உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

  சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது. இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம். ( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )   1   தலைவனே, உன் இதழ்களுக்குள் நீர் இறுக்கி வைத்திருக்கும் முத்தத்தின் முத்துக்களை என் இதழ்கள் மேல் இறக்கி வைத்து விடுக. உமது காதல், போதையின் படுக்கை, அது திராட்சை இரசத்தின் போதையைக் கடந்தது. உமது பரிமள தைலம் எல்லைகளை வெட்டி ...
More