புனித அன்னை தெரசா மொழிகள்

அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அன்னை தனது வாழ்க்கையில் சொன்ன வார்த்தைகள் மனிதத்தை பிரதிபலித்தன. அவற்றில் சில இதோ... அன்னை மொழிகள்   அன்னை தனது பணிக்காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் மொழிந்த வார்த்தைகளும், அறிவுரைகளும் ஆத்மார்த்தமானவை, அவசியமானவை. இன்று பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படும் அன்னையின் மொழிகளில் சில.   இறைவனின் அன்பை எப்போதும் இதயத்தில் கொண்டிருங்கள். அதை எதிர்ப்படுவோரிடமெல்லாம் வழங்குங்கள். குறிப்பாக உங்கள் குடும்பத்தினருக்கு அதைத் ...
More

அன்னை 23 : மரணம், அன்னை மொழிகள்

மரணம் ரணமானது   செப்டம்பர் 3, 1997 அன்னையின் உடல்நிலை மோசமானது. அன்னைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும், செபமும் அன்னையை உயிர்பிழைக்க வைத்துக் கொண்டிருந்தது. அன்னைக்கு நடமாட முடியவில்லை. ஆனால் திருப்பலியில் பங்கு கொள்ள வேண்டும் எனும் தணியாத தாகம். தந்தை சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அன்னையும், சகோதரிகளும் அன்னையில் இடத்திலேயே திருப்பலியில் பங்கு கொண்டனர். செப்டம்பர் 5, 1997 அன்னையின் உடல் மீண்ட்டும் வலுவி...
More

அன்னை 22 : பேட்டிகள், எதிர்ப்புகள், விருதுகள்

வேர்களை விசாரித்த நேர்காணல்   அன்னையை ஒருமுறை டைம் பத்திரிகைக்காக எட்வர்ட் என்பவர் பேட்டி கண்டார். அன்னையின் பதில்கள் எளிமையாய் வசீகரித்தன..   காலையில் என்ன செய்வீர்கள் ? செபம்   எப்போது ?   நாலரை மணிக்கு   அதன் பின் ?   இயேசுவோடு, இயேசுவிற்காக, இயேசுவிற்குப் பணிசெய்யும் மனநிலையுடன் ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றோர் என எங்கள் பணித்தளங்களுக்குச் செல்வோம்   மக்கள் உங்களை ஓர் மத சமூக பணியாளராகப் பார்க்கின்றனர். இந்தப் பணிகளுக்...
More

அன்னை 21 : சர்வதேச அரங்கில் அமைதிப் புறா

சர்வதேச அரங்கில் அமைதிப் புறா   வாஷிங்கடனின் அன்னை தெரசா அழைக்கப்பட்டிருந்தார். மூவாயிரம் ‘பெரிய மனிதர்கள்” கலந்து கொண்ட விழாவில் அன்னை பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார். அமெரிக்காவின் மிகப்பெரும் தலைவர்கள் அனைவரும் அந்த விழாவில் அன்னையின் பேச்சைக் கேட்க அமர்ந்திருந்தனர். முதிய அன்னை எழுந்தாள். தன்னுடைய மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். தன்னை வரவழைத்த விருந்தினர்களை வாழ்த்தியோ, அவர்களை பாராட்டியோ, உதவி கேட்டு விண்ணப்...
More

அன்னை 20 : விரிவடைந்த பணி

சிறகு விரிக்க அனுமதி   திருச்சபையின் சட்ட திட்டங்கள் சற்று கடினமானவையாய் இருந்தன. அன்னையின் பணி பரந்தபின்னும், அதன் வேர்கள் ஆழமாய் இறங்கிய பின்னும் கல்கத்தாவுக்கு வெளியே சபையைத் திறக்க அன்னைக்கு திருச்சபை அனுமதி வழங்கியிருக்கவில்லை. பத்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். திருச்சபை உறுதியாய் சொல்லி விட்டது. அது அன்னையின் பணியின் ஆழத்தை வருடங்கள் கொண்டு அளந்து பார்த்தது. அன்னை தனக்குக் கொடுக்கப்பட்ட பணித்தளத்தில் உண்மையான பணியைச் செய்தார். தன்னுடைய பணியை பிற மாநிலங்களுக்கும் கொண்...
More

