தானேடா செல்லம் பணம் சம்பாதிக்க முடியும் ! நீ கேக்கற விளையாட்டெல்லாம் வாங்கித் தர முடியும்” இப்படிச் சொன்னதும் அவளுடைய குரலில் ஒரு சின்ன ஏளனமும், நகைப்பும்… “ஹேய் டாடி… பொய் சொல்லாதீங்க…. ஏடிஎம் ல போய் கார்ட் போட்டு, ஒரு பட்டனை அமுக்கினா பணம் கிடைக்கும்ல ? அன்னிக்கு பாத்தேனே. ஆ...
More