பால்யங்களின் பகலில்

தம்பிக்கு ஆவடி டேங்க் ஃபேக்டரியில் வயர்களோடு முரண்டு பிடிக்கும் வாழ்க்கை. இன்னொரு தம்பி அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தெறிக்கும் இரும்பும் பொறிகளோடு கருகிக் கலங்கும் வாழ்க்கை தங்கைகளும் அக்காக்களும் அப்பா, அம்மாவைப் போல ! கையில் பிரம்புடனும் கண்ணில் அன்புடனும் பாடம் சொல்லித் தரும் டீச்சர் வேலை. மிச்சமுள்ள‌ ஒரு அக்காவுக்கு போலீஸ் கணவனோடு வழக்காடும் வழக்கமான வாழ்க்கை. உதறிய கையின் சிதறிய பருக்கைகளாய் இடம் மாறினாலும், ஆண்டுக்கு ஒரு முறை கிராம வீட்டில் சந்தித்த...
More

தாயில்லாமல்

இப்போதும் எங்கேயோ ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். எப்போதும் எங்கேனும் ஒரு மகன் தன் தாயை மிதித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் எங்கேயோ எழுதப்படாத வலிகளின் வரிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அன்னையரின் டைரிகள். எப்போதும் எங்கேனும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு கவிதை தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.
More

காலமாற்றம்

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும், காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும், உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும் வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை, இப்போது தொப்பையைக் குறைக்க மூடிய அறையில் மூன்று மணி நேரம் மூச்சு முட்ட இயந்திரத்தில் ஓடும்போது தான் தெரிகிறது அன்று வாழ்க்கையே...
More

சிறு கவிதைகள்

கேளுங்கள் தரப்படும் தவறாகிறது. ஆலய முற்றங்கள் கேட்கின்றன ஆண்டவனுக்குத் தரப்படுகிறது. ஃ எல்லா அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் இருப்பது போலவே, அலுவலகங்களின் பின்னால் இருக்கிறது சிறுநீர் வாசனையுடன் ஒரு சுவர் ஃ கவிதை ஒன்றும் பரம்பரை வியாதியில்லை பயம் வேண்டாம். குழந்தையைக் கொஞ்சிய மனைவியிடம் சொன்னேன்.   ஃ பெயரிடுமுன் இறந்து விடும் குழந்தைகள் இறக்கும் போதும் பெயரில்லாதிருக்கும் பெரியவர்களைவிட அதிர்ஷ்டசாலிகளே. ஃ எல்லா வீடுகளிலும் வளர்கின்றன விளம்பரம...
More

விட்டு விடுதலையாகி

கிராமத்து வீடு மாறிப்போய் விட்டது. முன்பு தொழுவம் இருந்த இடத்தில் தம்பி வளர்க்கிறான் லவ் பேர்ட்ஸ். முன்பு கோழி வளர்ந்த இடத்தில் அவனுடைய யமஹா நிற்கிறது. ஊஞ்சல் ஆடும் புளிய மரத்தைக் காணவில்லை. வரிசை வரிசையாய் ரப்பர் மரங்கள். முற்றத்தில் வந்திருக்கிறது ஒரு மீன் தொட்டி. ஆடு, மாடு, கோழி என்றிருந்த வீடு லவ்பேர்ட்ஸ், நிற மீன்கள் என நிறம் மாறியிருக்கிறது. சிக்னல் கிடைக்கையில் சிணுங்குகிறது அவன் செல்பேசி. ஃ  
More

பழைய புகைப்படங்கள்

பஞ்சத்தில் அடிபட்ட பல்லிபோல என்று விமர்சிக்கப்பட்ட என்னுடைய பழைய புகைப்படங்கள். திருவிழாப் பயணத்தில் சிறுநீர் கழிக்கையில் யாரோ எடுத்த சிறுவயதுப் புகைப்படம். தலையில் ஆப்பிரிக்க காடுகளை வளர்த்துத் திரிந்த கல்லூரிப் புகைப்படங்கள். எலும்பும் தோலுமாய் பரிசோதனைக்கூட எலும்புக்கூடு கணக்கான பள்ளிக்கூட புகைப்படங்கள், எத்தனையோ கிண்டல்களைச் சுமந்தாலும் எல்லாம் பத்திரமாய் இருக்கின்றன என்னிடம். கடந்து வந்த பாதைகள் தரும் சுகம் நிகழ்கால சோகங்களை தரையிறக்க உதவுகின்றன எப்படியே...
More

காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

    மகிழ்ச்சி !   காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, ...
More

டிஜிடல் வணக்கம்

அதிகாலையில் எழுந்ததும் பைபிள் வாசிப்பது என் அப்பாவின் பழக்கம் சூரிய நம்ஸ்காரம் செய்வதோ நமாஸ் செய்வதோ உங்கள் அப்பாவின் வழக்கமாய் இருந்திருக்கலாம். அம்மாக்களுக்கு இருள் விலகாத கொல்லைப்புற தாழ்ப்பாழ் விலக்கி சத்தமிடாத பாத்திரங்களோடு சகவாசம் செய்வது மட்டுமே கற்காலப் பழக்கம். எனக்கும் உனக்கும் இதில் எதுவும் பழக்கமில்லை. விடிந்தும் விடியாமலும் போர்வை விலக்கா அதிகாலைகளில், வாட்ஸப்பின் நெற்றி தேய்த்து தூக்கம் கலைக்கிறோம். நள்ளிரவின் திடீர் விழிப்புகளிலும் வெளிச்ச...
More

அம்மா

      சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். கல்வியும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா ? உருட்டி விழுங்க... ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும் வரலை பொறுக்கிப் பசங்க சகவாசம் இன்னும் விடலை. அப்பாவின் திட்டுகளில் இல்லாத தன்மானம் சொல்லாமல் எழும்ப வெளியேறும் மகனை, கொல்லையில் நிறுத்தி சொல்லுவாள் அன்னை. மறக்காம 'மத்தியானம் சாப்பிட வந்துடுப்பா'
More

குழந்தைகளிடம் போன் குடுக்கலாமா ?

    அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை. கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி. குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும்...
More