அன்னை 19 : அன்பும், வெறுப்பும், எதிர்ப்பும்

அன்புக்கு எதிராய் ஆயுதங்கள் அன்னை மதம் மாற்றுகிறார் என்று அன்னையைப் பற்றியும் அன்னையின் கொள்கைகளைப் பற்றியும் நன்கு அறியாதவர்கள் மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர். அன்னை இயேசுவை தன்னுடைய மணவாளனாக ஏற்றுக் கொண்டு இயேசுவில் முழு சரணடைந்தவர். இதை எப்போதும் எந்த இடத்திலும் மறுத்தோ, தயங்கியோ, மாற்றியோ பேசியதில்லை. நான் கிறிஸ்தவள். அன்னை மரி எனது தாய். இயேசுவையே என் வாழ்க்கைத் துணைவராக, கடவுளாக, எல்லாம் வல்லவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என எப்போதும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வார். எப்போதும் செ...
More

அன்னை 18 : சிசு பவன், தொழுநோயாளிகள் இல்லம், ஆனந்த மரணம்

சிசு பவன்   கல்கத்தா தெருக்களில் அனாதைகளாகக் கண்டெடுக்கப்படும் குழந்தைகளைக் குறித்த கவலை அன்னையை வாட்டியது. இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் அன்னையின் மனதுக்குள் கனலாய் எரிந்து கொண்டிருந்தது. ஆதரவற்ற சிறுவர்கள் வீதிகளில் மரணத்துக்குள்ளாவதும், சமூக விரோத செயல்களுக்குள் விழுவதுமான அவலங்களை நிறுத்த வேண்டுமெனும் அன்னையின் கனவு 1955ம் ஆண்டு நிறைவேறியது. சிசுபவன். அன்னை ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்காக ஆரம்பித்த இல்லம். இங்கு ஆதரவற்ற அனாதைகள், ஊனமுற்றோர், மன நிலை ப...
More

அன்னை 17 : பயிற்சிப் படிக்கட்டுகள்

பயிற்சிப் படிக்கட்டுகள்   அன்னையின் அன்புப் பணியாளர் சபை திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட சட்ட திட்டங்களோடு இயங்கியது. திருச்சபையின் எல்லைகளைக் காயப்படுத்தாமலும், மரபுகளை பெரிய அளவில் மீறாமலும் அன்னையின் பணிகள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அன்னை தவறாமல் திருப்பலியில் பங்கேற்கிறார். திருப்பலி அன்னைக்கு பணி செய்யும் ஊக்கத்தையும் தடுமாறாத மனதையும் தருகிறது. செபம் அன்னைக்கு குருடனின் கையிலிருக்கும் ஊன்றுகோலாய் உதவுகிறது. ஆலயத்தில் நுழைந்தால் அன்னை செபத்தில் மூழ்கிப் போய்விடு...
More

அன்னை 16 : அமைதிப்பணிக்கு அனுமதி

அன்னையின் குழுவில் ஒரு மாணவி இணைந்த செய்தியைக் கேள்விப்பட்டு இரண்டாவதாக வந்தார் மகதலேனா எனும் மாணவி. இவரும் அன்னையின் பணியில் தங்களை இணைத்துக் கொண்டார். அன்னை தன்னுடைய பணியில் இணைந்த மாணவியரை அழைத்துக் கொண்டு மரியன்னை ஆலயத்திற்குச் சென்று இயேசுவுக்கும், மரியன்னைக்கும் நன்றி செலுத்தினாள். அன்னை மகிழ்ந்தாள். மாணவிகள் பணியில் இணைகிறார்கள் என்னும் செய்தி மரியன்னை பள்ளிக்கூடத்தில் பரவியது. மாணவிகள் மேலும் சிலர் அன்னையின் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இரண்டு நான்காகி, நான்கு ப...
More

அன்னை 15 : அன்புப் பணியாளர் சபை ஆரம்பம்

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி “அன்புப் பணியாளர் சபை” அன்னை தன்னுடைய பணிக்கு பெயரிட்டார். அன்னை திரு கோம்ஸ் என்பவருடைய வீட்டின் மாடியை வாடகைக்கு எடுத்தார். அந்த மாடியறையில் தனியே தங்கத் துவங்கினார். இதுவரை சகோதரிகள் சிலருடன் தங்கியிருந்த அன்னையை தனிமை வாட்டியெடுத்தது. எனவே லோரிடோ இல்லத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பணியாளப் பெண்மணியை தன்னுடன் துணைக்கு அமர்த்தினார். எனினும் அன்னை வீட்டு வேலைகளைச் செய்யத் தயங்கியதே இல்லை. அந்த வாடகை வீட்டின் தரையையும், அந்த மாடிப்படிகள் முழுவதையும் தண்ணீர் ...
More