பூமியை நேசிப்போம் !

  ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது. அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. இரண்டாவது துறவி கேட்டார், “கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே” முதல் துறவி பதிலளித்தார், “கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா ?” ...
More

நா.முத்துக்குமார் : அதிர்ச்சியும், நினைவலைகளும்

அதிர்ச்சி, பேரதிர்ச்சி. நம்பவே முடியவில்லை. நண்பர் நா.முத்துகுமார் இப்போது நம்முடன் இல்லை. அதிர்ச்சியிலிருந்து மனம் விடுபட மறுக்கிறது. எனது அலுவலகத் தோழனின், பள்ளித் தோழன் அவர். ஆயினும் எங்களிடையே இருந்த நட்புக்குக் காரணம் அவரது எழுத்துகளும், அதன் வசீகரமும் தான். 2001ம் ஆண்டு. நான் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிடவேண்டுமென சிந்தித்தபோது மனதில் வந்த முதல் பெயர் நா.முத்துகுமார் தான். அவரிடம் ஒரு முன்னுரை வாங்கி நூலை வெளியிடவேண்டும் என்பது மட்...
More

THE BFG : விமர்சனம்

மகிழ்ச்சி. எந்த விமர்சனம் எழுத ஆரம்பித்தாலும் இந்த வார்த்தை வந்து தொலைக்கிறது. என்ன செய்ய, இனிமையான அவஸ்தையென எடுத்துக் கொள்கிறேன். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு எப்போதுமே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கபாலி அளவுக்கு விமானத்தில் போஸ்டர் அடித்து ஒட்டமாட்டார்கள். ஆனால் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் படம் வெளியானால் நிச்சயம் திரையரங்குகளை நோக்கிப் படையெடுப்பார்கள். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் அவருடைய படங்கள் இருக்கும். ஆனாலும் சினிமா ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண...
More

புளிய மர புராணம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் ஆவியைக் கரைத்த புளிய மரமும், சுந்தரராமசாமியின் எழுத்துகளில் நெகிழ்ந்த புளிய மரமும் போல எனக்கும் ஓர் புளிய மர புராணம் உண்டு. இன்னும் நினைவுகளில் காற்றையும், புளியம் பிஞ்சின் வாசனையையும் அனுப்பி வைக்கும் புளிய மரம். என்னைப் பொறுத்தவரையும் அந்தப் புளிய மரம் ஒரு புனித மரம் ! மரம் இயற்கையின் வரம். கிளைகள் ஒவ்வொன்றும் ஆறுதல்க் கரம். இலைகளின் தலைகளில் காற்று வடித்திறக்கும் சுரமும். அதன் இனிமையின் துளிகளில் கரைந்திறங்கும் மனமும் மனிதவாழ்வின் மகத்துவ தருணங்கள். வீட்டி...
More

சறுக்கினால் சமாதி…

கழைக்கூத்தாடி சமாச்சாரம் நமக்குத் தெரியும். ஐயோ பாவம் ன்னு இரக்கப்படுவோம். ஆனா அதையே வாழ்க்கை இலட்சியமா வெச்சிருக்கிற சிலரும் இருக்கிறாங்க. அவர்களோட பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே கயிறு அல்லது கம்பி மேலே நடப்பது தான். அதில் முக்கியமான நபர் பிலிப் பெட்டி. எங்கே உயரமா எதையாவது பார்த்தால் உடனே இடையே கயிறு கட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார் மனுஷன். 1949ல் பிரான்சில் பிறந்த இவருக்கு நடக்கப் பழகிய நாட்களிலேயே இந்த ஆர்வம் வந்து விட்டது. கயிறில் நடப்பார், ஓடுவார், குட்டிக் கரணம் அடிப்பார், சைக்கிள் ஓட்டு...
More

