மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது

(கவிஞர் கோபால், சேவியர் இருவரும் இணைந்து வாரா வாரம் தொடராய் திண்ணை இணைய இதழில் எழுதிய நெடுங்கவிதை. நன்றி. திண்ணை. 2002 ) பாகம் 1 : சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வாசனைக் காகிதங்கள். பூக்கள் அழகா நாங்கள் அழகா என்று விரலிடுக்கில் சிவப்பு ரோஜாக்களும், கண்களுக்குள் காதல் வேர்களும் வளர்த்து, ...
More

உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

  சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது. இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம். ( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )   1   தலைவனே, உன் இதழ்களுக்குள் நீர் இறுக்கி வைத்திருக்கும் முத்தத்தின் முத்துக்களை என் இதழ்கள் மேல் இறக்கி வைத்து விடுக. உமது காதல், போதையின் படுக்கை, அது திராட்சை இரசத்தின் போதையைக் கடந்தது. உமது பரிமள தைலம் எல்லைகளை வெட்டி ...
More

கதை எழுதும் நேரம்

1 முடியாது என்றால் அதன் அர்த்தம் முடியும் என்று என்றுமே முடிந்ததில்லை... நிமிராமல் எழில் சொன்ன பதில், திமிரால் சொன்னதாய் தோன்றியது தந்தைக்கு. மறுப்புக்குக் காரணம் வெறுப்பா ? மனசுக்குள் மறைந்திருக்கும் ஏதேனும் நெருப்பா ? உனக்கு மனைவியாகும் தகுதி அவளுக்கு இல்லையா ? அவளை உனக்கு மனைவியாக்கும் தகுதி எனக்குத் தான் இல்லையா ? தந்தையின் கேள்விகள் எழிலை எழுந்திருக்க வைத்தன. திருமணம் வேண்டாம் என்றது என் தனிப்பட்ட கருத்து. நெருப்புக்குள் இருந்து கொண்டு என்னால் பட்ட...
More

சதுரங்கக் காதல்

1 வித்யாவா அது ? கண்ணனின் கண்களுக்குள் ஆச்சரியக் கண்வெடிகள் ஆயிரம் ஆயிரம் வெடித்தன. கோடிப் புறாக்கள் கிளறிச் சென்ற தானிய முற்றமாய் காலங்கள் சிதறின. குமரியின் கிராமத்துக் கல்லூரியில் பார்வை எறிந்து எனக்குள் வேர்வைக் கால்வாயை வெட்டிச் சென்றவள். என் கண்ணுக்குள் விழுந்த முதல் காதலுக்கும், என் கன்னத்தைத் தழுவிய முதல் கண்ணீருக்கும் காரணமானவள். ஆறு வருடங்கள் ஆறுபோல் ஓடிக் கடந்தபின், இங்கே அமெரிக்காவின் விமானலையத்தில்! ஆச்சரியம் கனவுகளின் கரைகளை கரையான்களாய் உருமாற...
More

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன்    இது ஒரு அக்மார்க் உண்மைக் கவிதை   காதலுக்கு முன்னுரை தேவையில்லை . சில கதைகள் நிஜம் போன்ற தோற்றமளிக்கும், சில நிஜங்கள் கதை போன்ற தோற்றமளிக்கும்.இது ஒரு நிஜக் காதலின் கவிதை வடிவம். என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை அது நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே கவிதையாய் எழுதி அவனுக்குஅளித்துக் கொண்டிருந்தேன். அந்தக் காதலில் தான் எத்தனை சுவாரஸ்யமான திருப்பங்கள்!. விருப்பங்களின் விளை நிலத்தில் களைகளா, பயிர்களா என்று கணிக்க முடியாமல் தினம் தினம் முளைத்...
More

என்ன செய்யப் போகிறாய்

நம்ப முடியாத ... என்று சொல்வார்களே ! அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது !    1. கீழே தூரத்தில் மேகங்கள் வானத் தடாகத்தின் தலை கீழ் தாமரைகளாய் மிதந்தன. மேலும் கீழும் அசைவதற்கு இசையாத மேக வீரர்களின் அணிவகுப்புக்கிடையே சத்தத்தைத் துரத்தியபடி நின்ற நிலையிலேயே ஓடிக் கொண்டிருந்தது அந்த விமானம். அதிகாலைச் சூரியன் மேகம் துளைத்து மெலெழும்பும் காட்சியை சன்னலோரம் அமர்ந்து ரசித்துச் சிலிர்த்தாள் மலர்விழி. ...
More

சலனம் : கவிதைக் குறு நாவல்.

( கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல கவிஞர்களின் மனம் திறந்த பாராட்டுகளைப் பெற்ற கவிதைக் குறு நாவல் உங்கள் பார்வைக்கு. அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள் )  சலனம் : கவிதைக் குறு நாவல். சலனம் : 1 நம்ப முடியவில்லை விரல்களின் இடையே புகை வழிய இதயம் எரிந்துகொண்டிருந்தது. திருமணம் என்றதும் பதுங்கி இருந்த பயவிதைகள் பட்டென்று முளைத்துவிட்டதாம் மனசு நிறைய காதலித்தாளே மவுனமாய் மனசை பரிசளித்தாளே அவள் பிறப்பித்தவை எல்லாம் போலிகளா ? இல்லை அவள் பிம்பம் கூட அவளுக்கு உரியதில்லை...
More