கி.மு 46 : யூதித்தின் ஞானம்

  ஒரு முறை நினிவே நகரை நெபுகத்நேசர் என்னும் சர்வாதிகார மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய படைத்தளபதி ஒலோபெரின் மன்னனைப் போலவே மிகவும் ஆக்ரோஷ குணம் படைத்தவனாக இருந்தான். மன்னன் தன்னை எதிர்த்த மக்களையும், தனக்கு மரியாதை செலுத்தாத நாட்டினரையும் ஒலோபெரினைக் கொண்டு அழித்து ஒழித்தான். இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட காலாட்படையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகளைக் கொண்ட குதிரைப்படையும், மிகப்பெரிய எண்ணிக்கையிலான தேர்ப்படையும் மன்னனை எதிர்த்த நாடுகளைத் துவம்சம் செய்தன. நாடுகளை அழித்ததோடு மட்டும் நில்...
More

கி.மு 45 : தோபித்து.

  திசிபே நாட்டில் தோபித்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறந்த இறை பக்தர். அவர் அசீரியர்களின் மன்னனான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப் பட்டார். அவரும் அவர் உறவினர்களும் நினிவே நகரில் குடிபுகுந்தார்கள். தன்னுடைய உறவினர்கள் அனைவருக்கும் தோபித்து மனம் கோனாமல் உதவி செய்து வந்தார். அதனால் அவருடைய உறவினர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். அவருடைய தந்தை இறந்தபின் அவர் தந்தையின் வழிமரபில் வந்த ஒரு பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனுக்க...
More

கி.மு 44 : யோனாவைத் துரத்திய கடவுள்

  யோனா இறைவிசுவாசமோ, இறைபக்தியோ அதிகம் இல்லாத ஒரு மனிதர். ஒரு நாள் கடவுள் அவர் முன்னால் வந்து நின்றார். 'யோனா... நினிவே நகர மக்கள் தவறான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே போய் கடவுள் உங்களை அழிக்கப் போகிறார் என்று அறிவி' என்று சொல்லிவிட்டு மறைந்தார். யோனா பயந்தார். 'இதெல்லாம் என்னால் முடியாத காரியம். நான் போய் நினிவே நகரில் கடவுளுடைய வார்த்தையைச் சொன்னால் என்னைக் கல்லால் எறிந்து கொல்வார்களோ, இல்லை பைத்தியக்காரன் என்று துரத்துவார்களோ தெரியாது'. என்று தனக்குள்ளே சொல்லிக் ...
More

கி.மு 43 தானியேல் – மன்னனின் கனவும், சிங்கத்தின் சினமும்

பாபிலோன் மன்னன் நெபுகாத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். நகரைக் கைப்பற்றிய அவர் வீரர்களை அழைத்து 'இஸ்ரயேல் மக்களில் அழகும், திறமையும், ஒழுக்கமும் நிறைந்த நான்கு இளைஞர்களை கண்டுபிடித்து அழைத்து வாருங்கள். அவர்கள் கல்தேயரின் எழுத்துக்களைப் படித்தறிந்து நமக்கு தகவல் பரிமாற்றத்தில் உதவட்டும்' என்றார். வீரர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதும் சுற்றித் திரிந்து நான்கு இளைஞர்களைக் கொண்டு வந்தார்கள். 'உங்கள் பெயர் என்ன ?' மன்னன் கேட்டான் 'சாக்ராத்' 'மேஷாக்' 'சாத்ராக்' 'தானியேல்' 'நீங்கள்...
More

கி.மு 42 : எசேக்கியேல் இறைவாக்கினர்

எசேக்கியேல் யூதேயாவில் வாழ்ந்து வந்த ஒரு இறைவாக்கினர். அவருக்குக் கடவுள் சொல்லும் செய்திகளை காட்சிகள் மூலமாக அவர் மக்களுக்குச் சொல்வது வழக்கம். அவர் வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எருசலேமை விட்டுச் சிதறடிக்கப்பட்டு பாபிலோனைச் சுற்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்களை மீண்டும் கடவுள் எருசலேமில் கூட்டிச் சேர்க்கப் போகிறார் என்பதையும் அது மிகவும் கடினமானதாக இருந்தாலும் நிறைவேறும் என்பதையும் கடவுள் எசேக்கியேலுக்குத் தெரியப்படுத்தினார். எசேக்கியேல் ஒரு செங்கல்லை எடுத்தார். அதில் எருசலேமின் படத்தை வரைந்தார்...
More

