தினத்தந்தி வாரம் 2 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

Image result for smart phone virus

கம்ப்யூட்டர் வைரஸ் ! எனும் வார்த்தை முதலில் அறிமுகமான காலத்தில் எல்லோரும் பயந்தார்கள். அது கணினியின் கீபோர்ட் வழியாகவும், மானிட்டர் வழியாகவும் மக்களைத் தாக்கும் என நினைத்தார்கள். அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு கீபோர்டைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். ஃப்ளாப்பி டிஸ்கை ஏசி காற்றில் காட்டி விட்டு கணினியில் போடுங்கள் என அறிவுறுத்தியவர்கள் பலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் என்பது மென்பொருள் என்பதும், அது பன்றிக் காய்ச்சல் போல கண், காது, மூக்கு, கைவிரல் வழியே பரவாது என்றும் புரிந்தது.

இப்போது கம்ப்யூட்டர் வைரஸ்களை வழியிலேயே தடுத்து நிறுத்தவும், உள்ளே நுழைந்தால் அழித்து ஒழிக்கவும் ஏராளம் ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் வந்து விட்டன. ‌ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஆன்டி வைரஸ்கள் எந்த அளவுக்கு வளர்ச்சியடைகிறதோ அதை விட அதிக அளவில், அதிக வேகத்தில் வைரஸ்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, எபோலோ என்றொரு வைரஸ் மனித குலத்தைத் தாக்கியபின்பு தான் அதன் தன்மைகளை வைத்து ஆன்டி வைரஸ் உருவாக்க முடியும். அதே போல தான் இங்கேயும். மொபைல் வைரஸ் ஒன்று வந்த பின்பு தான் அதைத் தடுக்கும் வகையிலான ஆன்டி வைரஸ்களை உருவாக்க முடியும்.

கணினிகளைத் தாக்கி அழித்து துவம்சம் பண்ணும் வைரஸ்களைப் போன்ற வைரஸ்கள் செல்போன்களில் இன்னும் வரவில்லை. அதே நேரம், அப்படிப்பட்ட ஒரு காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சூழல் வரும்போது கணினி வைரஸ்களால் உருவான பாதிப்பை விட அதிக பாதிப்பை ஸ்மார்ட் போன் வைரஸ்கள் உருவாக்கும். அதை விடப் பெரிய பொருளாதார இழப்பையும், மன உளைச்சலையும் அவை உருவாக்கும். காரணம் கணினி பயன்பாட்டாளர்களை விட பல நூறு மடங்கு அதிகம் மக்கள் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தான். சொல்லப்போனால் இன்றைய தேதியில் கணினியை உதறிவிட்டு எல்லோரும் ஸ்மார்ட்போன்களை மட்டுமே பயன்படுத்தும் மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

ஸ்மார்ட்போன்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை வைரஸ்கள் என்பதை விட‌ ‘மால்வேர்’கள் என்பதே பொருத்தமாக இருக்கும். மால்வேர் என்பது மாலிஷியஸ் சாஃப்ட்வேர் என்பதன் சுருக்கம் தான். அதாவது க‌ணினியையோ, ஸ்மார்ட் போனையோ தாக்கி அத‌ன் வ‌ழ‌க்க‌மான‌ செய‌லைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு மென்பொருள் என‌ இதை வ‌ரைய‌றுக்க‌லாம். வைர‌ஸ்க‌ள் என்ப‌வை இந்த‌ மால்வேர்க‌ளில் அட‌க்க‌ம் என்ப‌தாலும், ந‌ம‌க்குப் ப‌ழ‌க்க‌மான‌ வார்த்தை வைர‌ஸ் என்ப‌தாலும் எல்லாவ‌ற்றையும், ‘வைர‌ஸ் தாக்கிச்சுப்பா” என‌ பொத்தாம் பொதுவாக‌ச் சொல்கிறோம்.