எனக்கு வந்த மின்னஞ்சல்…

அந்த மின்னஞ்சல் என்னைப் புரட்டிப் போட்டது. அண்ணா என்று அழைத்த அந்தக் கடிதம் “திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் கணவரை விபத்தில் பறி கொடுத்து விட்டேன். அவர் நினைவில் வாழும் எனக்கு, எனக்கே எனக்காய் ஒரு கவிதை எழுதித் தருவீர்களா ?” என்று வலியுடனும் உரிமையுடனும் அந்தக் கடிதம் விண்ணப்பம் வைத்திருந்தது. ஏதோ ஒரு முகம் தெரியாத சகோதரியின் மனக் குரலின் வார்த்தை வடிவமாய் அது என்னை அறைந்தது. எத்தனையோ விதமான கடிதங்களின் மத்தியில் எனது அன்றைய தினத்தைப் கசக்கிப் போட்ட கடிதமாய் அது அமைந்து விட்டது. வாழ்க்கையில...
More

கல்கியில் எனது : “நல்லா இருக்கியா மக்களே…”

இலக்கியங்கள் சொன்ன எழிலெல்லாம் இன்னும் மிச்சம் இருப்பது கிராமத்தின் பக்கங்களில் மட்டும் தான் என்பது புரட்டிப் பார்க்கும் போது புரிகிறது. குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள எனது கிராமத்தின் பெயர் பரக்குன்று. நாகர்கோவிலில் இருந்து 39 கிலோமீட்டர் தூரம், மார்த்தாண்டத்திலிருந்து ஏழு கிலோமீட்டர், களியக்காவிளையிலிருந்து மூன்று கிலோமீட்டர் என வரைபடம் சொல்லும். கேரளாவும் தமிழகமும் கைகுலுக்கிக் கொள்ளும் குளிர்த்தென்றல் இந்தக் கிராமத்தின் பூர்வீகச் சொத்து. பரந்த குன்றுகளால் அமைந்த இடமானதால் இதற்கு இந்தப் பெயர...
More

அரை நூற்றாண்டுக்குப் பின் ஒரு ஆனந்த சந்திப்பு

அந்த அதிகாலை நிசப்தத்தை செல்போனின் சிணுங்கல் ஒலி சற்றே உடைத்தது. “மேரி இருக்காங்களா ?”  மறு முனையில் பேசிய குரலில் தயக்கமும், எதிர்பார்ப்பும் இழையோடியது. “நான் தான் பேசறேன். நீங்க யாரு ? “ “ஹேய்.. சி.ஆர் … நான் தான் புஷ்பம் பேசறேன்” மறு முனையிலிருந்த குரலுக்குச் சட்டென ஒரு துள்ளல் சந்தோசம். “புஷ்பமா ? எந்த புஷ்பம் ? “ “கண்டு பிடி பாக்கலாம் ? “ மறு முனை கொஞ்சம் விளையாட்டுக் குரலுக்கு இறங்கியது. மேரி தனது தலையிலிருந்த நரை முடிகளைக் கோதியபடியே யோசித்துப் பார்த்தார். “சாரி...
More

தொங்கலில் தெங்குமரஹாடா

  சத்தியமங்கலம் என்றாலே வீரப்பன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் கோடிக்கணக்கில் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நேரில் கண்டால் தான் புரியும் சரி, போய் தான் பார்ப்போமே என்று நண்பர்களாகக் கிளம்பினோம். பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரக் காட்டுப் பயண தூரத்தில் இருந்த “தெங்குமரஹாடா” எனும் இடம் தான் எங்கள் இலக்கு. கற்காலம் தொட்டே பார்த்துப் பழகிய அதே அரசுப் பேருந்து ! தினமும் மாலை 6 மணிக்கு காட்டுக்குள் பயணிக்கும...
More

பெயர்க் காரணம் !!!

பெயர்க் காரணம் ----------------- கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சாகித்ய அகாடமி வாங்கிய எழுத்தாளர்களை விட பிரமிக்க வைக்கும் நடை பாட்டிகளின் கதைகளில் சர்வ சாதாரணமாய் வாழ்வதுண்டு. பாட்டி சொன்ன நல்ல தங்காள் கதையோ, மணிமேகலைக் கதையோ இன்றும் என் மனதில் ஒரு திரைப்படமாகவே விரியும். பாட்டிக் கதைகளில் இசையும், நாடகமும், நாட்டியமும், இலக்கியமும் எல்லாமே ஒரு குதிரைச் சவாரி செய்வது போல ஒரு காட்சிப் படுத்துதல் இருக்கும். எனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அம்மாவும் அப்படித் தான். அ...
More