வீட்டில் ஒற்றைக் குழந்தையா ?

  குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள் பல வேளைகளில் குழந்தைகளின் அருமையைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் கடவுளின் குட்டி வடிவம். மகா சக்தியின் மினியேச்சர். அதை கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். "குழந்தைகள் உங்களால் வரவில்லை, உங்கள் மூலமாய் வந்திருக்கிறார்கள்" என்கிறார் கலீல் ஜிப்ரான். அந்தக் குழந்தைகளை மிகச் சரியான வகையில் வளர்க்கும் பொறுப்பு ந...
More

காதலின்றி அமையாது உலகு

காற்றின் இழைகளில் மாலை வெயில் கலந்து வீசிக்கொண்டிருந்த ரம்மியப் பொழுது. மணலில் மெய் பரப்பி, காதலியின் உள்ளங்கையில் உள்ளத்தை வைத்து, அவளுடைய ரேகைகளில்ரயிலோட்டிக் கொண்டிருந்த காதலனிடம் காதலி கேட்டாள். என்னை உனக்கு எவ்ளோ புடிக்கும் ? "நாலு முழம் என அளந்து காட்ட காதலென்ன மல்லிகைச் சரமா ? இல்லை கால் கிலோ என நிறுத்துக் காட்ட காதலென்ன மளிகைச் சாமானா ?" காதலன் ரயிலின் வேகத்தில் கவித்துவம்காட்டினான். 'இருந்தாலும் சொல்லேன்' காதலி சிணுங்கினாள். சாம்ராஜ்யத்தை அசைக்கும் வலிமை காதலியின் சிணுங்கலுக்கு உ...
More

ஆண்மையின் முழுமை பெண்மை.

ஆண்மையின் முழுமை பெண்மை. ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண் ஆணை விடப் பெரியவளல்ல என பறைசாற்றவா ? பெண்கள் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா ? உலகிலிருந்து வர்ணங்களைவெளியேற்றி விட்டால் எப்படி இருக்குமோ அப்படி அழகற்றுப் போய் விடும் மனுக்குலம். நிறங்கள் வற்றிப்போய்விட்ட வானவில் போல ஆகிவிடும் தினசரி வாழ்க்கை. வாழ்க்கையை அழகாக்குவதும், அதைஇனிமையாக்குவதும் பெண்களே ! பெண்மை அழகானது ! உடலில் இருந்து உயிரை எடுத்தால் என்னவாகும் எனும் கேள்வியைக் கேட்டால், "பிணமாவோம்" என்...
More

தந்தையன்பு புனிதமானது

  அன்பு என்பதைப் பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது தாயன்பு தான். சினிமாக்களை எடுத்துக் கொண்டாலும், அங்கே தாயன்பு தான் மிக அதிகமாகப் பேசப்படுகிறது. இலக்கியங்களும் தாயன்பையே முதன்மைப் படுத்துகின்றன. அதனால், தந்தையன்பு பெரும்பாலும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அன்பு என்றாலே அன்னை தான் தந்தை என்பவருக்கு அந்த அளவு அன்பு இல்லை எனும் வாதங்கள் பொய் என்பதை அன்புடைத் தந்தையர் அறிந்தே இருக்கின்றனர். ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! - என...
More

சந்தேகம் வேண்டாம். 

  வசந்திக்கு தூக்கம் வரவில்லை. சில மாதங்களாகவே கணவனின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவது போல அவளுக்குத் தோன்றியது. அடிக்கடி போனை நோண்டுகிறான், யாரிடமோ பேசுகிறான். கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட் மாற்றுகிறான், வீட்டுக்கு லேட்டாக வருகிறான் என பல சந்தேகங்கள். ஆனால் எப்படி அவனிடம் கேட்பது. யோசித்து யோசித்து ஓரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்னிக்கு ராத்திரி அவனோட மொபைலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரவு. கணவன் அருகில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்...
More

