மோகம் மிச்சமில்லை

மோகத்தின் பானம் ஊற்றிய கோப்பைகளில் காதல் உவமைகள் தெறிக்கின்றன. வாத்சாயன விழிகளோடும் கம்பன் விரல்களோடும் காகிதக் குடுவைகளில் தயாராகின்றன காதல் கவிதைகள். தூரமாய் போன நிலவை எட்டித் தொட கவிதை வாலில் தீ கட்டி நீட்டுகின்றனர் சிலர், தீ நாக்குகளின் வெப்பத்தில் மூச்சு முட்டும் மோகத் திணிப்புகளில் கவிதையை வழிய விடுகின்றனர் சிலர், அசைந்து நடக்கும் அழகையும், பார்வைக்குத் தெரியும் பாதங்களையும் கவிதைச் சமையலறை மிகச் சுவையாய் சமைக்கிறது. காமத்திற்கு ஆயிரம் கோடி விரல்கள...
More

முடிந்து போன துவக்கங்கள்

கடந்த காலத்தில் தோல்விகள் பல, நல்லவேளை வெல்லவில்லை என்று சொல்ல வைக்கின்றன. கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. கிடைக்காத வேலை ஒன்று தந்திருக்கிறது கிடைத்தற்கரிய வேலையை. துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான் தாங்கும் வலிமையை. ஏமாற்றிய நண்பன் பெற்றுத் தந்திருக்கிறான் ஏமாறாத மனதை. தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது அன்பான மனைவியையும் அழகான குழந்தையையும். ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும் கடவுள் இருக்கிறார். ...
More

காதல் ஒரு செருப்பு

எனக்காகவே தயாரானது போல் இருந்தது அந்தச் செருப்பு. அதை என் கால்விரல்கள் கட்டிக் கொண்டு நடக்கும் போதெல்லாம் பயணம் பெருமிதம் தந்தது. சிலர் ஓரக்கண்ணால் பார்த்தனர் சிலர் கிடைக்குமிடம் கேட்டுச் சென்றனர். குதூகலக் காலம் ஓர் நாள் சட்டென்று இடறிய கல்லால் சாலை வழியில் அறுந்து போனது. அறுந்து போன செருப்பு அவஸ்தையாகிப் போனது. கைகளில் எடுக்கலாம் என்றால் நான் இருப்பதாய் நினைத்துக் கொண்ட கெளரவம் தடுத்தது. தரையைத் தேய்த்துத் தேய்த்து நடந்து பார்த்தேன் அது கவன ஈர்ப்பு...
More

காதலின் சுற்றுப்பாதை

பல்லவி. பூவைத் தீண்டும் தென்றல் போலே என்னைத் தீண்டினாய் - நான் தீயைத் தீண்டும் காலம் வேண்டும் என்றா வேண்டினாய் ? காதல் என்னும் சுவாசக் காற்றை நீதான் ஊற்றினாய் - பின் மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை ஏனோ மாற்றினாய் சரணம் 1 முத்தம் மட்டும் கன்னம் தொட்டால் காதல் வாழுமா - நான் நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன் போதல் நியாயமா ? சித்தம் கொண்டு என்னைத் தீண்டு பாவம் நானம்மா - ஓர் யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல் சாபம் ஏனம்மா ? சரணம் 2 வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில் உன்னைக் க...
More

உன் புன்னகை

ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென...
More

சார்பு

நன்றாக இருக்கிறது என்று நிறையவே சாப்பிட்டாய் வாங்கிய சந்தையைச் சொல்லும் வரை. கூந்தலில் சூடிக் கொள்ள தயக்கம் கொள்ளவேயில்லை செடியின் தாய்வீட்டைச் சொல்லும் வரை. இப்போது எல்லாவற்றையும் நிராகரிக்கிறாய். சுவையும் மணமும் உனக்குப் பிடித்தே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாய் மறுக்கிறாய். யார் எழுதியதானாலும் கடைசியில் கைழுத்திடுவது யாரென்பதே முக்கியமுனக்கு. சிரிப்பு தான் வருகிறது சிப்பி பிடிக்காது என்பதற்காய் முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்.
More

அடையாளங்கள்

உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து உன்னைச் சந்திக்கவில்லை தான், தெரிந்திருக்கவில்லை எனக்கு. அடையாளங்களே அவசியமென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு. மெல்லிய புன்னகையில், கண்களில் மிதந்த மனசில், கண்டு கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். இன்னொரு முறை வா. ம‌ன‌தை வாசிக்க‌ ம‌ன‌ம‌ற்ற‌ உன‌க்காய், முகத்தை ...
More

நிராகரிப்பு

வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி. அவ்வப்போது தொலைபேசுகிறாய். சத்தமாக சிரிக்கிறாய் ! எல்லாம் கேட்டுக் கொண்டும் கைகளைக் கட்டிக் கொண்டும் காத்திருக்கிறேன் நான். நீ வெளிவரவுமில்லை என்னை உள்ளே அனுமதிக்கவும் இல்லை. ஏமாற்ற இருளில் ஏறித் திரும்புகிறேன். கதவுகள் இல்லாமல் கட்டியிருக்கலாம் நீ உ...
More

தமிழ் என் காதலி.

மனதைப் பிசையும் சீருடன் அசையும் நடைகள் உனதடி நயமும் உளதடி – அன்பே உனைநான் தமிழெனச் சொல்லவோ ? புரியும் புன்னகை புதிதாய் தோன்றுது, புரியா மெளனம் மரபாய் தெரியுது – கவிதையே உனைநான் தமிழெனக் கொள்ளவோ ? நகைப்பில் நவீனம் பார்வையில் படிமம் விளக்கத் தெரியா விளக்காய் தெரிகிறாய் – புதுமையே உனைநான் தமிழெனில் தவறோ ? உனையே உரைத்து உயிரை நுரைத்து மூச்சு நரைக்க மனதில் கரைக்கிறேன் – வியப்பே உனை நான் தமிழெனில் பிழையோ ? விலக நினைத்தால் அகல மறுத்தாய் விலக்க முடியா நிலையது தந்தாய் ...
More

கவிதை : காதலிப்போர் கவனத்துக்கு…

காதல் தோற்றுப் போனால் தாடி வளர்ப்பதை வழக்கமாக்காதீர், தாடி முளைக்கத் துவங்காத நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக் கூடும். காதலி என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர் வேறு யாருடனோ காஃபி குடிப்பதைக் காண்கையில் சுடச் சுடக் கவிதை எழுதி அழுது விடாதீர்கள் அல்லது குறைந்த பட்சம் எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள். காதல் ஒரு முறைதான் வருமென்று ஒவ்வொரு முறையும் சொல்லித் திரியாதீர்கள், உங்கள் காதலி ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும். உன் பெயரைத்தான் என் மழலைக்குப் போடுவேன் என அடம்...
More