TIPS : டெலிபோனிக் இன்டர்வியூ

  செல்போன் இல்லாத மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? யாரைப் பார்த்தாலும்  ஆறாவது விரல் போல கையில் ஒரு செல்போன் இருக்கும். செல்போன் இல்லாத மனிதன் அரைமனிதன் என்று புது மொழி சொல்லலாம். அருகில் இருப்பவர்களுக்கு மௌனத்தைக் கொடுத்துவிட்டு, தொலைவில் இருப்பவர்களோடு தொலைபேசும் கலாச்சாரமே இன்று வளர்ந்து வருகிறது. எனவே போனில் பேசுவதொன்றும் புதிய விஷயமில்லை. அதற்காக போன் இண்டர்வியூவில் எளிதாக ஜெயித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். டெலிபோனிக் இண்டர்வியூ ரொம்பவே நாசூக்கான விஷயம். இதில் கவனிக்க வே...
More

நிலா போரடிக்குது, செவ்வாய் போலாமா ?

ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 ! உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” எ...
More

Working Women – 3 : வர்க் – லைஃப் பேலன்ஸ்…

  “எனக்கு ஏழுமணிக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிடுங்க” தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தமாய்ச் சொல்லி விட்டுப் போன மேனேஜரைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கலைவாணிக்கு. நேற்றும் இப்படித் தான் கடைசி நேரத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது, மண்ணாங்கட்டி இருக்கிறதென்று சொல்லி எல்லா பிளானிலும் மண் அள்ளிப் போட்டு விட்டான். வீட்ல சினிமா டிக்கெட்டோட காத்திருந்த வின்னேஷைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. “ஸோ..… உனக்கு வேலை தான் முக்கியம். டிக்கெட் வாங்கி ...
More

Working Women – 1 : இண்டர்வியூ தயக்கம்

அபினயா உற்சாகமாய் இருந்தாள். கையில் இருந்தது அவளுடைய கனவு நிறுவனத்திலிருந்து வந்திருந்த இண்டர்வியூ கார்ட். இந்த வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும். அவளுடைய மனதில் ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கூடவே உள்ளுக்குள் ஓயாத ஸ்ருதியாய் ஒரு பயமும், திகிலும் கூட அவளை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறாள். வேலை கிடைத்தபாடில்லை. எழுத்துத் தேர்வுகளிலெல்லாம் வ...
More

பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்

உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே இருக்கிறது. நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களை வேலையை விட்டு உதறிக்கொண்டே இருக்கிறது. வீதியில் வேலை தேடுவோர் எண்ணிக...
More

தேர்வு எழுதுகிறீர்களா ?

மார்ச் மாதம் வந்தாலே மாணவ, மாணவியருக்குப் படபடப்பும் கூடவே வந்து தொற்றிக் கொள்கிறது. காரணம் ஆண்டு இறுதித் தேர்வு. மாணவர்கள் கொஞ்சம் சகஜமாய் இருந்தால் கூட பெற்றோரின் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் குதிக்கிறது. கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும், சுற்றுலா, ஷாப்பிங், சொந்த பந்தங்கள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்படும். வாசல் தாண்டுவது கூட ஆயிரம் முறை யோசித்தபின்பே அனுமதிக்கப்படும் எனுமளவில் தேர்வு காலங்கள் குடும்பங்களை தலை கீழாய்ப் புரட்டிப் போட்டு விடுகின்றன. பயத்துக்கான காரணிகளைப் பார்த்தால...
More

நேர்முகத் தேர்வு : TIPS

  நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்...
More

கேம்பஸ் தேர்வு வெறும் கண்துடைப்பா ?

  ஒரு வேலை ! அந்தக் கனவு தான் இளைஞர்களின் முழு முதற் தேடலாக இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவர்களுடைய சிந்தனைகளை "கேம்பஸ் இன்டர்வியூ" ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதை நோக்கிய முயற்சிகளில் அவர்கள் இறங்குகிறார்கள். கேம்பஸ் இன்டர்வியூவுக்காக சில நிறுவனங்கள் வருகின்றன. அவர்களுடைய தேர்வுகளில் வெற்றி பெறும் வேட்கையுடன் மாணவ மாணவியர் தயாராகின்றனர். தேர்வு நடக்கிறது. சிலர் தேர்வு செய்யப்படுகின்றனர். பலர் நிராகரிக்கப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் சில நூறு மாணவ மாணவியருக்கு நிறு...
More

கலாட்டா + கல்வி = கல்லூரி

முதுமைக் காலத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது வாழ்க்கை அனுபவத்தைப் புரட்டிப் பார்க்கும் அனைவருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் மின்னி மறையும் அவர்களுடைய கல்லூரி கால நினைவுகள். அப்படி நினைவுக்கு வரவில்லையேல் ஒன்று அவர்கள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பைப் பெறாதவர்களாய் இருக்க வேண்டும், அல்லது நடந்தவற்றையெல்லாம் மறந்து விடும் நோய் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கல்லூரிக் காலத்தை “கனவுகளை நெஞ்சில் விதைத்து கண்களில் அறுவடை செய்யும் காலம்” என்று சொல்லலாம். சுவாரஸ்யங்கள், சவால்கள், சாதனைகள், வாழ்வு...
More

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !

  பலருக்கும் ஒரு வேலை வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும். வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.  சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ? வேலை கிடைத்ததும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இது தான் ஆரம்பமே. உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிப்பது தான் முக்கியம். புதிதாக வேலைக்குச் சென்றிருக்கும் ...
More