கி.மு 41 : எரேமியா இறைவாக்கினர்

  எரேமியா என்னும் இளைஞன் நல்ல கடவுள் பக்தன். அவன் ஆலயத்தில் இறை பணி செய்து வந்தான். கடவுள் அவனுக்காய் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். ஒருநாள் கடவுள் அவருக்குத் தோன்றி ' நீர் ஆலயத்தில் அடைபட்டுக் கிடக்கவேண்டியவரல்ல. உம்மை ஒரு தீர்க்கத்தரிசியாக்குவேன். நீர் எங்கும் போய் என்னைப்பற்றியும், என் செயல்களைப் பற்றியும் அறிவிக்கவேண்டும்' என்றார். எரேமியா திகைத்தார். 'ஐயோ கடவுளே ... எனக்கு உலகமே தெரியாது. என்னால் இது எப்படி சாத்தியமாகும். நீர் தவறான ஆளைத் தேர்ந்து கொண்டிருக்கிறீர்' எரேமியா ச...
More

கி.மு 40 : ஏசாயா இறைவாக்கினர்

  இஸ்ரேல் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூதேயா என்றும், இஸ்ரேல் என்றும் இரண்டு நாடுகள் காலப்போக்கில் உருவாகின. இஸ்ரேலை இரண்டாம் ரகோபெயாம் என்னும் மன்னனும் யூதேயாவை உசியா என்னும் மன்னனும் ஆட்சி செய்து வந்தார்கள். உசியா மன்னன் மிகவும் சிறப்பாக தன்னுடைய நாட்டை வழிநடத்தி வந்தார். அவருடைய ஆட்சியில் மக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். உசியா மன்னன் இறந்தான். உசியா மன்னனின் மறைவு மக்களை மிகவும் கலக்கத்துக்குள்ளாக்கியது. அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து அதிகமாகக் க...
More

கி.மு 39 : யோபு – விசுவாசத்தில் வியப்பூட்டியவர்

  ஊசு நாட்டில் யோபு என்றொரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்களும், மூன்று மகள் களும் இருந்தனர். ஆயிரக்கணக்கான ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், காளைகள் என அவர் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஏராளமான வேலைக்காரர்களும் அவரிடம் வேலை செய்து வந்தனர். யோபுவின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உண்டு குடித்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. யோபு ஒரு மிகச் சிறந்த இறைபக்தர். அவர் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டவர். அடிக்கடி கடவுளுக்குத் தூய்மையான எரிபலி...
More

கி.மு 38. எஸ்தர் : அழகும், அறிவும்

  அகஸ்வேர் என்னும் மன்னன் இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிலான நூற்று இருபத்து ஏழு மாநிலங்களையும் ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றான். ஒரு மிகப்பெரிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பெருமிதத்தில், தன்னுடைய ஆட்சியின் மூன்றாவது ஆண்டில் குறுநில மன்னர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பெரிய விருந்தொன்றை அளித்தார். அதைத்தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் சிறப்புகளையும் பெருமைகளையும் ஆறுமாத காலம் நாடுமுழுவதும் விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தான். அதன்பின் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மன்னன் ஒரு மிகப்பெரிய ...
More

கி.மு 37. யோவாஸ் மன்னன்

  இஸ்ரயேல் நாட்டில் ஏராளமான அரசர்கள் ஆட்சியமைப்பதும், கொல்லப்படுவதும் வழக்கமாக இருந்தது. ஒருமுறை அகஸியா என்னும் மன்னன் இஸ்ரயேலரை ஆண்டுவந்தான். அவன் இறந்தபோது அரசனுடைய தாய் அத்தாலியம்மாளுக்கு அரசமைக்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது. அவள் தன்னுடன் சிலரைச் சேர்த்துக் கொண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் அரச குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்று குவித்தாள். அத்தாலியம்மாளின் அதிரடிப் போரை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அரச குடும்பமே அத்தாலியம்மாளின் அதிரடிப் போரில் காலியாகிவிட்டது. மன்னன் அ...
More