புதிய பார்வை இதழில் ‘இயேசுவின் கதை’ விமர்சனம்

இயேசுவின் கதை - கவித்துவம் நிறைந்த மொழி - என்.சொக்கன் சங்க காலத்தில் தொடங்கி, பெரும்பான்மைக் கதைகள் / காவியங்கள் கவிதை நடையிலேயே சொல்லப்பட்டுவந்தபோதும், புதுக்கவிதை என்கிற விஷயம் அறிமுகமானபிறகுதான், கவிதைகளின் நோக்கம் கதை அல்லது சம்பவங்களைச் சொல்வது(மட்டும்)தானா என்கிற சந்தேகம் எழுந்து, இன்றுவரை தீராமலேயே இருக்கிறது. இந்தச் சந்தேகத்தின் நீட்சியாகவே, புதுக் கவிதைகளில் காவியங்கள் எழுதப்படமுடியுமா, எழுதப்படவேண்டுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல சிந்தனையா...
More

இயேசுவின் கதை : 01

  வாசல் மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது. கிறிஸ்தவம், அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அ...
More

இயேசுவின் கதை : 02

அணிந்துரை             மோகன் சி. லாசரஸ், இயேசு விடுவிக்கிறார்.                   "இறவாக் காவியம்" இறைமைந்தன் இயேசுவை மகிமைப் படுத்தும் மறவாக் காவியம். பரமனின் பாதங்களை ஆராதனை செய்ய புதிய மலர் ஒன்று மலர்ந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். மறவேன் என்றும் உன்னை தருவேன் இரட்டிப்பான நன்மை வருவேன் விரைவில் என்றுரைத்த திருக்குமாரன் இயேசுவைக் குறித்து கவிதை தந்த சேவியரை வாழ்த்துகிறேன், இயேசுவின் ஈடில்லா நாமத்தில். பாவியாயினும் படு பாதகனாயினும் பரமனின் போதன...
More

இயேசுவின் கதை : 03

மகனுக்கு ஒரு வாழ்த்து ! தாசையன்      உலகனைத்தும் தனதாக்கிக் கொண்டு ஒப்பற்ற தன்னாத்மா இழந்து போனால் வளமேது நலமேது. இறைமகன் இயேசுவின் வாழ்க்கையையும், நற்செய்தியையும் பாமரருக்கும் புரியும் படி, எளிய நடையில் கவிதை படைத்து வாழ்வு தனை வளமாக்கிடவும் இறை ஒளியைப் பரப்பிடவும் முயன்று வெற்றி பெற்றிருக்கும் என் மகனை வாழ்த்துகிறேன். வளரும் பயிர் முளையிலேயே தெரியும், பயிர் மட்டுமல்ல விளையும் மூளையும் கூட முளையிலேயே தெரிய வரும். இளமையிலேயே பாடக் குறிப்பேடுகளின் பக்கங்களில் கவிதை...
More

இயேசுவின் கதை : 04

இயேசுவின் காலம்... ஓர் வரலாற்றுப் பார்வை  ஸ்டெல்லா       கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்து அதிலுள்ள அனைத்தையும் ஆள்வதற்கான அதிகாரத்தை மனிதனுக்கு அளித்தார். அக்காலத்தில் தேவன் மனிதனோடு உறவாடி அவர்களுடைய துன்ப நேரங்களில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வந்தார். கடவுள் மனிதனோடு தீர்க்கத்தரிசிகள் வழியாக பேசி அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளைக் கட்டளைகளாகக் கொடுத்தார்.  இந்தக் கட்டளைகள் மூலமாக அவர்கள் ஆண்டவனிடத்தில் ஒன்றித்திருக்கவும் நல் வழியில் நடக்கவும் பணித்தார். பல தீர்க்கதரிசிகளும், ...
More

