தினத்தந்தி வாரம் 6 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் வைரஸ்கள் மிரட்டலாய் வடிவெடுத்திருக்க இன்னொரு காரணம் அது பரவக்கூடிய வேகம். அல்லது அது பரவலாம் என எதிர்பார்க்கப்படும் வேகம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 17.6 மில்லியன் அமெரிக்கர்கள் சுமார் 8.6 பில்லியன் டாலர்களை மொபைல் வைரஸ், மொபைல் ஏமாற்று அழைப்புகள் போன்றவற்றால் இழந்திருக்கிறார்கள் என்கிறது ட்ரூகாலர் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று. பத்து ஆப்ஸ் களில் ஒன்றில் ஏதோ ஒரு மால்வேர் இருக்கிறது என கடந்த ஆண்டு நடந்த 'சீட்டா மொபைல்' ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதில் அறுபது சதவீதத்துக்கும் மேலானவை...
More

தினத்தந்தி வாரம் 5 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே இப்போதெல்லாம் பல அடுக்கு பாதுகாப்பை கொடுக்கிறார்களே என சிலர் கேட்பதுண்டு. குறிப்பாக பயோமெட்ரிக் அம்சங்களை ஸ்மார்ட் போனில் புகுத்தி, கைரேகையைக் கொண்டு போனை அன்லாக் செய்வது, முகத்தை ஸ்கேன் செய்து அன்லாக் செய்வது இப்படிப்பட்ட அம்சங்களை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் இத்தகைய வெளிப்படையான பாதுகாப்பு அம்சங்கள், மொபைல் தொலைந்து போகாமல் பாதுகாக்கலாமே தவிர அதற்குள் வைரஸ் நுழைவதை தடுப்பதில்லை. மொபைலுக்கு ஆன்டி வைரஸ் தேவையா என்பதைக் குறித்த சர்ச்சை வல்லுநர்களிடை...
More

தினத்தந்தி வாரம் 4 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ? ஒரு எளிய வழி சொல்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களின் பட்டியலுக்கு செட்டிங்ஸ் வழியாகச் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் தரவிறக்கம் செய்யாத ஏதேனும் ஒரு ஆப்ஸ் அதில் இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அது வைரஸின் வேலையாய் இருக்கலாம். நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் எதையும் புதிதாக நிறுவவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட சூழலில் கூட உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உண்டு. அது ...
More

தினத்தந்தி வாரம் 2 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

கம்ப்யூட்டர் வைரஸ் ! எனும் வார்த்தை முதலில் அறிமுகமான காலத்தில் எல்லோரும் பயந்தார்கள். அது கணினியின் கீபோர்ட் வழியாகவும், மானிட்டர் வழியாகவும் மக்களைத் தாக்கும் என நினைத்தார்கள். அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு கீபோர்டைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். ஃப்ளாப்பி டிஸ்கை ஏசி காற்றில் காட்டி விட்டு கணினியில் போடுங்கள் என அறிவுறுத்தியவர்கள் பலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் என்பது மென்பொருள் என்பதும், அது பன்றிக் காய்ச்சல் போல கண், காது, மூக்கு, கைவிரல் வழியே பரவாது என்றும்...
More

ரகசியத்தை விற்கும் வாட்ஸப்.

கடந்த சில மாதங்களாக வாட்ஸப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த ஒரு செய்தி தகவல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. வாட்ஸப் தகவல்களையெல்லாம் ஃபேஸ்புக் எடுத்துக் கொள்ளப் போகிறது எனும் அச்சம். இந்த அச்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் நிறுவனத்தை 2014ல் வாங்கியதில் இருந்தே மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது தான். சமீபத்தில் வாட்ஸப் அதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டது. தன்னை விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்துக்கு தன்னிடமிருக்கும் தகவல்களைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான் அது. இதில் அ...
More

தினத்தந்தி வாரம் 1 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

செல்போன்கள் பேசுவதற்கானவை எனும் காலம் மலையேறிப் போய்விட்டன‌. செல்போனில் பேசவும் செய்யலாம் என்பது தான் இப்போதையை புது மொழி. காரணம் இன்றைய செல்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் எனும் சின்ன எல்லையிலிருந்து கையடக்கக் கணினி எனும் நிலைக்கு இடம்பெயர்ந்தாகி விட்டது. வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யணுமா ? சோபாவில் அமர்ந்து கொண்டே ஷாப்பிங் செய்யணுமா ? செல்போன் பில், எலக்ட்ரிக் பில், கேபிள் டிவி பில் என பில்களையெல்லாம் கட்டி முடிக்கணுமா ? ஊருக்கு போக டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், விமான டிக்கட் ஏதாச்சும் புக்...
More

தேர்வுக்கும், தண்ணீருக்கும் என்ன சம்பந்தம்

நன்றாகத் தேர்வு எழுத என்னென்ன வேண்டும் ? நன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதை எழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ? வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது. தே...
More

Campus Interview : 50 BEST TIPS

கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை. சமீப காலமாக எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு துறை கணினி மென்பொருள் துறை என்பதில் சந்தேகமில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் கணினி மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், கை நிறைய சம்பளமும் சாத்தியம் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி மென்பொருள் துறையை மாணவர்கள் குறி வைக்கின்றார்கள். எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (ஐ.டி) , பி.இ  பி.டெக் போன்றவற்றில் கணினித் துறை சிறப்புப் பிரிவு போன்றவையே கணினி மென்பொருள் நிறுவனத்தினர் குறிவைக்கும் பட்டப் படிப்...
More

டைம் மெஷின் சாத்தியமில்லை !

  நீங்கள் ஹாலிவுட் பட பிரியரென்றால் டைம் டிராவல் பற்றி நல்ல பரிச்சயம் இருக்கும். கால வாகனத்தில் ஏறி பழைய காலத்துக்கோ புதிய காலத்துக்கோ பயணிக்கும் புனைக் கதைகள் தான் இந்த டைம் டிராவல் கதைகள். ஹாலிவுட்டில் படமான அறிவியல் புனைக் கதைகளில் கணிசமானவை இந்த வகைப் படங்களே. பேக் டு த ஃபியூச்சர் போன்ற உலகப் புகழ் படங்கள் பலவும் இதில் அடக்கம். இப்போது அந்த டிரென்ட் தமிழ்த்திரைப்படங்களிலும் புகுந்து கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே. இந்த கால வாகனத்தை உருவாக்குவது நிஜத்தில் ச...
More

சுயமாய் சிந்திக்கும் ரோபோ ! சாத்தியமாகிறான் எந்திரன் ?

  சொன்ன வேலையைச் சமர்த்தாகச் செய்து முடிக்கும் வேலையைத் தான் ரோபோக்கள் செய்து வருகின்றன. உள்ளே இருக்கும் மென்பொருளில் என்ன கட்டளை எழுதப்பட்டிருக்கிறதோ அதையே தான் அவை பின்பற்றுகின்றன. “டிவியைப் போடு” என்று சொன்னால் டிவியை எடுத்துக் கீழே போடும் எந்திரன் ரஜினியைப் போல ! கொடுக்கப்பட்ட சூழல் மாறிப்போனால் ரோபோக்கள் செய்வதறியாமல் குழம்பிப் போகும். அப்படிக் குழம்பிப் போகாமல் இருக்க வேண்டுமானால் ரோபோக்கள் கொஞ்சம் “சுய புத்தி” உடையவர்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் நுட்பத்துக்காகத் தான் வ...
More