ரகசியத்தை விற்கும் வாட்ஸப்.

கடந்த சில மாதங்களாக வாட்ஸப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த ஒரு செய்தி தகவல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. வாட்ஸப் தகவல்களையெல்லாம் ஃபேஸ்புக் எடுத்துக் கொள்ளப் போகிறது எனும் அச்சம். இந்த அச்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் நிறுவனத்தை 2014ல் வாங்கியதில் இருந்தே மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது தான். சமீபத்தில் வாட்ஸப் அதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டது. தன்னை விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்துக்கு தன்னிடமிருக்கும் தகவல்களைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான் அது. இதில் அ...
More

இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம் ஆலோசனை பெற வரும் சில இளம் பெண்கள் தெரிவிப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தெரிவித்தார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ஒரு...
More

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது ! ...
More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

    நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான...
More

அசத்தப் போகும், NFC !

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன ! அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க ...
More

POS ! என்ன ? ஏன் ? எப்படி ?

“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட். மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்...
More

கண்ணோடு காண்பதெல்லாம்…

    சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் ப...
More

அழைக்கும் ஐ.டி ( Malayala Manorama Article )

  ஐடி துறையைப் பற்றி நாள் தோறும் வெளிவரும் செய்திகள் வேலை தேடுபவர்களையும், ஐடி தொடர்பான படிப்புகள் படிப்பவர்களையும் தொடர்ந்து பதட்டமடையச் செய்து கொண்டே இருக்கின்றன. "இந்த நிறுவனத்தில் இருபத்தையாயிரம் பேர் வேலை இழந்தார்கள்", "அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது", "இந்த வருடம் ஐடி துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது" எனும் செய்திகளெல்லாம் கடந்த சில வருடங்களாக மிகவும் சகஜமாகி இருக்கிறது. ஐ.டி படிக்கலாமா ? வேலை கிடைக்குமா ? என்றெல்லாம் மாணவர்களும் பெற்றோர்களும் சந்தேகக் கேள்விகளைக் க...
More

அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

அழைக்கும் ஐடி துறை 1 நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும். "நல்லா இருக்கியாடே... ?" "இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?" வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்...
More