கிறிஸ்தவ வரலாறு 22 : புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியப் பிரிவுகள்.

************************************************************************************************************************************************** புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியப் பிரிவுகள். ************************************************************************************************************************************************** புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்கத் தலைமைக்கும் கொள்கைக்கும் எதிராக உருவானது. கத்தோலிக்க சபையின் திருவருட்சாதனங்களுக்குத் தரப்படும் முன்னுரிமைகள், அன்னை மரியாள...
More

கிறிஸ்தவ வரலாறு 21 : நாடுகளில் கிறிஸ்தவம்

************************************************************************************************************************************************** பிரிட்டனில் கிறிஸ்தவம் ************************************************************************************************************************************************** பிரிட்டனுக்குள் எப்போது கிறிஸ்தவம் நுழைந்தது என்பதைக் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் பிரிட்டனில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ...
More

கிறிஸ்தவ வரலாறு 20 – தமிழ் வளர்த்த கிறிஸ்தவம்

  தமிழ் இலக்கியச் செழுமைக்குப் பெயர்போன மொழி. அடர்த்தியும் அழகும், ஆழமும் நிறைந்த செய்யுள்களாலும், பாடல்களாலும் தமிழ் இலக்கிய உலகம் ஆழமாய் வளர்ந்திருந்தது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு குறை மட்டுமே இருந்தது, அப்போது தமிழில் உரைநடை நூல்கள் இல்லை ! வெறும் பாடல்கள் மட்டுமே இலக்கியத்தை வாழவைத்துக் கொண்டிருந்தது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் கூட கவிதையாகவே அமைந்திருந்தன. தூய உரைநடை நூல்களே இல்லை. ஓலைச் சுவடிகளில் ஆணிகளால் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பக்கம் பக்கமாய் உரைநடையை எழுதுதல் சு...
More

கிறிஸ்தவ வரலாறு 19 : மதத்தைப் பரப்பிய வணிகம்

  யவணர்கள் தென்னிந்தியாவுடன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்கள் கடல் வழியாக வந்து தென் இந்தியாவின் கடலோரப் பகுதிகளை தங்கள் வணிக வளாகமாக்கியதாக வரலாறு கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் யவணர்கள் இந்தியாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் குறிப்பிடுகின்றன. காவிரிப் பூம்பட்டினம், மதுரை போன்ற இடங்களில் யவணர்கள் வசித்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன. கி.மு இருபத்து இரண்டிலேயே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கும் யவன அரசர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறத...
More

கிறிஸ்தவ வரலாறு 18 : – இந்தியாவில் கிறிஸ்தவம்

  புனித தோமா இந்தியாவுக்கு வருகை தந்தபோது ஆரம்பித்த கிறிஸ்தவம் இந்தியாவில் தட்சசீலா நகரில் முளைவிட ஆரம்பித்தது. ஆனால் தோமா எதிர்பார்த்தது போல அங்கு கிறிஸ்தவம் வளரவில்லை. காலப்போக்கில் அழிந்து விட்டது. ஆனால் தோமா கேரளாவில் உருவாக்கிய கிறிஸ்தவ அடித்தளம் நிலைபெற்றது. பெருமளவில் பரவாவிடினும் பூர்வீகமாய் கிறிஸ்தவ மதம் அங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. சிரியன் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்த தோமா கிறிஸ்தவர்கள் முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கேரளாவில் உள்ளனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டில...
More

கிறிஸ்தவத்தின் பிரிவுகளும், இயக்கங்களும்

  ரோம சபைக்கு எதிராக ஆங்காங்கே தனித்தனிக் குழுக்கள் ஆரம்பித்த காலகட்டம் பிரிவினையின் ஆரம்பம் எனலாம். போப்பின் ஆளுகைக்கு எதிராகவும், தலைவராக வேண்டும் என்னும் தனி போதகர்களின் ஆசையின் காரணமாகவும் இயக்கங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்தன. துறவற சபைகள் தனியே இயங்கினாலும் அவை ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக இருக்கவில்லை. எனவே ரோம சபை அவர்களை ஆதரித்தது. அதேநேரம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக முளைத்த சபைகளை திருச்சபை வன்மையாகக் கண்டித்தது. அவர்களை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது. அவற்றில் முக்...
More

