கவிதை : நிலாச் சாயம்

 இன்னும் வெள்ளை காயாத நிலாச் சாயம் என் மொட்டை மாடி முழுதும். நிலவைத் தின்னும் வேகத்துடன், வானில் வெள்ளை மேகங்கள் வறண்ட நாக்குகளோடு அலைகின்றன. யாரோ இறுகக்கடித்ததால் தான் அந்த நிலவில் கன்னத்தில் கருப்பு பதிந்திருப்பதாய் இறந்து போன ஏதேனும் ஓர் இதிகாசம் எழுதியிருக்கக் கூடும். எதையும் காதில் வாங்காமல், எத்தனை முறை போர்த்தி முடித்தாலும் முரண்டு பிடித்து, புரண்டு படுத்து மேகப் போர்வைக்கு வெளியே நழுவி விழுகிறது அந்த நிலாக் குழந்தை. சூரியனின் சிவப்பு ஒளியை உறிஞ்சி...
More

கலைதல்

காலையில் அங்கே இருந்த நிழல் மாலையில் அங்கே இல்லை. காலையில் மெளனமாய் நின்றிருந்த காற்று இப்போது அவ்விடத்தில் இல்லை. அப்போது பார்த்த ஓரிரு பல்லிகளை இப்போது காணவில்லை காலையில் வீட்டுக்குள் கிடந்த நான்கைந்து துண்டு வெயில்கள் கூட வெளியேறியிருக்கின்றன. ஆனாலும் கதவு திறந்து நுழைகையில் நினைத்துக் கொள்கிறோம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஃ
More

தவறான புரிதல்கள்

மொட்டை மாடியில் தனியே அமர்ந்து நட்சத்திரங்களின் கவியரயரங்கத்தை ரசித்துக் கொண்டிருக்கையில், இருளின் மெளனத்தை காகிதத்துக்குப் புரியும் வகையில் எழுதிக் கொண்டிருக்கையில், தென்னை மரத்தடியில் மாலை வேளையில் தென்னம் பூக்களை நலம் விசாரிக்கையில், புழுதியற்ற காற்றுக்கு புன்னகை கொடுத்துக் கொண்டிருக்கையில் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பாள் எனக்கு கல்யாண வயதாகி விட்டதாய்.
More

மழை நிறுத்தங்கள்

சொல்லாமல் படியேறி வந்த பள்ளித் தோழன் போல, சன்னல் வழியே கதவைத் தட்டியது மழை. வானத்துப் புன்னகையின் ஈர வடிவத்தை இமைகளிலும் இறுக்கிக் கட்டி, அதன் குளிர்க் குழந்தைகளை உள்ளங்கைகளில் ஏந்தி, அதன் சிதறிய முத்தங்களை கன்னக் கோப்பைகளில் சேகரித்து, சிலிர்த்துப் போய்க் கிடந்தேன் மேகம் தன் அவிழ்ந்த சுருக்குப் பையை இறுக்கிக் கட்டும் வரை. கடிகாரம் துரத்த வெளியே வந்தால், தன் புனிதத் தோள்களெங்கும் சாக்கடையைச் சுமந்து கொண்டும், தன் மெல்லிய மேனியை சேறுக்குள் புதைத்த...
More

மிச்சமிருப்பவை

கொதிக்கக் கொதிக்கக் கொட்டும் சூரிய பானத்தை நிலாக் கோப்பை குளிர வைத்துப் பரிமாறும். நிலவும் சூரியனும் இன்னும் அயல் தேசக் காப்புரிமைக்குள் அடைக்கப்படவில்லை. தொட்டு விட இயலாத தூரப் புள்ளிகளை பூமி நட்சத்திரமென்று பெயரிட்டு உலகுக்கெல்லாம் உரிமையாக்கும். மிதக்கும் கட்டிடங்கள் இப்போதைக்கு சாத்தியமில்லாமல் போனதால் தூரவானம் இன்னும் கம்பி வேலிகளுக்குள் கட்டப்படவில்லை. துருவப் பனி எப்போதும் தீர்ந்து போகாது என்பதால் யாரும் வெட்டி எடுத்துச் செல்வதில் வெட்டுக் குத்து நடப்பதில்லை....
More

இலையுதிர்க் காலம்.

இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்தி சிரிக்கும் வர்ணங்களின் மாதம். காற்றில் சூரியனின் வெப்பம் நகர ஓராயிரம் குளிர்வேகத் தடைகள் உருவாகும். குளிரில் நடுங்கிக் கொண்டே, வெப்பம் இழந்த வெயிலை இழுத்துக் கொண்டே, முகிலிடை ஓடுவான் ஆதவன். இலைகளுக்கு இது குளிர் முத்தக் காலம். வெயில் காலம் மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது, இப்போது மரங்கள் திருவிழா கொ...
More

பூக்கள் பேசுவதில்லையா ?

நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக்கிச் செல்லும். வருட வரும் வண்ணத்துப் பூச்சியும் மகரந்தம் திருடித் திரும்பும். என்னை உச்சி மோந்துச் சிரிப்பாள் இல்லத்தரசி, ஆனாலும் அவள் இப்போது மிதித்து நிற்பது நேற்றைய ஒரு மலரைத்தான். எனக்குப் பிடிக்கவில்லை இந்த வாழ்க்கை. தீய்க்குள் புதைக்கப்பட்ட மெழுகு ...
More

மழை

மெல்ல மெல்ல மனக்கேணியில் தெறித்துச் சிதறுகின்றன‌ நீர் முத்துக்கள். வெளியே மழை. மண்ணோடு ஏதோ சொல்ல மரண வேகத்தில் பாய்கிறது மேகம். மழை. இயற்கை செடிகளுக்கு அனுப்பும் பச்சையப் பராமரிப்பாளன். சாலைகளுக்கோ அவன் சலுகைச் சலவையாளன். வாருங்கள், குடைகளுக்குள் நனைந்து போதும் தண்ணீரால் தலைதுவட்டிக் கொள்ளலாம். பாருங்கள், அந்த வரப்பின் கள்ளிகள் கூட கண்திறந்து குளிக்கின்றன. சின்னச் சின்ன சிப்பிகள் கூட வாய் திறந்து குடிக்கின்றன. பூக்கள் செல்லமாய் முகம் கழுவிக் கொள்கின்றன. ...
More

நிஜம்

மேற்கு வானம் மஞ்சள் பூசியதால் குளிராடை போர்த்தி வெப்பம் குறைந்த காற்றுடன் குசலம் விசாாிக்கும் தெப்பம் அல்லி பிணைத்த தாமரை விலக்கி வெள்ளிப் பாதத் துடுப்புடன் வெள்ளை வாத்துக் கூட்டம் சலனத் தாமரையாய் தங்க நீாில் மிதந்து களிக்கும். அக்கரையின் காற்றில் விரவி தாழக் கரையில் தவழ்ந்து வரும் தாழம்பூ வாசம் வண்ணத்துப் பூச்சிகளைக் கொஞ்சம் வம்புக்கிழுக்கும். பச்சை கொட்டிய வளைகொண்ட வயலின் வரப்புகளில் நதியோர நண்டுகள் வந்து சுதியோடு நடை பயிலும். மஞ்சள் பூசிய மினுமினுப்பில் பத்த...
More

ஒற்றைக்காலில் ஒரு தவம்.

அந்த பருத்தி வண்ண பட்டுக் கொக்கு ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி, வயிற்றுத் தவம் இருக்கிறது. நீளமான அலகுகளை அவ்வப்போது நீாில் அலசி, கண்கள் இரண்டை தண்ணீாில் நீந்தவிட்டு நல்ல மீன் நகர்ந்து வரட்டுமென்று நாக்கை ஈரப்படுத்தி காத்திருக்கிறது. வெள்ளிச் சிமிழ்களை விளக்கி விட்டது போல் சின்னச் சின்ன மீன்கள் மெல்ல கொக்கின் கால்களைக் கொத்திக் கொத்திக் கடந்து போனது. கிளிகள் அமர்ந்த கிளைகள் மகிழ்ச்சியில் கிள்ளி விட்ட சில வெள்ளைப்பூக்கள் ஓடை நீாின் முதுகில் அமர்ந்து குதிரைச் ...
More