நன்றி + பாராட்டு = ஆனந்தம்

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சா, உஷார் ! ஏகப்பட்ட பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் தான் வரும். இதை நான் சொல்லல, கனடாவிலுள்ள பிரபலமான மருத்துவர் பெர்னி கோல்டன் சொல்கிறார். யாரிந்த பெர்னி கோல்டன் ? பல ஆண்டுகளாக தம்பதியருக்கு கவுன்சிலிங் மற்றும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் நல்கி வருபவர். ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் 2000 பேரை வைத்து அவர் ஒரு ஆய்வு நடத்தினார்.  அதில் தெரிய வந்த விஷயம் தான் இது. திருமணமாகி சுமார் 3 ஆண்டுகள் ஆகும் போது தம்பதியருடைய வாழ்க்கையில் அதிகப்ப...
More

தீர்ப்பிடாதீர்கள். 

வசந்திக்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. இப்போதெல்லாம் கணவன் ஒழுங்காகப் பேசுவதில்லையோ, தேவையான அளவு நேரம் செலவிடுவதில்லையோ என மனதுக்குள் ஒரே போராட்டம். "அலுவலகத்தையே கட்டிக் கொண்டு அழுகிறார். அவருக்கு என்னை விட வேலை தான் முக்கியம். என்மீது அன்பே இல்லை "  என்றெல்லாம் மனதுக்குள் போராட்டம். தன்னை அறியாமலேயே இமைகளைப் பிரித்து வெளியே எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே இருந்தாள். மாலையில் கணவன் வரும்போது பேசி விட வேண்டும் என அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. என...
More

தாம்பத்யம் தழைக்கட்டும்

ஒரு பிரபலமான கதை உண்டு. திருமணமான முதல் ஆண்டு எப்போதெல்லாம் தாம்பத்ய உறவு கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் ஒரு மிட்டாயை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். அடுத்த ஆண்டிலிருந்து, எப்போதெல்லாம் அன்னியோன்ய உறவு கொள்கிறீகளோ அப்போதெல்லாம் அதிலிருந்து ஒரு மிட்டாயை வெளியே எடுங்கள். நீங்கள் முதல் ஆண்டில் சேமித்த மிட்டாய்கள், மிச்சமுள்ள அத்தனை வருடங்களிலும் கூட தீர்ந்து போகாது ! வருடங்களின் இடைவெளி, தாம்பத்ய உறவில் உருவாக்கிவிடும் இடைவெளியை இந்தக் கதை நச் என்று சொல்லிச் செல்கிறது. காதலிக்கும் போது கா...
More

குறை சொல்லிட்டே இருக்காதீங்க.

  ஜேக் லேங்க் - 76 வயதான நபர். அவருக்கும் ஜூன் எனும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை நன்றாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது. 56 ஆண்டு கால திருமண வாழ்க்கை. கடந்த மூன்று வாரங்களாக நிலமை சரியில்லை. அவருடைய  மனைவிக்கு அவர் மேல் ஏதோ ஒரு கோபம். வேண்டுமென்றே கணவனை எரிச்சலடையச் செய்து கொண்டே இருந்தாள். "நீ ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்", "வீட்ல ஒரு வேலையும் செய்ய உன்னால இனிமே முடியாது", "நீ ஒரு வேஸ்ட்" என்ற திட்டுகளால் கணவனுக்கு எரிச்சல் மலை போல உயர்ந்து கொண்டே இருந்தது. அன்று நண்பர்களுடன் மதிய உணவருந்...
More

தவறு என்னோடது தான் !

வாசன் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிபவர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு நாள் திடீரென மனைவிக்கு ஒரு போன் கால். "உங்கள் கணவர் பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டில் அடிக்கடி போகிறார். நீங்க ஆபீஸ் போயிடறீங்க. மத்யானம் இவர் வராரு, உங்களுக்குத் தெரியறதில்லை. ஒரு தகவலா சொன்னேன். கவனிச்சுக்கோங்க" சொல்லி விட்டு போனை வைத்து விட்டார் மறு முனை நபர். மனைவியிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் ஆபீஸ் போனார், வீடு வந்தார். எல்லாம் இயல்பாகவே நடந்தன. நான்கைந்து நாட்களுக...
More