இயேசுவின் வரலாறு 32 : விபச்சாரப் பெண்ணும், பார்வையற்ற மனிதனும்

இயேசுவும் சீடர்களும் எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்கள். அச்சம் கலந்த ஒரு பயணம். துணிச்சல் மிக்க ஒரு பயணம் என்றும் சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எருசலேம் தேவாலய உளவாளிகள் இயேசுவைக் குறித்துச் சொன்ன சேதிகளினால் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் கோபத்திலும், வன்மத்திலும் இருந்த வேளை அது. இயேசு சீடர்களுடன் எருசலேம் நோக்கிப் பயணிக்கிறார். இயேசுவும் சீடர்களும் சமாரியா வழியாக சென்றார்கள். ஒருமுறை மிகவும் நன்றாக இயேசுவை உபசரித்த சமாரியர்கள் இம்முறை அந்த வரவேற்பை நல்கவில்லை. காரணம் இப்போது இயேசுவு...
More

இயேசுவின் வரலாறு 31 : பணி வாழ்வின் இரண்டாம் ஆண்டு

ஏரோதின் கவலை   திருமுழுக்கு யோவானைக் கொலை செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஏரோதியாள் கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் திருமுழுக்கு யோவானின் மரணம் ஒரு தீர்வைத் தரவில்லை, மாறாக அவருடைய சீடர்களும் இயேசுவோடு இணைந்து மிகப்பெரிய கூட்டமாக மாறிவிட்டார்கள். இயேசுவின் போதனைகள் திருமுழுக்கு யோவானின் போதனைகளை விட அதிக வீரியமுள்ளதாக எங்கும் விரைந்து மக்களைத் தீண்டியது. ஏரோதுக்கும் இயேசுவின் திடீர் வளர்ச்சி மிகப்பெரிய கவலையை அளித்தது. இயேசுவைப் பற்றி உளவாளிகள் தினம் தினம் கொண்டு வ...
More

இயேசுவின் வரலாறு 30 : முற்றத்து முல்லைக்கு மணமில்லை

தொடர்ந்து கப்பர்நாகுமிலேயே பணியாற்றி வந்த இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திலும் போதனை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் நகர் வந்தார். வந்து நாசரேத்தில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து செபிக்கத் துவங்கினார். சுற்றிலுமுள்ள ஊர்களிலெல்லாம் அவருடைய போதனைகளும், அவருடைய அறிவுரைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தாலும் சொந்த ஊரில் அவருடைய போதனைகளுக்குச் செல்வாக்கு அதிகமில்லை.சிறுவயது முதலே தம்முடன் உறவாடி, விளையாடி சாதாரணத் தச்சுவேலை செய்து கொண்டிருந்த ஒருவன் திடீரென கடவு...
More

இயேசுவின் வரலாறு 29 : அதிசயங்களின் நாயகன்

விரும்பினால் சுகமாவேன் இன்னொருமுறை இயேசு செபக்கூடங்களில் உரையாற்றியும் பொதுவிடங்களில் போதித்தும் நடந்தபோது துணியால் உடம்பை முழுவதும் போர்த்திய ஒரு மனிதன் அவருடைய காலடியில் மண்டியிட்டான். பின் தன்னுடைய போர்வையை விலக்கினான். அவன் ஒரு தொழுநோயாளி. தொழுநோயாளியைக் கண்டதும் கூட்டம் சட்டென்றி விலகியது. இயேசு கூட்டத்தினரைப் பார்த்தார். அருகில் மண்டியிட்டிருந்த தொழுநோயாளியையும் பார்த்தார். 'ஆண்டவரே... நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்' ஒரே ஒரு வரியில் விண்ணப்பத்தை முடித்துக...
More

இயேசுவின் வரலாறு 28 : இறுதி நாளில் என்ன நடக்கும் ?

