டிரம்பின் கொள்கைகளும், இந்திய ஐடி துறையும்

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சி கண்டதிலிருந்தே நிலமைகள் மாறத் துவங்கி விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவில் பல இடங்களில் தலைவிரித்து ஆடியது. கடன் சுமையைத் தாங்காமல் மக்கள் தற்கொலை செய்த நிகழ்வுகள் கூட நடந்தன. ஆனால் நமது இந்திய ஐடி துறை வல்லுனர்களை இந்த மாற்றம் பாதிக்கவில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கு படையெடுப்பதும், அங்கே வசதியாக வாழ்வதும், வீடுகளை வாங்குவதும் என தங்கள் வாழ்க்கைத் தரத்தை அமெரிக்கர்களை விட மேலாக அமைத்துக் கொண்டனர். இவையெல்லாம் அமெரிக்கர்க...
More

செங்கடலாகுமா கருங்கடல்

செங்கடலாகுமா கருங்கடல் கருங்கடல் உலக மேப்பில்  முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் கடல். சுற்றுலாத்தலம், கப்பல்களின் வழிப்பாதை, ஆழ்கடல் குழாய்கள், எண்ணெய் வளம், எரிவாயு வளம், போர்க் கப்பல்களின் தளம் இத்யாதி.. இத்யாதி என பல்வேறு முகங்கள் இதற்கு உண்டு. உலகின் நாடுகளெல்லாம் இப்போது கருங்கடலின் மீது இருக்கும் கண்களையெல்லாம் வைத்திருக்கின்றன. விஷயம் அங்கே கிடைக்கும் எண்ணை வளம். ஏற்கனவே கருங்கடலின் அடிப்பாகத்தில் பல நாடுகளையும் இணைக்கும் எரிவாயு, எண்ணைக் குழாய்கள் இருக்கின்றன. ரஷ்யா, இங்கில...
More

கொடுமைக்காரன் : போல் போட் (Pol Pot )

  ஹீரோக்களை மட்டுமல்ல வில்லன்களையும் வரலாறு மறக்காது என்பதன் உதாரணம் போல் போட். 1928 ஆண்டு மேய் மாதம் கம்போடியத் தலைநகர் ப்னம் பா வுக்கு 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே, புத்தமதமும், மேலை நாட்டுக் கலாச்சாரங்களும், கம்யூனிசமும் அவருக்கு அறிமுகமானது. 1949ல் பாரீசிற்குப் படிக்கச் சென்றார். அங்கே அவர் கற்ற கம்யூனிசக் கொள்கைகள் அவரை அரசியலுக்குள் தீவிரமாய் இழுத்தது. 1953ல் கம்போடியா பிரஞ்ச் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது கம்போடிய மன்னன் நோரோடோம் சிகானக் பத...
More

அதிபயங்கர வில்லன், அந்திரேய் சிக்காட்டிலோ .

    1936ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் ரஷ்யாவின் எல்லையிலுள்ள உக்ரைனில் பிறந்தார் அந்திரேய் சிக்காட்டிலோ. இவர் பிறந்தபோது வரலாற்றில் அவருக்கு கொடூர வில்லன் பெயர் கிடைக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைச் சூழலும், தாழ்வு மனப்பான்மையும் அவரை மகா வில்லனாக்கிவிட்டது. பதின் வயதை எட்டியபோது தனக்கு ஆண்மையில்லையோ எனும் சந்தேகம் அவனுக்குள் நுழைந்தது. அந்த பயமோ, ஆவேசமோ அவனுடைய செக்ஸ் குற்றங்களைத் துவக்கி வைத்தது. ஒன்பது வயதான ஒரு சிறுமியை தனது பதினைந்தாவது வயதில் பாலிய...
More

உலகின் மிகச் சிறிய போர்

  உலக வரலாற்றிலேயே மிகச் சிறிய போர் 1896ல் நடந்த ஆங்கிலோ ஸான்ஸிபர் (Anglo-Zanzibar) போர் தான். யூ.கேவுக்கும் ஸான்சிலருக்கும் இடையே நடந்த இந்தப் போர் ஜஸ்ட் 38 நிமிடங்களில் கதம் கதம் ! இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு தான் இந்த ஸான்ஸிபர். ஒரு காலத்தில் ஓமன் நாட்டு சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஓமனிடமிருந்து ஓடி சுதந்திர நாடு என பிரகடனப்படுத்திக் கொண்டது. “ஆமா, ஆமா நீ தனி நாடு தான் ஜமாய் “ என பிரிட்டன் சைடு சப்போர்ட் வழங்கியது. சப்போர்ட் பண்ணினவன் சும்மா இருப்பா...
More

