வர்தா புயல்

மாநகரத்தின் மூலைகளெங்கும் மல்லாந்து கிடக்கின்றன‌ மரங்கள். பருவப் பெண்ணின் நாணம் போல‌ விழி கவிழ்ந்து நிற்கின்றன விளக்குக் கம்பங்கள். கால் நூற்றாண்டு ஆலமரங்களெல்லாம் வேர்களை விளம்பரத்திக் கொண்டு வீதிகளில் புரண்டு படுத்தன. சிரச்சேதம் செய்யப்பட்ட‌ வனமாய், மொட்டையடிக்கப் பட்ட‌ பொட்டல்காடாய் நிர்வாணியானது சென்னை. காட்டைப் பார்க்காத‌ தடுப்பூசி விலங்குகளெல்லாம் வண்டலூர் கூண்டுகளில் நடுங்கியே செத்தன. பர்தா போட்ட‌ பருவப் புயலாய் வர்தா வந்து வாரிப் போனது ! சென்னை வந...
More

Poem : மௌனத்தின் வசீகரம்

உறக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலையின் புனிதமாய் இருக்கிறது பூக்களில் உறங்கும் மெளனம். இதழ்களின் இடுக்கில் இரவில் இளைப்பாறிய இருள் புறப்படுகையில் பரிசளித்துச் சென்ற பனித்துளியில் கலையாமலும், மகரந்தச் சலங்கை கட்டி பூச்சிகள் அரங்கேற்றம் நடத்தும் சிறகு நாட்டியத்தில் சிதையாமலும், காலைத் தென்றல் குளிர் சுருட்டி காது குடைகையில் கலையாமலும் இன்னும் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கிடக்கிறது மெளனம் ஓர் சத்தத்தின் முத்தத்தால் எழுப்பி விடும் வேகத்தில் தடதடத்து தோற்கிறது தொலை தூர...
More

Poem : உயிர் உலவும் பூமி

இனிமேலும் நடந்து பயனில்லையென‌ கூடுகளில் சோம்பிக் கிடந்தன‌ விலங்குகள். அதிகபட்ச பறத்தலின் தூரம் பத்தடியென சிறகுகளைச் சுருட்டி வைத்து சும்மா கிடந்தன பறவைகள். காட்டுக்கு ராஜா கூட்டுக்குள் மண்புழுவைப் போல மடங்கிக் கிடந்தது. மகளின் விரல் பிடித்து அனைத்தையும் கடந்து முடிக்கையில் காலத்தின் காலடியில் காலொடிந்து கிடந்தது யதார்த்தம். எந்த விலங்கு புடிச்சிருக்கு உனக்கு ? மகளின் செவியருகே செல்லமாய்க் கேட்டேன். ஊர்ல‌ ஓடித்திரியற ஆட்டுக்குட்டிப்பா என்றாள் சற்றும் யோசிக்க...
More

கொமோடோ டிராகன்

  ஃ ஐயோ இதென்ன கொடிய விலங்கு என்று இதை முதலில் பார்த்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். ஐரோப்பாவில் 1910ம் ஆண்டு இந்த டிராகன் டாக்குமெண்டரியானது. இந்த செய்திப் படம் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வியப்புக்குள் தள்ளியது. இது கண்டுபிடிக்கப் பட்டது கொமோடோ எனும் தீவில். அதனால் தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது என்பது பெயர் புராணம். இந்தத் தீவு இந்தோனேஷியாவிலுள்ள 17508 தீவுகளில் ஒன்று. சுமார் 390 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அதன் பின் பலர் கொமோடோ தீவுக்கு ஓடினார்கள். ...
More

விடுபடா மர்மம்

  எட்வர்ட் லீட்ஸ்கால்னின் ஐந்து அடி உயரமும், வெறும் நாற்பத்து ஐந்து கிலோ எடையுமுள்ள மெல்லிய மனிதர். ஆனால் அவருக்குள் டன் டன்னாய் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. தனது 25வது வயதில் பட்டாம் பூச்சிக் கனவுகளுடன் பதினாறு வயதான ஆக்னஸ் எனும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பாவம், திருமணத்துக்கு முந்தின நாள் ராத்திரி “மாப்பிள்ளை புடிக்கலை” என்று சொல்லி பெண் எஸ்கேப். எட்வர்ட் மனசில் அந்த தேவதை சிறகடித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் அ...
More

மலைகளுக்கு மாலையிடு.

மலைகளுக்கு மாலையிடு. மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள்உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல் இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு மிர்த்தி ற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் ...
More

சன்னலுக்கு வெளியே கவிதைகள்

சன்னலோர ரயில் பயணம் ரம்மியமானது. தண்டவாளத்தில் நீச்சலடித்து முன்னேறும் ரயிலும், பின்னோக்கிப் பாயும் இயற்கையும், அருகிருக்கும் தண்டவாளத்தின் மேலமர்ந்து கூடவே ஓடிவரும் வெளிச்சமும், பொத்தாம் பொதுவாக கையாட்டிச் சிரிக்கும் குதூகலக் குழந்தைகளும், தூரத்துக் குளத்தில் வெட்கத்தை அலசிக் காயப்போடும் கிராமக் குயில்களும், ரயில்வே கேட்டில் பரபரப்புகளுடன் பார்த்திருக்கும் வாகனக் குரல்களும், வெளியே விரிந்திருக்கும் புத்தகம், யதார்த்தத் திரைப்படம்… என சன்னலோர ரயில் பயணம் ரம...
More

செம்பருத்தி

கிரிக்கெட் சிறுவர்களின் தெருவில் பதை பதைப்போடு நின்றிருக்கும் செம்பருத்திப் பூக்கள்   2   எல்லை ஃ பேருந்தில் ஏறி சில்லறையில்லாமல் இறங்கும் முதியவரை இருப்பது போதாதென்று நிராகரித்து நகரும் நகரத்து ஆட்டோக்கள்
More

கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…

மவுனம் எனக்குப் பிடிக்கும். நகரத்து நெரிசல்களில் நசுங்கி மொட்டை மாடியில் இளைப்பாறும் மாலை நேரத்தில் இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும். வண்ணத்துப் பூச்சி பூவின் வாசல்திறக்கும் அழகை விழிகள் விரியப் பார்க்கும் போதும மாவிலையின் முதுகெலும்பில் நழுவிவரும் மழைத்துளி மண்ணின் மார்பை முத்தமிடப்போகும் சில்லென்ற நிமிடங்களிலும சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருக்கும் மாலை மஞ்சளின் மரண நிமிடங்களை மலையுச்சியின் மரத்தடியில் மனம் கலைய இரசிக்கும் போதும இனங்காண இயலாத பறவையொன்று சிறகடி...
More

கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

  மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல்  இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் உறங்கியே கிடக்கிற...
More