இயேசுவின் வரலாறு 42 : உயிர்த்த இயேசுவின் காட்சிகள்

  அந்த நேரத்தில் மகதலா மரியாளும், யாக்கோபின் தாய் மரியாவும், சலோமியுமாக இயேசுவின் கல்லறையருகே வந்தார்கள். அவர்கள் கைகளில் நறுமணப் பொருட்கள். யூத மரபுப்படி கல்லறையிலிருக்கும் உடலில் நறுமணப் பொருட்கள் பூசுவது வழக்கம். 'காவலர்கள் இருப்பார்கள். நாம் கேட்டால் அவர்கள் கல்லைப் புரட்டி நமக்கு உதவுவார்களா ?' என்று உரையாடிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். கல்லறையை நெருங்க நெருங்க அவர்கள் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருக்கிறது ! அவர்கள் கல்லறையை நோக்கி ஓடி...
More

இயேசுவின் வரலாறு 41 : இயேசுவின் மரணமும், உயிர்ப்பும்

* இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார். 'உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்'. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது. 'நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்...
More

இயேசுவின் வரலாறு 40 : பணி வாழ்வுக்குத் தேவை பணிவு

அதே நேரத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக சீயோன் மலை மீதிருந்த ஒரு வீட்டின் மேல் மாடியில் அமர்ந்தார். பெரிய அறை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அசைந்து கொண்டிருந்தது. இந்த இடத்தை தேர்வு செய்ததே ஒரு வியப்பான நிகழ்ச்சி தான். இயேசு தன்னுடைய சீடர்களிடம், நீங்கள் ஊருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒருவர் உங்களுக்கு எதிரே வருவார். அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டில் நீங்களும் சென்று வீட்டு உரிமையாளரிடம், இயேசு தன்னுடைய சீடர்களுடன் அ...
More

இயேசுவின் வரலாறு 39 : சதிக்கு அனுமதி

  நாளை புளியாத அப்பத் திருவிழா ! பாஸ்காவுக்கு முந்திய நாளை புளியாத அப்பத் திருவிழாவாகக் கொண்டாடுவது யூதர்களின் வழக்கம். இன்னும் சில நாட்களில் பாஸ்கா விழா. இஸ்ரயேலர்களின் மிகவும் முக்கியமான விழா. மோசேயின் காலத்தில் எகிப்தில் இஸ்ரயேலர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காக கடவுள் எகிப்தியரின் தலையீற்றுகளை எல்லாம் அழித்தார், ஆனால் இஸ்ரயேலர்களை அவர் அழிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைத் தான் இஸ்ரயேலர்கள் பாஸ்கா என்று பெயரிட்டு அழைத்து விழாவாகக் கொண்டாடி வந்தார்கள். பாஸ்கா விழாவைக் கொ...
More

இயேசுவின் வரலாறு 38 : அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது

அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது ஃ ஆலயத்தின் ஒரு பக்கம் மிகவும் சத்தமாக இருப்பதைக் கவனித்த இயேசு அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொழுகைக்குரிய அந்த தேவாலயம் அன்று சந்தைக்கூடம் போலக் காட்சியளித்தது. பாஸ்கா விழாவில் பலி செலுத்துவது மக்களின் வழக்கம் அதற்கான பலிப்பொருட்கள் எல்லாம் ஆலயத்துக்குள்ளேயே விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு இடத்தில் புறாக்கூடுகள் வரிசையாய் வைக்கப்பட்டிருக்க, புறாவின் எச்சத்தால் அந்த இடம் துர்நாற்றம் வீசியது. அங்கு ம...
More

இயேசுவின் வரலாறு 37 : பத்து கன்னியர் உவமை

மாபெரும் திருமண விருந்து. மணமகன் அழைத்தல் என்பது அந்நாட்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த ஒரு நிகழ்ச்சி. அதன்படி மணமகன் வரும்போது மணமகளின் தோழிகள் சிலர் கைகளில் எரியும் விளக்கை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். இந்தத் திருமண விருந்திற்கும் விளக்கை எடுத்துக் கொண்டு மணமகனை வரவேற்க பத்து தோழியர் அழைக்கப்பட்டிருந்தார்கள். பத்துபேரும் மணமகளின் வீட்டுக்குக் குறித்த நேரத்தில் விளக்குகளோடு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஐந்துபேரிடம் விளக்கிற்குத் தேவையான எண்ணெய் இருக்கவில்லை. போகும் வழியில் ...
More

இயேசுவின் வரலாறு 36 : குருத்தோலை ஞாயிறு

இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான நாள் இது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது இயேசுவுக்கு வயது முப்பத்து மூன்று. இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி இயேசுவை வரவேற்க ஆயத்தமானார்கள். இயேசுவின் புகழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் எருசலேம் வாழ் ஏழை எளிய மக்களிடம் வெகுவாகப் பரவியிருந்தது. பாவிகள், ஏழைகள் என்று யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவரிடமும் அன்புடனும் நேசத்துடனும் பழகுவதிலும், நோயாளிகளை சுகப்படுத்துவதிலும், மக்களுக்குப் போதனைகள் வழங்குவதில...
More

இயேசுவின் வரலாறு 35 : லாசரின் உயிர்ப்பும், சக்கேயுவின் மனமாற்றமும்

இலாசரே... வெளியே வா   இயேசுவுக்கு அழைப்பு வந்தது. பெத்தானியாவிலிருந்த இலாசர் குடும்பத்திலிருந்து. இயேசு எருசலேமுக்குச் சற்றுத் தொலைவில் மக்களோடு அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார் இலாசர் நோய்வாய்ப்பட்டான். இலாசர் நோய்வாய்ப்பட்டதும் சகோதரிகள் இருவரும் மிகவும் மனமுடைந்தனர். தன்னுடைய ஒரே சகோதரனை கடுமையான நோய் தாக்கியிருக்கிறதே என்று கவலையடைந்தார்கள். எப்படியாவது இயேசுவை அழைத்து அவர் மூலம் தன் சகோதரனின் நோயைக் குணமாக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அவர்கள் இயேசுவிடம்...
More

இயேசுவின் வரலாறு 34 : சாதனைகளும், போதனைகளும்

நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.   ஃ இயேசு பெத்தானியாவில் ஒரு தெரு வழியாக சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். பெரும் திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு ஓரத்தில் இரண்டு பார்வையிழந்தவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது தங்களுக்கு அதிக காசு கிடைக்கும் என்ற ஆவலில் சத்தமாகப் பிச்சை கேட்டார்கள். வழக்கத்துக்கு மாறான கூட்டம் என்பதால் அவர்களில் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து ஏன் இவ்வளவு கூட்டம் என்று க...
More

இயேசுவின் வரலாறு 33 : முதலானோர் கடைசியாவர்.

இயேசு ஒரு வீட்டில் பந்தியமர்ந்திருக்கையில் ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் அனைவரையும் திருமண விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்தில் கலந்து கொண்ட இயேசு தன்னுடைய சீடர்களுடன் பந்தியமர்ந்திருந்தார். எல்லோரும் முதலிடத்தைப் பிடிப்பதற்காக ஓடினார்கள், முண்டியடித்தார்கள். முதல் வரிசை நிரம்பிவிட்டது. அந்தக் கூட்டத்தில் இன்னொரு மனிதர் இருந்தார். அவர் முண்டியடித்த அத...
More