போர்க்கைதிகளின் பரிதாப நிலை

  போரில் பிடிபடுபவர்களின் நிலமை அதோ கதி தான் என்கிறது வரலாறு. மாட்டும் முன் உயிர் போய்விட்டால் அது போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் குற்றுயிரும் குலை உயிருமாக துடி துடிக்க வேண்டியது தான்.  சில திடுக்கிடும் கதைகள் இங்கே…நமக்கெல்லாம் தெரிந்த ஒரு போர்க்குற்றத்தை நான் தவிர்த்திருக்கிறேன். நடுங்கும் விரல்களை நிறுத்த முடியவில்லை. ஜெர்மன் நாசி போர்க்கைதிகளின் மீது ஜெர்மன் நாசிகள் சகட்டு மேனிக்கு சோதனைகள் செய்தார்கள். இரண்டாம் உலகப் போர...
More

கண்ணி வெடி வெச்சிருக்கேன்…

எதிரிகள் நுழைவார்கள் என சந்தேகிக்கும் இடங்களிலெல்லாம் கண்ணி வெடிகள் புதைத்து வைப்பது போர்கால வழக்கம். விஷயம் தெரியாமல் வருபவர்கள் வெடியில் மிதித்தால் நொடியில் மரணம். ஆனால் என்ன, போர்கள் முடிந்தபின் யார் எங்கே கண்ணி வெடி வைத்தது என்பதே தெரியாது. இதனால் சும்மா கிழங்கு பிடுங்க போகும் மக்களைக் கூட கண்ணி வெடி காலி செய்து விடும். வைத்த வெடிகளையெல்லாம் அப்படியே திரும்ப எடுப்பது என்பது சாத்தியமில்லாத சங்கதி. “கடைசியில் வேலில போறதை எடுத்து…” கணக்கா உள்ளுக்குள்ளே குடைச்சல் கொடுக்கும் விஷயமாகி விடும். ...
More

ஹிரோஷிமா : குண்டு விழுந்ததும்…. வெகுண்டு எழுந்ததும்… !

  அணுகுண்டு எனும் வார்த்தையைக் கேட்டாலே நினைவுக்குள் புரளும் இரண்டு வார்த்தைகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. உலகின் மாபெரும் துயரத் துளியாக அந்த நிகழ்வு வரலாற்றில் உறைகிறது. குண்டு போட்டால் கூட வெகுண்டு எழுவோம் என்பதற்கு அவற்றின் அதிரடி வளர்ச்சியே சான்றாய் இருக்கிறது. ஹிரோஷிமா எதை வேண்டுமானாலும் மறக்கும் ஆனால் 1945, ஆகஸ்ட் 6ம் தியதியை மறக்கவே மறக்காது. உலகிலேயே முதல் முறையாக என்பது ரசிக்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை. முதல் அணுகுண்டு அந்த நாட்டின் தலையில் போடப்பட்டது. ச...
More

வான்கோ : ஒரு தூரிகையின் துயரம்

  வான்கோ என்றால் யார் என்று ஓவிய உலகில் யாருமே கேட்க மாட்டார்கள். உலகத்தையே புரட்டிப் போட்ட வல்லமையுள்ள தூரிகை அவரிடம் இருந்தது. 1853 மார்ச் 30ம் தியதி பிறந்த இவர்தான் இன்றைக்கும் மாடர்ன் ஓவியங்களின் மன்னன். வாழ்ந்த காலத்தில் அப்படியொன்றும் பெரிய புகழைப் பெறவில்லை வான்கோ. ஆனால் மரணத்துக்குப் பிறகு அவருடைய ஓவியங்களெல்லாம் மில்லியன்களை வாங்கிக் குவித்தன. அவர் ஒரு மன நோயாளி என்பது தான் பலருக்கும் தெரியாத உண்மை. குழப்பம், தனிமை, சைக்கோத்தனம் என அவருக்குள் ஓடிய உணர்ச்சிகள் எக்கச் சக்கம். அவ...
More

போதை தாதாக்கள்

போதை தாதாக்கள் உலகுக்குப் போதை சப்ளை செய்வது மிகப் பெரிய தொழில். ஒரு பெரிய கார்ப்பரேட் போல இயங்கும். ஆனால் எங்கே நடக்கிறது எப்படி நடக்கிறது என்பது பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொரு வினாடியும் நம்மைச் சுற்றி முகமற்ற நிழல் போல இந்த பிஸினஸ் நடக்கும். அதனால் தான் இதை நிழல் உலகம் என்கிறார்கள். இந்த போதை பிஸினஸில் உலகைக் கலக்கிய கில்லாடிகளில் சிலர்…   பாப்லோ எமிலியோ எஸ்கோபர் கேவ்ரியா (Pablo Escobar) தாதாக்களின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார...
More