இந்த‌ வைர‌ஸ்க‌ள் ஸ்மார்ட் போனுக்குள் நுழைய‌ முக்கிய‌மான‌ கார‌ணியாக‌ இருப்ப‌வை “ஆப்ஸ்” என‌ப்ப‌டும் ஆப்ளிகேஷ‌ன்ஸ். இப்போது எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னியே குட்டிக் குட்டி ப‌ய‌ன்பாட்டு மென்பொருள்க‌ள் வ‌ந்து விட்ட‌ன.

வ‌ங்கிக் க‌ண‌க்குக்கு த‌னி ஆப், மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒன்று, த‌க‌வ‌ல் சேமிப்புக்கு ஒன்று, க‌ட‌வுச் சொற்க‌ள் சேமிப்புக்கு இன்னொன்று, செய்திக‌ள் வாசிக்க‌ ஒன்று, வீடியோக்க‌ள் பார்க்க‌ இன்னொன்று என‌ ச‌க‌ட்டு மேனிக்கு ஆப்ளிகேஷ‌ன்ஸ் நிர‌ம்பி வ‌ழிகின்ற‌ன. அதிலும் குறிப்பாக‌ ஸ்மார்ட் போனில் விளையாடுவ‌த‌ற்காக‌ த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும் வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் எக்க‌ச்ச‌க்க‌ம். .

இந்த‌ ஆப்ஸ்க‌ள் தான் வைர‌ஸைப் ப‌ர‌ப்ப‌ விரும்புப‌வ‌ர்க‌ள் முத‌லில் தேர்ந்தெடுக்கும் விஷ‌ய‌ம். உண்மையான‌ மென்பொருள் போல‌வே தோற்ற‌ம‌ளிக்கும்ப‌டி அதே நிற‌ம், அதே ஸ்டைலில் போலி ஆப்ஸ் க‌ண்சிமிட்டும். ச‌ரியாக‌க் க‌வ‌னிக்காம‌ல் அதை ந‌ம‌து போனில் நிறுவினால் அத‌னோடு வாலாக‌ இணைந்திருக்கும் மால்வேர் ந‌ம‌து போனுக்குள் நுழைந்து விடும். இது விளையாட்டு ஆப்ஸ் மூல‌ம் மிக‌ எளிதாக‌ நுழைந்து விடுகிற‌து.

உதார‌ண‌மாக, ‘கேன்டி க்ரஷ்’ விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்க‌ள் என‌ வைத்துக் கொள்ளுங்க‌ள். ‘இதோ உங்க‌ளுக்கான புதிய‌ அப்டேட்’ என‌ ஒரு த‌க‌வ‌ல் க‌ண்சிமிட்டும். சுட்டியை அழுத்துங்க‌ள், விளையாட்டை ர‌சியுங்க‌ள் என‌ வ‌சீக‌ரிக்கும். அது உண்மையா பொய்யா என்ப‌தை க‌வ‌னிக்காம‌ல் கிளிக்கினால் அவ்வ‌ள‌வு தான் நீங்க‌ள் பொறியில் சிக்கிக் கொண்டீர்க‌ள் என்று அர்த்த‌ம்.

இன்னும் சில விஷமிகள், ‘ஆட்டோமெடிக் அப்டேட்’ எனும் தானாகவே மொபைலில் இறங்கி வேலைசெய்யும் வைரஸ்களையும் களத்தில் இறக்கி விடுவதுண்டு.

ஆன்ட்ராய்ட் இய‌ங்குத‌ள‌ம் போன்ற‌ ‘ஓப்ப‌ன் சோர்ஸ்’ இய‌ங்குத‌ள‌ங்க‌ள் தான் மிக‌ எளிதில் தாக்குத‌லுக்கு உள்ளாகின்ற‌ன‌. கார‌ண‌ம் இதில் ஆப்ஸ்க‌ளை இணைத்துக் கொள்வ‌து ச‌ற்று எளிதான‌ விஷ‌ய‌ம். ஆனாலும், ஆன்ட்ராய்ட் இய‌ங்குத‌ள‌ம் லின‌க்ஸ் எனும் செய‌லியின் அடிப்ப‌டையில் உருவாக்க‌ப் ப‌ட்டிருப்ப‌தால் பாதுகாப்பு அம்ச‌ங்க‌ள் க‌ணிச‌மாக‌ உண்டு என்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கு இல்லை.