கிறிஸ்தவ வரலாறு :17 – கிறிஸ்தவத்தில் வன்முறை

  புராட்டஸ்டண்ட் சபையினர் கத்தோலிக்க மதத்துக்கு எதிராகவும் அவர்களுடைய நம்பிக்கைகள் சடங்குகளுக்கு எதிராகவும் பலத்த விமர்சனங்களை எழுப்பினார்கள். அவர்களுடைய எதிர்ப்புகளுக்கு கத்தோலிக்க மதம் கண்டனங்களையும் வேறு பல எதிர் விமர்சனங்களையும் வைத்தது. இதனால் கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமையின்மை நிலவியது. யார் பெரியவன் என்னும் போட்டியாக அது உருவெடுத்தது. கருத்துப் போர்களில் ஆரம்பித்த இந்த சண்டை பின்னர் வன்முறை நோக்கி நகர்ந்தது. ஆங்காங்கே ஏற்பட்ட கலவரங்கள் உலகம் தழுவிய கிறிஸ்தவர்களிடையே பெரும் மோத...
More

கிறிஸ்தவ வரலாறு 16 : – இயேசுவின் அன்னை வணக்கத்துக்குரியவரா ?

  கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பிரிந்து போன சபையினருக்குமிடையே உள்ள மிகப்பெரிய விவாதப் பொருட்களில் ஒன்று அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவரா இல்லையா என்பது. கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை வணக்கத்துக்குரியவராகவும், கடவுளிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தரும் இரு இடை நிலைவாதியாகவும் பார்க்கிறார்கள். பிரிந்து போன சபையினர் அதை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இருவருமே தங்கள் பக்க நியாயங்களை வரிசையாய் அடுக்கி தத்தம் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். புரட்டஸ்டண்ட் பிரிவினர்...
More

கிறிஸ்தவ வரலாறு :15 – புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கம்

  கி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். நல்ல இறை சிந்தனையும், பக்தியும் உடைய லூத்தர் முதலில் நம்பியது துறவறத்தையே. சில காலம் துறவறத்தில் இணைந்து துறவியாகவே வாழ்க்கை நடத்தினார் இவர். தன்னுடைய உயிர்நண்பனின் திடீர் மரணம் தந்த பாதிப்பு இவரை மரணத்தின் மீது பயம் கொள்ள வைத்தது. மரணத்தின் பயத்திலிருந்து எப்படித் தப்புவது ? மரணத்துக்குப் பின் என்ன நிகழும் என்பவை போன்ற சிந்தனைகள் அவரை வாட்டின. எனவே அகஸ்டீனியரின் மடத்தில் சென்று தன்...
More

14. கிறிஸ்தவத்தில் நடந்த மாபெரும் கிளர்ச்சி

  கிறிஸ்தவ மதத்தில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், போப்பிற்கு எதிராகவும் நடந்த கிளர்ச்சியே திருச்சபையின் மிகப்பெரிய கிளர்ச்சி எனலாம். போப்பின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட விருப்பமில்லாதவர்களும், தங்களை தாங்களே ஆளவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்களும், தங்கள் பணம் திருச்சபையின் தலைமை இடத்துக்குச் செல்வதை விரும்பாதவர்களாலும் இந்த கிளர்ச்சி துவங்கப்பட்டது. ஏற்கனவே கிறிஸ்தவத்தில் பல குழுக்களும், துறவறங்களும், தனியுறவுச் சபைகளும் ஆங்காங்கே தோன்றி வளர்ந்தாலும் அவை பெரும்பாலும் கத்தோலிக்க ...
More