இயேசுவின் கதை : 05

  வாருங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா ? ஆம் என்பது ஆத்திகமா ? இல்லை என்பது நாத்திகமா ? அதோ சிறகடித்துச் சிரிக்கும் சின்னக் குருவியில், அசைவுகளில் அழகூட்டி வாசனையில் வரவேற்கும் வண்ணப்பூக்களின் இதழசைவில், வரிசையாய் மலைகீறி முளைத்திருக்கும் உயர்ந்த மரங்களின் ஒய்யாரச் சரிவில், ஒவ்வோர் அழகும் ஒளிந்திருக்கும் பூமியின் பக்கங்களில் இறைவன் இருக்கிறார். சாலையோர ஏழையின் கைத்தடியாய் நீ உருமாறும் போதும், ஓர் விவசாய நண்பனின் வியர்வைக்கரையில் நீ உனை நனைக்கும் போதும், ...
More

இயேசுவின் கதை : 6

இயேசுவின் பிறப்பு   எல்லா பயணங்களும் ஒரு முதல் புள்ளியின் நீளல்களே. பிறந்தபின் சிறந்தவராவர் மனிதர். பிறப்பே சிறப்பானது இறைமகன் பிறப்பில் தான். கலிலேயாவின் நாசரேத்தில் கன்னியாயிருந்த மரியாளுக்கு கபிரியேல் தூதர் வான் வாழ்த்தொன்றை வழங்கினார். கன்னியான உமக்குள் கடவுள் அவதரிப்பார். மரியாளின் மனதுக்குள் அணையாது எரிந்தது அந்த சம்மனசு சொன்ன சங்கதி. மரியாள் இன்னும் தாயாராக தயாராகவில்லை. ஆண் வாசனை அறியாத என் வாசலுக்குள் ஓர் ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ? இதெப்படிச...
More

இயேசுவின் கதை : 7

    மலைப் பொழிவு   போதனைகள்! அவை வாழ்வின் சுருக்கங்களைச் சலவை செய்யும் சாமர்த்திய சாலிகள். வாழ்வுக்கான போதனைகள் மனசை வளமாக்கும், தடுமாற்றம் விடுத்து தடம் மாற்றச் சொல்லும். இயேசு போதித்தார். அன்றாட வாழ்க்கையை அலசிப் பிழியும் போதனைகள். கழுத்தறுக்கும் ஆயுதப் போதனைகளல்ல அழுக்கறுக்கும் ஆயத்தப் போதனைகள். o மலை மேல் ஒரு நாள் மனுமகன் போதித்தார். அது சட்டங்கள் மேல் ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது. தாழ்வு மன இதயங்களை இழுத்து நிமிர்த்தியது. சோர்வுற்ற சமுதாயத்துக்கு ப...
More

இயேசுவின் கதை 8

     அற்புதங்கள் அற்புதங்களே  இயேசுவின் புதுமைகள். அவை, நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள். விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள். மாந்திரீகத்தின் மந்திரக் கோல் அல்ல இயேசுவின் புதுமைகள், அவை உறுதியை வளர்க்கப் பவனி வந்த அவனியின் ஆச்சரியங்கள். கானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்   முதலவன் செய்த முதல் புதுமை இது. கலிலேயாவில் கானாவூரில் கல்யாணம் ஒன்று கலகலப்பாய் நடந்தது. பிந்தியவர்க்கு பந்தியில் பரிமாற திராட்சை ரசம் இல்லாமல் திருமண வீடு குறையொன்று கண்டத...
More

இயேசுவின் கதை 9

இறைமகனின் விளக்கங்கள்     பணியாளரே துணிவு பெறுங்கள்   சீடர்களுக்கு இயேசு வார்த்தெடுத்த வார்த்தைகளால் வலுவான செய்திகள் சொன்னார். பயணத்தின் ஓரத்தில் பயம் கொள்ளாமலும், வெப்பத்தின் வெப்பத்தில் வெந்துபோகாமலும், மனசை மலையாக்கும் ஒப்பற்ற அறிவுரைகள் அவை. o ஆன்மாவைக் கொல்லும் ஆயுதம் இல்லாதவருக்காய் அஞ்சவேண்டாம். மனிதரின் வாட்கள் உடலோடு மட்டுமே உறவாடும், உடல் வலிக்காய் அஞ்சாதீர்கள். சாவு என்பது சரீரத்தோடு மட்டுமே சம்பந்தப் பட்டதல்ல, மனிதாபிமானம் மரித்துப் போனால்...
More