அன்னை 14 : ஏழையோடு ஏழையாய்

மருந்தகம். அதுதான் அன்னையின் அடுத்த சிந்தனையாய் இருந்தது. ஒரு அறை பள்ளிக்கூடம், அது சரியாகிவிட்டது. இப்போது அன்னை இரண்டாவது அறையை மருந்தகமாக்குவதற்குரிய முயற்சிகளில் இறங்கினார். மருந்தக கடைகள் வைத்திருப்பவர்களைச் சென்று சந்தித்தாள். சேரிக்குள் ஒரு இலவச மருந்தகம் வைக்கப்போவதைச் சொல்லி உபரியாய் இருக்கும் மருந்துகளைக் கேட்டாள். பலர் அன்னையை வினோதமாய் பார்த்தார்கள். என்னென்ன பிச்சை கேட்பது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது என பலர் முணுமுணுத்தனர். ஆனால் சிலர் அன்னையின் நல்ல உள்ளத்தைப் ...
More

அன்னை 13 : பள்ளிக்கூடத்தின் வளர்ச்சி

பள்ளிக்கூடத்தின் வளர்ச்சி   தனியே பணி செய்ய அனுமதி வழங்கிய போப் கூடவே ஒரு செய்தியையும் இணைத்திருந்தார். அதாவது, ஓராண்டு காலம் மட்டும் அன்னை தனியே பணிசெய்யலாம். அதன் பின் அந்த பணி குறித்த விவரங்களையும், அதன் பயன்களையும், அதன் சமூக ஆன்மீக தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பணி தொடரலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு பேராயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்பதே அந்த செய்தி. ஒரு ஆண்டிற்குப் பின் இந்த பணியின் முடிவு பேராயரிடம் இருக்கிறது. பேராயர் சரி என்றால் இந்தப் பணி தொடரும், வேண்டா...
More

அன்னை 12 : முதல் பள்ளிக்கூடம்

தலைவியிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்த்தவருக்கு வியப்பை அளிப்பதாய் வந்தது பதில். “அழைத்துப் போகலாமே ! தெரேசா திறமைசாலி. விவேகம் உடையவர். முக்கியமாக இறைவன் அவரோடு இருக்கிறார். அவள் எப்போதுமே தவறு செய்ய வாய்ப்பே இல்லை” தந்தை வியப்புக் கடலில் விழுந்தார். எல்லாம் இறைவனின் விருப்பம் என நினைத்தார். சுமார் நான்கு மாத காலம் பயிற்சி எடுத்துக் கொண்ட அன்னை கல்கத்தாவுக்கு மீண்டும் திரும்பினார். கல்கத்தா திரும்பிய அன்னை தங்குவதற்கு ஒரு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார் தந்தை வான் எக்சம். புனித...
More

அன்னை 11 : பணிவாழ்வுக்கான பயிற்சி

11. பணிவாழ்வுக்கான பயிற்சி     கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு எதுவும் செய்து விட முடியாது என்பது தெரேசாவுக்குத் தெரிந்தது. அன்பான பேச்சும், ஆறுதலான உரையாடலும் பணத்தினால் வருவதில்லையே. தெரேசா மக்களிடம் சென்று பேசினாள். அவர்களின் அருகில் அமர்ந்தார். அவர்களுடைய புழுதிக் கரைகளில் புரண்டாள். சிலர் தெரேசாவை தேவதையாய் பார்த்தார்கள், சிலர் தெரேசாவை மதம் மாற்ற வந்திருக்கும் எதிரியாக பார்த்தார்கள், ஆனால் ஏழை மக்கள் அவளை அன்னையாகப் பார்த்தார்கள். ஏழைகளும், எளியவர்களும், நோயா...
More

அன்னை 9 : தெருச்சபையை அனுமதித்த திருச்சபை

9. தெருச்சபையை அனுமதித்த திருச்சபை   போப்பின் அனுமதி என்பது தவிர்க்க முடியாதது. அது இல்லையேல் உங்கள் கனவு நனவாக வாய்ப்பே இல்லை. அதைப் பெறுவது எப்படி என்பதைத் தான் யோசிக்க வேண்டும். தந்தை வான் எக்சம் சொன்னார். “ நான் போப்புக்கு எழுதவா ? “, தெரேசா கேட்டாள் வேண்டாம்.. வேண்டாம்.. தந்தை மறுத்தார். வத்திக்கான் மறுத்து விட்டால் பின்னர் எந்த முயற்சியும் செய்ய முடியாமல் போய் விடும். எனவே முதலில் வத்திக்கானை அணுகுவது முட்டாள் தனம். இங்கே கல்கத்தா நகர பேராயரை அணுகலாம். அவரைச் சந்தித்து...
More