இறுதி நாளில் என்ன நடக்கும் ? ஃ 'உலக இறுதி நாளில் என்ன நடக்கும் ?' மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கேள்விக்கு மானிட மகன் இயேசு விளக்கமளித்தார். இறுதிநாளில் வானதூதர்கள் படைசூழ மானிட மகன் மாட்சியுடன் வருவார். அவர் தம்முடைய அரியணையில் கடவுளாக வீற்றிருப்பார். மக்கள் அனைவரும் அவருடைய முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவார்கள். ஒரு ஆயன் தன்னுடைய மந்தையில் உள்ள செம்மரி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் இரண்டாகப் பிரிப்பதைப் போல மானிடமகனும் தன்முன்னால் நிற்கும் மக்களினத்தையும் இரண்டாகப் பிரிப்பார். வலது புறத்த...
More

இயேசுவின் வரலாறு 27 : உயிரூட்டும் சிந்தனைகள்

அயலான் யார் ? ஃ இயேசு வழக்கம் போல மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். மக்கள் அவருடைய போதனைகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இயேசுவின் வார்த்தைகளால் மக்கள் எல்லோரும் அவருடைய பக்கமாகத் திரும்பிக் கொண்டிருப்பது திருச்சட்ட அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் மிகப்பெரிய எரிச்சலாய் இருந்தது. இயேசுவின் செல்வாக்கைக் குறைக்கவேண்டுமென்றால் அவரிடம் சில கடினமானக் கேள்விகளைக் கேட்டு மடக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். திருச்சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்தார். 'போதகரே, முடிவில்லா வாழ்வு பெற ந...
More

இயேசுவின் வரலாறு 30 : ஊதாரி மைந்தன்

இயேசு விளக்கங்கள் எத்தனை கொடுத்தாலும், அவர் பாவிகளோடு பழகுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் மட்டும் நிற்கவேயில்லை. ஏனென்றால் பாவிகள் என்று அழைக்கப்படுபவர்களோடு பழகுவது என்பது கடவுளுக்கு விரோதமான செயல் என்பது அவர்களுடைய பரம்பரை இரத்தத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. அதையும் ஒரு இறைவாக்கினர், தன்னை மானிட மகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பேசுகிறார் என்றால் அது பாவம் என்பதை பரிசேயர், மற்றும் மறைநூல் அறிஞர்களால் தங்கள் மனதிலிருந்து விலக்க முடியவில்லை. இயேசு அவர்களுடைய கேள்விகளை ஒரு அழகிய கதை மூலம் சந்தித்...
More

இயேசுவின் வரலாறு 26 : விதைப்பவன் உவமை

இயேசு தம்முடைய போதனைகள் மக்களைச் சென்றடைவதற்காகவும், மக்களுக்கு அவை மறந்துவிடாமல் இருப்பதற்காகவும் உவமைகள் வழியாகப் போதிப்பது வழக்கம். அவற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்று விதைப்பவன் உவமை. விதைப்பவன் ஒருவன் விதைப்பதற்குரிய விதைகளைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன. இன்னும் சில விதைகள் பாறைநிலத்தில் விழுந்தன. மண்பிடிப்பு ...
More

இயேசுவின் வரலாறு 25 : வலுவான போதனைகள்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே தாயும் சகோதரியும் ஃ இந்த நிகழ்ச்சிக்குப் பின் இயேசுவைக் குறித்த பேச்சுகள் இன்னும் தீவிரமடைந்தன. இயேசுவை ஆதரித்தும் அவருடைய செயலை எதிர்த்தும் மக்களிடையே இருவேறுபட்ட பேச்சுகள் உலவின. இயேசுவின் பாதத்தைத் கண்ணீரால் துடைத்தவன் விபச்சாரத் தொழில் செய்து வந்த பெண். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த, பாவி என்று மக்களால் அழைக்கப்பட்ட பெண் இயேசுவைத் தொட்டாள் என்பதே அவருடைய இறைவாக்கினர் என்னும் அடைமொழிக்கு எதிரானது என்பது ஒரு தரப்பு மக்களின் வாதம். பாவிகளைக் கூட மன்ன...
More

இயேசுவின் வரலாறு 24 : பாதத்தில் கழுவப்பட்ட பாவம்

  சீமோன் என்னும் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். அவர் இயேசுவின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல, சட்டதிட்டங்களின் மேல் சுற்றிக் கிடந்தவர் தான். இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை நேரடியாக சந்தித்து அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இயேசு எல்லா இடங்களிலும் பரிசேயர்களை எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது. இயேசு அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரை எப்படியேனும் சிக்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் ச...
More