காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

    மகிழ்ச்சி !   காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, ...
More

இறை நம்பிக்கை இருக்கட்டும்

இறை நம்பிக்கை இருக்கட்டும்   இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகின்றனர். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கிஅவர்கள் நடக்கிறார்கள். சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டேஇருக்கிறார்கள். சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பயணங்கள் செல்கின்றனர்.சிலருக்கு அவன...
More

குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !

( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை ) நமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன. ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைக...
More

குடும்ப வாழ்க்கை பலவீனமடைகிறதா ?

(தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை) வாழ்க்கை உறவுகளின் மீது கட்டப்பட்ட புனிதமான ஆலயத்தைப் போன்றது. இந்த ஆலயம் சிதிலமடைகையில் மனித மாண்புகளும், வாழ்வின் புரிதல்களும் அர்த்தமிழந்து போகின்றன. உயரிய பண்பாடுகளினாலும், அடர்த்தியான கலாச்சார வாழ்க்கை முறையினாலும் உலகின் கவனத்தைக் கவர்ந்த இந்திய குடும்ப வாழ்க்கை முறை சமீபகாலமாகச் சரிவடையத் துவங்கியிருப்பது குடும்ப உறவு முறையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. பலவீனமான குடும்ப வா...
More

பெண்களும், மன அழுத்தமும்.

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வ...
More

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…

  மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.  குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.  குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்கள...
More

குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் வன்முறை

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் அலசப்பட்டது. உலகெங்கும் பரவலாக வரும் இத்தகைய தகாத உறவ...
More

TIPS : கோபத்தைக் கட்டுப்படுத்த 10 வழிகள்

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில். கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் ...
More

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்

  சமீபத்தில் அமெரிக்க அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டுப் பொருட்களை திரும்ப அனுப்பி விட்டது. இந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதே இந்த முடிவின் காரணமாகும். . நச்சுத்தன்மை அதிகமான வர்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துதல், பென்சில் போன்றவற்றில் குழந்தைகளுக்கு ஊறு விளைவிக்குமளவுக்கு லெட் தன்மை அதிகம் இருத்தல் உட்பட பல்வேறு காரணங்கள் இந்த தடைக்குக் காரணமாக வெளியிடப்பட்டுள்...
More

இந்த உலகம் பெண்களுக்கானதா ?

  "ஏங்க‌, தீபாவ‌ளிக்கு ஒரு டிர‌ஸ் எடுக்க‌ணும் வ‌ரீங்க‌ளா" என்ற‌ ம‌னைவியின் குர‌ல் தான் ஆண்க‌ளை ப‌த‌ற‌டிக்க‌ச் செய்யும் மிக‌ப்பெரிய‌ கேள்விக‌ளில் ஒன்று. அந்த‌க் கேள்விதான் பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு வைக்கும் மிக‌ப்பெரிய‌ டெஸ்ட் என்ப‌தை பெரும்பாலான ஆண்க‌ள் அறிவ‌தில்லை. அப்பாவி போல‌ பிக் ஷாப்ப‌ரைக் கையில் பிடித்துக் கொண்டு பலியிடக் கொண்டு செல்ல‌ப்ப‌டும் ஆட்டைப் போல‌ பின்னாலேயே செல்லும் ஆண்க‌ளுக்காக, க‌ருணை அடிப்ப‌டையில், க‌டைக‌ளில் ஆங்காங்கே ஒன்றிர‌ண்டு இருக்கைக‌ள் இருக்கும். ஆனால் ஒரு காலி இட...
More