மலர்களே மலர்களே

Image result for Mother and child painting

தினசரி காலையில்
விரல் வருடி ஊர்ஜிதப் படுத்துகிறேன்
இன்னும்
முளைக்கவில்லை மொட்டு.

தரையில் ஈரமிருக்கிறதா
தேவைக்கு பச்சையம் இருக்கிறதா
என
பரிசோதனைப் பார்வைகளைப்
பதியமிடுகிறேன்.

உரங்களுக்கும்
மண்புழுக்களுக்கும் கூட
ஏற்பாடு செய்து
பூக்கள் வேண்டி
பிரார்த்தனைகளும் செய்தாயின்று.

செழித்து வளரும்
செடியில்
எங்கும் மொட்டுகளைக் காணோம்.

பூக்களைக் காணும்
கனவுகள் வெறித்து
கரு விழிகள் இரண்டிலும் கூட
பூக்கள் விழுந்து விட்டன.

என்
பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல்
புன்னகைத்துக் கொண்டே
செழித்து வளர்கிறது
செடி.

சிரித்து வளரும் செடிகளுக்குப் புரிவதில்லை
மனிதனின் தேவை
செடிகளல்ல
பூக்கள் என்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *