கபாலி திரை விமர்சனம்

கபாலி மகிழ்ச்சி. இப்படித் தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது கபாலி படத்தைப் பற்றி எழுத நினைக்கும் போது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. ஹாலிவுட்டின் டாப் டென் திரைப்படங்களின் பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்கும் திரைப்படம் காட்ஃபாதர். அந்த திரைப்படத்தின் சாயலிலும், பாதிப்பிலும் ஏராளம் தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் எந்தப் படமுமே அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தையோ, அதன் உருவாக்கத்தையோ பிரதியெடுப்பதில் வெற்றியடைந்ததில்லை. எனது பார்வையில் முதல் வெற்றியை...
More

பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை வியப்பூட்டும் வரலாற்றுச் சின்னம் ஃ இந்த முறை விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றிருந்த போது எங்கள் ஊருக்கு அருகிலே உள்ள பத்மநாமபுரம் அரண்மனைக்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அந்த அரண்மனை. பலமுறை பார்த்த இடம் என்றாலும் இன்னும் கம்பீரம் குறையாமல் கேரள அழகு மிளிர வசீகரிக்கிறது பத்மநாபபுரம் அரண்மனை. கிபி 1592 முதல் 1609 வரை திருவிதாங்கோட்டை ஆட்சி செய்த இரவி வர்...
More

பெண்கள் மீதான வன்முறை

பெண்ணே நீ - இதழில் வெளியான எனது கட்டுரை... 0  பெண்களின் முன்னேற்றம் இன்று பல துறைகளில் வளர்ந்து வருகிறது என்பதை ஆனந்தத்துடன் ஒத்துக் கொள்ளும் நாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தீரவில்லை என்பதை அவமானத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்று நம்பச் செய்வது கூட ஒரு வகையில் ஆணாதிக்கச் சிந்தனையின் தப்பித்தல் வார்த்தைகளே. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பெண்கள் ஆண்கள் அளவுக...
More

கிரிக்கெட் வரலாறு

( 2006 தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)  ஃ நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது. பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் வ...
More

விளையும் பயிர் முளையிலே கருகும்

( தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை ) 2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்...
More

உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்

 (தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)  துருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மாத மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் ! காரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர் கணித்துச் சொன்னது தான். பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழகத்திலேயே நிகழ்ந்துள்ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடை...
More

வரலாறாய் வாழ்பவர்

(தமிழ் ஓசை செய்தித்தாளில் வெளியான எனது கட்டுரை) . வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர். 1891 ஏப்பிரல் 14ம் நாள் ராணுவ வீரராய் இருந்த ராம்ஜிக்கும், பீமாபாய் க்கும் மகனாகப் பிறந்தார் அம்பேத்கார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளம...
More

கட்டுரை : பட்டினியை நோக்கி உலகம் !

( இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) பட்டினியின் கரங்களுக்குள் உலகம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் விலைவாசி ஏற்றம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வரலாறு காணாத இந்த சர்வதேச அச்சுறுத்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் அத்தனை தெருக்களிலும் எதிரொலிக்கிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உணவுத் தேவை அதிகரித்திருப்பதையும், தாவர எரிவாயு உற்பத்தியையும், இயற்கைச் சீற்றங்களையும், பருவநிலை மாற்றங்களையும், விளை நிலங்களின் அழிவையும் இந்த விலையேற்றத்தின...
More

உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட்

எல் காஸ்டிலோ பிரமிட் என அழைக்கப்படும் இது உண்மையில் படிக்கட்டுகளால் அமைந்த பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டையாகும். இது மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோட்டையை மாயன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் கட்டினர். மீசோ அமெரிக்கக் கலாச்சாரப்படி பழைய பிரமிடின் மேல் புதிய பிரமிடு ஒன்றைக் கட்டுவது வழக்கம். அதன் சாட்சியாக நிற்கிறது இந்த பிரமிட். கம்பீரமான இந்த ஆலயத்தின் மேலேறினால் இன்றைய உலகம் உற்சாகக் காற்று வீசி வரவேற்கிறது. நாலா பக்கமும் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன...
More

தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்” இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ? ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை ! இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர். இப்படிச் சாவது ...
More