அன்னை 10 : முதல் சுவடு

  9 முதல் சுவடு   “நான் இப்போதே சேரிப்பகுதிக்குச் செல்லலாமா “ என்பது தான் தெரேசா கேட்ட வார்த்தை. தந்தை வான் எக்சம் வியந்தார். பணி செய்வதை இத்தனை ஆத்மார்த்தமாய் விரும்பும் நபரை தன்னுடைய வாழ்நாளில் அவர் பார்த்ததேயில்லை. தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணி என்பதற்காகவோ, இறைவனின் அழைப்பு என்பதற்காகவோ செய்யப்படும் பணியாகத் தான் பணி வாழ்வு இது வரை அவருக்குக் காட்சிதந்திருக்கிறது. தெரேசாவைச் சந்தித்தபின்பு தான், இந்த பணி பரவசமாகவும், இலட்சியமாகவும், உன்னதமாகவும், உற்சாகமாகவும் எத...
More

அன்னை 8 : இரண்டாவது அழைத்தல்

8 இரண்டாவது அழைத்தல்     1946 செப்டம்பர் 10ம் தியதி. தெரேசா இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். திடீரென உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. “போ.. ஏழைகளுக்காகவும், பரம ஏழைகளுக்காகவும் பணி செய்” தெரேசா திடுக்கிட்டாள். கேட்டது குரலா ? அல்லது தன்னுடைய விருப்பத்தின் பிரதிபலிப்பா என்று அறியாமல் குழம்பினாள். துறவற சகோதரியாய் வாழ்வது என்பது இறைவனில் சரணடைதல் தானே ? அந்தப் பணியில் இருந்து கொண்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சமூகப்பணி செய்ய முடியாதே என்று குழம்பினாள். கத்...
More

அன்னை 7 : இறை பணியில் தெரேசா

  7 இறை பணியில் தெரேசா   1931ம் ஆண்டு மார்ச் 24ம் தியதி. தெரேசாவைப் பொறுத்தவரை வாழ்க்கையின் மிக மிக முக்கியமான நாள். அன்று தான் தெரேசா இறைப்பணி செய்யும் சகோதரியாக உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்த உறுதி மொழி எடுத்தபின் துறவற வாழ்க்கையை விட்டு வெளியே வரக் கூடாது என்பது வரைமுறை. இரண்டு ஆண்டு கால பயிற்சி தெரெசாவை இன்னும் பக்குவப்படுத்தியிருந்தது. எளிமை, கற்பு, கீழ்ப்படிதல் எனும் கொள்கைகளை உள்ளடக்கியது கன்னியர் வாழ்வின் உறுதிமொழி. எளிமையான வாழ்க்கையை வாழ்வேன் என்றும்,...
More

அன்னை 6 : ஆக்னஸ் தெரேசாவானார்

6 ஆக்னஸ் தெரேசாவானார்     இரயில் டப்ளினை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இரயிலில் கூடவே இன்னொரு சகோதரியும் டப்ளினினுள்ள லொரேட்டோ கன்னியர் பயிற்சியகத்திற்கு வந்து கொண்டிருந்தார். இரயிலில் ஒரு துணை கிடைத்ததில் இருவரும் சற்று ஆனந்தமடைந்தனர். ஆக்னஸின் மனதிற்குள் கேள்விகளும், குழப்பங்களும் ஓடின. தெளிவாய் இருந்தவை எல்லாம் சற்று குழம்பிப் போனது போல உணர்ந்தாள். குழப்பம் வரும்போதெல்லாம் ஆக்னஸ் செய்யும் ஒரே பணி செபித்தல். ஆக்னஸ் செபித்தாள். பயணத்தில் பெரும்பாலான நேரத்தை செபத்தில் செ...
More

அன்னை 5 : இறை அழைத்தல்

5. இறை அழைத்தல்   ஆக்னஸ் அன்னையின் வார்த்தையின் படியே நடந்தாள். தன்னுடைய கடமைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டாள். ஆலயப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டாள். அப்போது தான் அந்த பங்கிற்கு பங்குக் குருவானவராக வந்தார் பங்குத் தந்தை ஜாம்பிரன் கோவிக். ஜாம்பிரன் கோவிக் ஆன்மீகப் பணிகளின் நுணுக்கங்களை ஆலயத்தில் போதிப்பது வழக்கம். அவர் அந்த பங்கில் “மரியாயின் சேனை” எனும் இயக்கத்தை ஆரம்பித்தார். மரியாயின் சேனை என்பது ஆன்மீகமும், சமூகப் பணியும் இணைந்த ஒரு இயக்கம். அந்த இயக்கத்தில் ஆக்னஸ் ஆர்வ...
More