எனது நூலுக்கு விருது

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது “இயேசு என்றொரு மனிதர் இருந்தார் “ எனும் நூலை கடந்த ஆண்டின் சிறந்த நூலாக “தென்னிந்தியத் திருச்சபையின் கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் தமிழிசைப்பள்ளி அமைப்பினர் “ தேர்வு செய்து விருது வழங்கினார்கள். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அன்றைய சமூக அரசியல் கலாச்சாரப் பின்னணியில் விவிலிய மொழிக்கு வெளியே விரிவாய் சொன்ன நூல் இது என பல்வேறு தரப்பினரும் மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவளித்தது. இந்த நூலை எழுதுவதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. பை...
More

கிறிஸ்தவம் : ஒரு வரலாற்றுப் பார்வை.

  கிறிஸ்தவ மதம் உருவானது இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்த நிகழ்வுக்குப் பின்பு தான். ஆனால் கிறிஸ்தவ மதம் உள்ளடக்கிய நம்பிக்கைகள் ஆதி மனிதன் ஆதாமின் காலத்திலிருந்து துவங்குகிறது. உல‌க‌த்தைப் ப‌டைத்த‌ க‌ட‌வுள் அவ‌ற்றை ப‌ண்ப‌டுத்த‌வும், ஆள‌வும் ஆதாம் எனும் ம‌னித‌னைப் ப‌டைக்கிறார். ம‌ண்ணிலிருந்து ஆதாமைப் ப‌டைத்து, அவனிடமிருந்து ஏவாள் எனும் பெண்ணைப் ப‌டைக்கிறார். அக்காலத்தில் கடவுள் மனிதர்களோடு நேரடியாக உரையாடி வந்தார். ஆதாமும் ஏவாளும் கடவுளின் தோட்டமான ஏதேன் தோட்டத்தில் சகல வசதிகளோடும் வாழ...
More

கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு. வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட. மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒ...
More

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

இயேசு ஒரு மதத்தலைவர் அல்லர். அவர் எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை. தாம் வாழ்ந்த காலத்தில், தாம் சார்ந்த யூத குலத்து மக்களின் வாழ்வைச் சீரமைக்கும் பணியைத்தான் அவர் இடைவிடாமல் மேற்கொண்டார். ஒரு வகையில் அவர் ஒரு கலகக்காரர். இன்னும் சொல்வதென்றால் புரட்சிக்காரர். மௌடீகங்களும் பூர்ஷ்வாத்தனகம் மேலோங்கியிருந்த சமூகத்தில் அவரது அமைதிக் குரலே அப்படித்தான் ஒலித்தது. அவரது பகுத்தறிவு, காலத்துக்கு ஒவ்வாததாக, குலத் துரோகப் பிரசாரமாகப் பார்க்கப்பட்டது. அவருக்கு எதிர்ப்பாளர்கள் மிகுந்ததும் இறுதியில் மரணதண்ட...
More