கோயிலும், தாவணியும்

Image result for temple saree girl

ஆலயம் போக
முரண்டு பிடித்ததில்லை.

பாவாடை தாவணி
சுடிதார்
சேலை
ஜீன்ஸ்
எப்படிப் பெண்கள்
ஆலயம் வந்தார்கள் என
கண்கள்
கணக்கு வைத்துக் கொள்ளத்
தவறியதுமில்லை.

அப்போதெல்லாம்
ஆலயம் வருவது
ஆண்டவனைத் தரிசிக்க
என்பது
புரியாமலேயே போய்விட்டது.

மத்தவங்க மாதிரியில்லை
நம்ம பையன்
தவறாமல் ஆலயம் போகிறான்.

பதின் வயது மகனைப்பற்றி
பெருமைப்படும்
மனைவியிடம்
என்ன தான் சொல்லிவிட முடியும் ?
நான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *