கிறிஸ்தவ வரலாறு :13. சிலுவைப் போர்கள்

  பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் சிலுவைப் போர்கள். இப்போர்கள் திருச்சபையின் தூண்டுதலாலும், அவர்களுடைய ஈடுபாட்டினாலும் நிகழ்ந்தவையே. எருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்வது வழக்கமாக இருந்தது. கிபி 1000 வது ஆண்டில் கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார். அவர் மக்களை தீர்ப்பிடுவார் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே எருசலேமிற்குச் செல்லும் மக்களின் கூட்டம் அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருந்தது. அப்படி ச...
More

கிறிஸ்தவ வரலாறு : 12 – கிழக்கு சபையும், மேற்கு சபையும் பிரிகிறது

  மன்னன் டியோகிளேசியன் கிபி 286ல் ரோம் அரசை இரண்டாகப் பிரித்து மேற்கில் ரோம் நகரின் தலைமையிலும், கிழக்கே கான்ஸ்டாண்டிநோபிளிலுமாக இரண்டு பிரிவை ஏற்படுத்தினார். உலகின் பல நாடுகளிலும் பத்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் புகுந்து தங்கள் இருப்பை நிலை நாட்டினர். எனினும் எல்லா கிறிஸ்தவர்களும் ரோம் நகர போப்பின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தனர். கான்ஸ்டாண்டிநோபிள் தனிப் பிரிவாக இருந்தாலும் அங்குள்ள தலைமைக்கு உலகக் கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு இல்லை. இது 1054ல் இரண்டு சபைகளுக்குமிடையே பெரும் பிளவு ஏ...
More

கிறிஸ்தவ வரலாறு :11 – சில வித்தியாசமான துறவிகள்

  துறவறத்தையும் அதன் தன்மைகளின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் தனித்து வாழ்ந்த துறவியர். இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பாறைவெளிகள், குகைகள் மற்றும் பாலை நிலங்களில் தனித்துத் தவம் செய்தனர். ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டனர். இரண்டாவது வகையினர் குழுக்களாக துறவறத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய துறவியர் குகைகளில் சேர்ந்து வாழ்ந்தனர். திரு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒறுத்தல் முயற்சிகளை அனைவரும் பின்பற்றினர். மூன்றாவது பிரிவினர் அமைப்பு ரீதியாக துறவறம் மேற்கொ...
More

கிறிஸ்தவ வரலாறு : 10 – கிறிஸ்தவத்தில் துறவறம்

  நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தில் ஆரம்பமான துறவறம் இடைக்காலத் திருச்சபை நாட்களில் வளர ஆரம்பித்தது. கற்பு, சுய கட்டுப்பாடு, தன்னை ஒறுத்தல், உலகிய இன்பங்களை விட்டு ஒதுங்கி இருத்தல், வாழ்வில் தூய்மை போன்றவை துறவறத்தில் மிக முக்கியமாகப் போதிக்கப்பட்டன. 'ஒருவன் என்னைப் பின்பற்ற வேண்டுமெனில் தன்னையே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்' என்பது இயேசுவின் அழைப்புகளில் ஒன்று. எனவே கிறிஸ்துவைப் பின் பற்றுபவர்கள் தன்னை வெறுக்க வேண்டும் எனும் சிந்தனை நான்காம் நூற்...
More

கிறிஸ்தவ வரலாறு : 9 – போப்பின் அதிகாரம்

கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார். திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை ஒழிப்பதற்கு மிகவும் கடினமாக பாடுபட்டார். குறுக்கு வழியில் இடம் பிடித்தல், தலைமைப் பதவிக்கு போராட்டங்கள் போன்றவற்றை இவர் வெறுத்தார். இவர் காலம் ஒரு களையெடுப்புக் காலம் என்று கூறலாம். குருத்துவ நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று முதலாம் மகா கிரிகோரி சொன்னதை இவர் அழுத்தம் ...
More

கிறிஸ்தவ வரலாறு : 8 – திருச்சபை வளர்ச்சியின் அடுத்த‌ கட்டம்

  திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்   ரோமர்கள் கிறிஸ்தவத்தை அழிப்பதற்காக பல வழிகளில் முயன்றார்கள். மற்ற பல மதங்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவம் தன்னுடைய அணுகுமுறையையும், வழிபாட்டு முறையையும் மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டிருந்தது ரோமர்களின் கோபத்தைத் தூண்டியது. சிலைவழிபாடு அக்காலத்தில் பரவலாக இருந்த ஒரு வழிபாட்டு முறை. கிறிஸ்தவம் அதை எதிர்த்தது. சிலைகளுக்குப் பலியிடுவதையோ, அவற்றுக்கு அபிஷேகங்கள் நடத்துவதையோ கிறிஸ்தவம் எதிர்த்தது. பல மதங்கள் இயேசுவையும் ஒரு கடவுளாக ...
More

கிறிஸ்தவ வரலாறு : 7 – கிறிஸ்தவத்தில் அறிவு நெறிக் கோட்பாடுகள்

  கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களால் வளர்ந்தது. இரண்டாம் நூற்றாண்டில் இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே உயிருடன் இல்லை. யோவான் கடைசியாக கி.பி 100ல் இறந்தபின் வழிகாட்டலுக்கு அப்போஸ்தலர்கள் இல்லாமல் சபை அடுத்த நிலை தலைவர்களின் கைகளுக்கு வந்தது. முதலாம் நூற்றாண்டிலும் சரி, இரண்டாம் நூற்றாண்டிலும் சரி அரசாங்கத்தினால் கிறிஸ்தவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. புதிய சபை, கிளர்ச்சியின் சபை, திமிர்பிடித்தவர்களின் கூட்டம், நாத்திகர்களின் கூட்டன் என்றெல்லாம் பெயர்களை வாங்கி அடிபட்டது. ...
More

கிறிஸ்தவ வரலாறு : 6 – உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன்

  முதல் கிறிஸ்தவ மன்னன் என்னும் பெருமை கான்ஸ்டண்டைன் மன்னனுக்குக் கிடைத்தது. அவனுடைய ஆட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறிகொண்ட வேங்கைக் கூட்டம் போல பாய்ந்து கொண்டிருந்த வெறுப்பு அலையை அடக்கியது. கிறிஸ்தவர்களுக்குக் குறைந்த பட்சப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தது. கான்ஸ்டாண்டியஸ் என்னும் ராணுவ தளபதிக்கும், ஹெலீனா என்பவளுக்கும் முறைகேடாகப் பிறந்தவன் இந்த மன்னன் என்கிறது வரலாறு. டயோக்லீஷியன் மன்னனின் மறைவுக்குப் பின் அரியணையை யார் கைப்பற்றுவது என்னும் போரில் கான்ஸ்டண்டைன் வெற்றி பெற்றான். இவ...
More

கிறிஸ்தவ வரலாறு : 5. திருச்சபை வளர்ச்சியின் முதல் நிலை

  முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் முதலாம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு ரோமை அரசிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. அவர்கள் கிறிஸ்தவர்களின் மதத்தின் மேல் கொண்டிருந்த சந்தேகமே இந்த எதிர்ப்புக்குக் காரணம் எனலாம். அந்த சந்தேகங்களில் முக்கியமானவைகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றைச் சொல்லலாம். குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும் வழக்கமான மத வழிபாட்டுக்குரியனவாய் இருக்கவில்லை எனவே கிறிஸ்தவர்களின் வழிபாடுகளின் மேல் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இருந்து வந்தது. குறிப்பா...
More

கிறிஸ்தவ வரலாறு : 4 – பைபிளின் ஆரம்பம்

  இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் தவிர ஸ்தேவான், பவுல் பர்னபா, யாக்கோபு, தீத்து, மார்கு, லூக்கா போன்ற பலரும் இயேசுவின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கையையும் மக்களிடையே மிகுந்த உத்வேகத்துடன் பரப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த காலம் முதல் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் அவர்கள் செய்த துணிச்சலான, கம்பீரமான போதனைகள் தான் கிறிஸ்தவத்தின் மிகப் பலமான அஸ்திவாரமாக ஆயிற்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் கொடூரமான மரணத்தைச் சந்தித்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இயேசு சொன்ன ஆறுதல்களும், அவர்...
More