கி.மு 36. எலிசாவின் வரலாறு

  எலிசா... இறைவாக்கினர் எலியாவுடன் இருந்த இன்னொரு இறைவாக்கினர். எலியாவின் மறைவிற்குப் பின் கடவுள் எலிசாவுடன் இருந்து பல அரிய செயல்களைச் செய்து வந்தார். எலியாவைப் போல் இரண்டு மடங்கு அருள் பெற்றவரான எலிசா, ஏராளமான அற்புதங்கள் செய்தார். சிரியா மன்னனின் படைத்தளபதி நாமான். நாமான் மிகச் சிறந்த வீரன். திறமையாய் படைகளைப் பயன்படுத்துவதிலும், வீரமாய்ப் போரிட்டு எதிரிகளை வீழ்த்துவதிலும் அவன் தலைசிறந்து விளங்கியதால் மன்னன் அவனை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து கெளரவப் படுத்தியிருந்தார். என்ன வலிமை...
More

கி.மு 35 : எலியாவின் வரலாறு

  தீராத மாவும், குறையாத எண்ணையும். ஃ இஸ்ரயேலர்களிடையே கிலயாத் என்னுமிடத்தில் எலியா என்றொரு இறைவாக்கினர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மூலமாகக் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் பேசிவந்தார். மக்கள் தவறான வழிகளில் நடக்கும் போதெல்லாம் கடவுள் எலியா வாயிலாக அவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்து வந்தார். அந்நாட்டின் மன்னன் ஆகாபு கடவுளை விட்டு விலகி தவறான வழிகளில் நடந்து கொண்டிருந்தான். கடவுள் எலியாவை மன்னனிடம் அனுப்பினார். எலியா மன்னனிடம் சென்று 'மன்னா.... நீ ...
More

கி.மு 34 : சாலமோனும், அந்தப்புர அழகிகளும்

சாலமோன் மன்னன் தனக்கென ஏராளமான செல்வங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவருடைய அரண்மனையின் ஒவ்வோர் அறையும் அழகிய வேலைப்பாடுகளுடன் ஏராளமான பொருட் செலவில் அமைக்கப் பட்டிருந்தது. தன்னுடைய மனைவியான எகிப்திய இளவரசியோடு அவர் உல்லாச வாழ்க்கை வாழத் துவங்கினார். ஒரு மனைவியுடன் வாழும் வாழ்க்கை அவருக்கு மிகவும் விரைவிலேயே சலித்துவிட்டது. விதவிதமான பெண்களை தன்னுடைய மனைவியராக்க வேண்டும், தன்னுடைய அந்தப்புரத்தை அழகிகளால் அலங்கரிக்க வேண்டும் என்னும் ஆசை அவருக்குள் வளர்ந்தது. மன்னரல்லவா ? நினைத்தவர்களை எல்லாம...
More

கி.மு 33 : சாலமோனின் முதல் தீர்ப்பு

ஒரு நாள் விலைமாதர்கள் இரண்டுபேர் சாலமோன் மன்னனுடைய முன்னிலையில் வந்து நின்றார்கள். 'என்ன பிரச்சனை சொல்லுங்கள் ' மன்னன் கேட்டான். 'அரசே.. நானும் இவளும் ஒரே வீட்டில் தான் குடியிருக்கிறோம். நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். அதன்பிறகு மூன்று நாள் கழிந்தபின் இந்தப் பெண்ணும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். இவள் இரவில் தூங்கும் போது அவளுடைய குழந்தையின் மீது புரண்டு படுத்து விட்டாள். அதனால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. அவள் நள்ளிரவில் எழுந்து தன் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டவுடன் என்னருகில் அ...
More

கி.மு 32 : சாலமோனும் கடவுளும்

தாவீது மன்னனின் மகனான சாலமோன் மன்னன் எகிப்து நாட்டு மன்னனின் மகளை திருமணம் முடித்து அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவருடைய கனவில் கடவுள் வந்தார். 'சாலமோனே... நீ என் மீது வைத்திருக்கும் அன்பும், பக்தியும் என்னை மிகவும் திருப்திப் படுத்துகிறது. உனக்கு என்ன வேண்டும் கேள்.' கடவுள் கேட்டார். 'எனக்கு என்ன வேண்டும் கடவுளே.... என் தந்தை தாவீதோடு நீர் இருந்தது போல என்னோடும் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.' சாலமோன் பதில் சொன்னார். 'தாவீது என் கட்ட...
More

கி.மு 31 : தந்தை மகன் போராட்டம்

மன்னன் தாவீதின் மகன்களில் ஒருவனான அப்சலோம், அவனுடைய தந்தைக்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த சகோதரனான அம்மோனைக் கொன்று விட்டுத் தப்பியோடினான். தாவீது இறந்து போன மகனுக்காகக் கலங்கித் தவித்தார். வருடங்கள் செல்லச் செல்ல இறந்துபோன மகனின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய, தலைமறைவான மகன் அப்சலோமையும் நினைத்து ஏங்கத் துவங்கினார். ஆனாலும் தன் மகனைத் திரும்ப அழைக்கும் நினைப்பு அவருக்கு இருக்கவில்லை. தாவீது மன்னன் அப்சலோமின் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவருடன் பலகாலமாக பணியாற்றிவரும் யோபாவு என...
More

கி.மு 30 : தாவீது மன்னனின் சலனம்

ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமைய...
More

கி.மு 29 : பொருந்தாக் காதல் பெரும் தீது !

இஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம். அப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள். தாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தா...
More

கி.மு 28 : தாவீது : ஆட்டிடையன் அரசரான கதை !

தாவீது : ஆட்டிடையன் அரசரான கதை !     ஃ இஸ்ரயேல் குலத்தின் வழிகாட்டியாக இறைவனின்  அருள் பெற்ற சாமுவேல் இருந்து மக்களை வழிநடத்திக் கொண்டிருந்த கால கட்டம் அது. மக்களோ தங்களுக்கு ஒரு அரசன் வேண்டும் என்று சாமுவேலிடம் முறையிட்டார்கள். சாமுவேல் கடவுளின் விருப்பத்திற்கிணங்க சவுல் என்பவரை அரசராய் நியமித்தார். அவர்தான் இஸ்ரயேல் குலத்தின் முதல் அரசர். அதுவரை இஸ்ரயேலர்களுக்கென்று அரசர் யாரும் இருந்திருக்கவில்லை. அவர்களை வழிகாட்ட வழிகாட்டிகள் மட்டுமே இருந்தார்கள். சவுல், தன்னுடைய...
More

கி.மு 27 : இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்

இஸ்ரயேலரின் முதல் மன்னர் - சவுல் ஃ இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டும் தலைவராக சாமுவேல் இருந்த காலம், பெலிஸ்தியர்கள் அடிக்கடி இஸ்ரயேலர்கள் மீது போர் தொடுத்து வந்தார்கள். இஸ்ரயேல் குலத்தினருக்குக் கடவுள் எப்போதும் நிறைவான வளங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து வந்தார். சாமுவேலுக்கு வயதான காலத்தில் மக்கள் சாமுவேலிடம் வந்தனர். 'எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்.' மக்கள் முறையிட்டனர். சாமுவேல் திடுக்கிட்டார். ' என்ன ? அரசனா ? உளறாதீர்கள். கடவுள் மட்டுமே நம் அரசர். வேறு ஒரு அரசர் நமக்குத் தேவையில்ல...
More