ரஜினி நினைவுகள்.

பால்யங்கள் சுவாரஸ்யங்களால் நிரம்பியது. பால்யங்களின் படியில் சிதறிக் கிடக்கும் கதைகள் உறைந்து போன காலங்களுக்குள்ளும் வெப்பத்தைப் பாய்ச்சும் வீரியம் கொண்டவை. பால்யங்களின் வீதியைக் கடந்து வெகு காலமாகி விட்டாலும் எல்லாருடைய மனதிலும் நிச்சயம் பால்ய நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருக்கும். கிராமங்களில் பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காரணம் வேறொன்றுமில்லை. வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவர்களுடைய வேர்களைப் பிடுங்கி நகரத்தின் வீதிகளில் நடும்போது, பால்யத்தின் பச்சைய நினைவுகள் அவர்களுக்கு இள...
More

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்

குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார...
More

எல்லைகள் கடந்த மனித நேயம்

    இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும்...
More

விடுமுறைகளும், விதிமுறைகளும் ( Vettimani, London)

'அவசர உலகம்' என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்கிறார்கள். அவசரமாய் எழும்பி, அவசரமாய் ஓடி, அவசரமாய் வீடு வந்து, அவசரமாய் தூங்கி, அவசரமாய் எழும்பி என வாழ்க்கை ஓடுகிறது. நின்று நிதானித்தால் ஏதோ உலகமே இடிந்து விழுவது போல எல்லாரும் பாவிக்கிறார்கள். ஒரு நண்பரைப் பார்த்தால் உற்சாகமாய்க் கட்டியணைத்து அரை மணி நேரம் பேச யாருக்கும் நேரம் இருப்பதில்லை. "ஹாய்... வாட் எ சர்ப்ப்ரைஸ்.." என ஒரு வார்த்தை பேசிவிட்டு. அதிகபட்சம் அவருடைய எண்ணை வாங்கி வாட்ஸப்புவோம். அல்லது "பேஸ்புக்ல என்ன நேம் ல இருக்கே ?" என ...
More

ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

    சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம். சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வை...
More

தனிமையை இனிமையாக்க

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர். இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டு...
More

உள்ளே உள்ளே; இறைவன் உன் உள்ளே ( Sivathamizh Magazine London )

புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல‌ நமக்குள் செல்வது ! இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகிறார்கள். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள். சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பய...
More

எனது மழை அனுபவம்

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு. நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது. நத...
More