உங்க குழந்தைக்கு கண்ணாடியா ?

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ? அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி. 4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்...
More

குழந்தைகளுக்கான சி.டிக்கள், நல்லவையா ?

ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள். ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வ...
More

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் அலசப்பட்டது. உலகெங்கும் பரவலாக வரும் இத்தகைய தகாத உ...
More

ஆணி அடிக்கப்பட்ட திறமைகள்.

அழகிய படகொன்றை உன்னிடம் கண்டேன் நீயோ அதை கிணற்றுக்குள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறாய் ! அழகிய பறவையொன்றையும் கண்டேன். நீ அதைக் கூண்டுக்குள் மட்டுமே பறக்க விடுகிறாய். அப்படியே, மீன்களையும், முயல்களையும் ஒரு சில அழகிய மயில்களையும். பட்டத்தை நூலில் கட்டவேண்டுமென்பது சரிதான் அதற்காக ஒருமுழம் நூலிலா ? எல்லைகளை அவிழ்த்து விடு திறமைகள் சட்டத்துக்குள் பாதுகாக்க அல்ல ! 0
More

த‌மிழும், ம‌னைவியும்

விலகலில் வியாபித்துக் கிடக்கும் என் விழியோர வெற்றிடங்கள். மோகத்தின் கருகிப் போன தீக்குச்சிகள் திரி தாண்டி திரி தாண்டி பரவி எரியும் ஆத்மார்த்த ஸ்னேகத்தின் படிக்கட்டு வெளிச்சங்கள், கடந்த மாதங்களின் எரிச்சல் திட்டுகளெல்லாம் நித்திரைத் திண்ணைகளில் கூர்மையாகிக் கிடக்கும். கையசைத்து அனுப்பி வைத்த ரயில்வே நிலைய நினைவுகள், சுகப்பிரசவ பிரார்த்தனைகள் எல்லாம் அடர்ந்து பரவும் உள்ளுக்குள் எழுத முடியாத நாட்களில் விரல்களில் எழும் அழுகை மனசுக்குள். மனைவியாய் பார்க்கத் தோணுது த...
More

தமிழ் என் தந்தை

  பால்யத்தில் பிரம்பும் கையுமாய் பயமூட்டிய அப்பா, பள்ளி நாட்களின் பரிசுக் கைகளுக்கு முத்தமிட்டு, தேர்வு முடிவுகளில் சத்தமிட்டு, குழப்பிய அப்பா, கல்லூரி காலத்தில் கண்டித்தபோது தலைமுறை இடைவெளியென திட்டு வாங்கிய அப்பா, வேலை வாங்கிய சேதி அறிந்து ஊருக்குள் அதை நிமிர்ந்து சொல்லி கண் நிறைத்த அப்பா. ஒவ்வொரு காலத்திலும் புரியப் படாமல் அடுத்த படிகளில் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த என் அப்பா. அப்படியே, அகரம் ஆத்திச் சூடி திருக்குறள் இலக்கணம், கவிதை என அழைத...
More

தமிழ் என் தாய்

<a href="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg"><img class="size-medium wp-image-2691" src="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg?w=300" alt="Silhouette of mother kissing child on head" width="300" height="202" /></a> வளைகுடாக்கள் கால் நீட்டிப் படுத்திருக்கும். இந்திய வறுமை வயிறுகள் ஆண்டு வருமானத்தின் பாதிப் பணத்தை விசாவுக்கென ஏஜெண்டு தொப்பைகளில் தாரை வார்க்கும். அமெரிக்கச் சாலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கொஞ்சம் பருக்கை வினியோ...
More

தமிழ் என் மழலை

மழலையே என் கால்நூற்றாண்டுக் கனவுகளின் மனித வடிவமே, உன்னை நான் எப்படிக் கொஞ்சுவேன் ? என் மனசின் பதுங்கு குழிகளில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக் கிடக்கும் உன்னை சிக்கனம் இன்றி எப்படிக் கொஞ்சுவேன் ? நீ சுவர்க்கத்தின் விளக்கவுரை. உனை கர்ப்பத்தில் சுமந்தபோதே கர்ப்பனைகளைச் சுமந்தேன். உன் உதைகளை எல்லாம் கதைகளாய் எழுதிட தாய்மை முழுவதும் தவித்துக் கிடந்தேன். இயற்கையின் இருக்கைகளில் எங்கும் உனக்கான உவமைகள் உட்கார்ந்திருக்கவில்லையே. விலகிப் போனால் மூச்சுக்கு அணைபோட...
More

மழலைக் காலம்

காகிதக் கப்பல் எப்போதுமே யுத்தத்துக்கு உபயோகப்படாது. வகுப்பறை விமானங்கள் தூர தேசம் செல்வதில்லை. பனங்காய் வண்டி பயணத்துக்குப் பயன்படுவதில்லை. கடற்கரை மணல் வீடு வசிப்பதற்கு வசதிப்படாது. மர இலை சுருட்டிச் செய்த ஊதலைக் கொண்டு எங்கும் கச்சேரி நடந்த முடியாது. மழலை வயது கற்றுக் கொள்கிறது ! எது பிற்காலத்தில் பயன்படாது என்பதை ! 0
More

கவிதை : வயதானவர்களின் வாழ்க்கை

தலைப்புச் செய்திகளை மட்டுமே அவசரமாய் மேய்ந்து வந்த கண்கள், வரி விளம்பரங்களையும் விடாமல் படிக்கும். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வருகையிலும் விரல்கள் ரிமோட் தேடாது. ஃபேஷன் சானலின் எண் மறந்து போகும் நியூஸ் சேனல் எண் நினைவில் நிற்கும். அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி, தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும். இந்தக் கால இசை சத்தம் என்று சத்தமாய்ப் பேசும். இளமைக் கலாட்டாக்கள் தவறுகளே என்பது தெரியவரும் பேசும் போதெல்லாம் அறிவுரை முறைக்கும் த...
More