சாலமோனின் நீதிமொழிகள் : 4

  நீ, யார் கடனுக்கோ பொறுப்பேற்றிருந்தாலோ, அன்னியனுக்காய் பிணையாய் நின்றால், அவனை வருந்தி வேண்ட வருந்தாதே. வலைகளில் சிக்கிய மான், புரண்டு படுத்து துயிலாது, பொறியில் சிக்கிய கிளி கண் மூடி கனா காணாது. நீ விடுவிக்கப் படும் வரை போராடு. உன் ஞானம் உன் மேலான இக்கட்டுகளின் கட்டுகளை வெட்டிப் போடும். சோம்பேறிகளாய் சொக்கித் திரியாதீர்கள். தலைவனோ, கண்காணிப்பாளனோ, அதிகாரியோ இல்லாத எறும்புகளை பொறுமையாய் பாருங்கள். கோடையில் சேமிக்கிறது பசியால் வாடையில் உண்க...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 3

அறிவைத் தேடுதலே அறிவு. ஞானம் தேடுதலே உண்மை ஞானம். அதை நீ உயர்வாய் கொள் உன்னை அது உயர்த்தும். வேண்டாமென்போரை அது தீண்டாது. நேரிய பாதை உன்னை இடறாது, ஏனென்றால் உன் நடையில் தெளிவுகள் இருக்கும். சறுக்காத பாதை அது ஏனெனில் நீ வெறுக்காத ஞானம் அது. தீயவர்களோ, தீவினை உண்டு கொடுஞ்செயல் குடித்து இருட்டின் மடியில் குருடாய் கிடக்கிறார்கள். அவர்கள் கண்களை வைகறை உறுத்தும். நல்லோருக்கோ வைகறை மெல்ல மெல்ல விரிந்து நண்பகல் நோக்கி நடக்கும். உன் கோட்டைகளை காவல் செய்வ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 2

    உணவுக்கான ஓடுதலோடு உணர்வுக்கான தேடுதலையும் வளர்த்துக் கொள். மெய்யறிவுக்காய் மன்றாடு. சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வத்தை ஞானம் தோண்டுவதில் நடத்து. அறிவும், ஞானமும் ஆண்டவன் அருள்வதே. மாசற்றோனுக்கான கேடயம் கடவுளே. அவருடைய வரைபடத்தில் வருபவை எல்லாம் நேர்மையின் பாதைகளே. நீதியையும், நேர்மையையும் நீ பற்றிக் கொள். ஞானம் வந்து உன்னைத் தொற்றிக் கொள்ளும். பின், உன் நுண்ணறிவும் மெய்யறிவும், உன் வழியை உருவாக்கும். உன் நிழல் விழும் ஓரமும் ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 1

ஆண்டவன் மீதான அச்சமே, அற்புத ஞானத்தின் ஆரம்பம். பெற்றோரிடம் உள்ளது. அறிவின் முதல் படி. தவறாமல் அதைக் கடைபிடி. அதுவே, உன் தலையை அலங்கரிக்கும் தங்கக் கிரீடம், கழுத்தைத் தழுவும் பவழ மாலை. தீயவர்களின் வார்த்தைகளுக்கு வானவில் போல ஏராளம் வண்ணங்கள். அப்பாவிகளைக் கொள்ளையடிப்பதும், பாதாளச் சமாதிக்குள் வேதாளங்களாய் சுற்றி வருவதும், யாரையேனும் அழித்து அந்த செல்வம் சுருட்டி மிரட்டும் மாளிகை கட்டுவதும், என, கொடியவன் வார்த்தைகளில் இனிப்பு விஷ‌ம் கனியும். நீ, அவர்களோ...
More