“கீர…கீரேய்….”

“கீர…கீரேய்….” தெருவில் ஒலிக்கும் கீரை ஒலிகள் குறைந்து விட்டன. தள்ளு வண்டியில் வரும் தக்காளியும், வேகாத வெயிலில் வரும் வெங்காயமும் அத்தி பூத்தார் போல் ! வாசனை விரித்துத் திரியும் முண்டாசுக் கிழவரின் பழ வண்டி கூட பழைய கதையாய். சர்வமும் ரிலையன்ஸ் பிரஷ்களின் குளிர் சாதனக் கூடுகளில் அடைகாக்கத் துவங்கியபின் பார்க்கிங் மட்டுமே மக்களின் பிரச்சினையாகிப் போனது என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்களோ கூடைத் தலைகளில் கீரை இலைகளில் நேசம் விற்றுத் திரிந்தவர்கள். ஃ
More