ஆப்ஸ்கள் விஷயத்தில் உஷாராய் இருந்தாலே பாதி சிக்கலைத் தீர்த்து விடலாம். ‘காலையில தான் முழுசா சார்ஜ் பண்ணி வெச்சேன், ரெண்டு மணி நேரத்துலயே சுத்தமா தீந்துடுச்சு’. “இப்போல்லாம் மொபைல் தீயா சுடுது..” என்றெல்லாம் வ‌ரும் குற்ற‌ச்சாட்டுக‌ளின் பின்ன‌ணியில் பெரும்பாலும் இருப்ப‌து “போலி ஆப்ஸ்” க‌ளின் கைங்க‌ர்ய‌ம் தான். க‌டைசியாய் என்ன‌ த‌ர‌விற‌க்க‌ம் செய்தீர்க‌ள் ? எதை நிறுவினீர்க‌ள் எனும் கேள்வி கேட்டாலே உங்க‌ள் செல்போன் பிர‌ச்சினையின் விடை பெரும்பாலும் கிடைத்து விடும்.

கூகிள் ஸ்டோர், அமேசான், ஐட்யூன்ஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட இட‌ங்க‌ளில் இருக்கும் மென்பொருட்க‌ளை நிறுவினால் அவை பெரும்பாலும் பாதிப்பை ஏற்ப‌டுத்துவ‌தில்லை. ஆனால் மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் வ‌ரும் ஆப்ஸ், அல்ல‌து தெரியாத‌ த‌ள‌த்திலிருந்து த‌ர‌விற‌க்க‌ம் செய்யும் ஆப்ஸ் போன்ற‌வை தான் பெரும்பாலும் ந‌ம‌து மொபைலுக்கு எம‌னாக‌ மாறிவிடுகிற‌து.

அத்த‌கைய‌ மென்பொருட்க‌ளை அழித்து விடுவ‌தும், புதிதாய் நிறுவுதை கூகிள், அமேசான், ஐடியூன்ஸ் என‌ ந‌ம்பிக்கைக்குரிய‌ ஸ்டோர்க‌ளிலிருந்து எடுத்து ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ந‌ம‌து போன்க‌ளின் ந‌ல‌னுக்கு ந‌ல்ல‌து ! அவையும் முழுக்க‌ முழுக்க‌ பாதுகாப்பு என்று சொல்வ‌த‌ற்கில்லை. ஏராள‌மான‌ மால்வேர் இணைந்த‌ ஆப்ஸ் கூகிள் பிளே யில் இருக்கின்ற‌ன‌ என்கிறார் ட்ரென்ட் மைக்ரோவின் பாதுகாப்பு ஆய்வாள‌ர் ரிக் ஃபெர்குச‌ன்.

என‌வே, மொபைலில் இருக்கும் த‌க‌வ‌ல்க‌ளை அடிக்க‌டி ‘பேக் அப்’ செய்து கொள்ளுங்க‌ள், அதாவ‌து வேறு ஒரு இட‌த்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்க‌ள், என‌ அவ‌ர் அறிவுறுத்துகிறார்.

ஒருவேளை உங்க‌ள் மொபைல் போன் ‘ஜெயில்பிரேக்’ செய்ய‌ப்ப‌ட்டிருந்தால் தாக்க‌ம் மிக‌வும் ப‌ய‌ங்க‌ர‌மாக‌ இருக்கும். ஜெயில் பிரேக் என்ப‌தை த‌யாரிப்பாள‌ர்க‌ள் த‌ரும் செய‌லியையோ, சேவை வ‌ழ‌ங்குந‌ரையோ ர‌க‌சிய‌மாய் மாற்றிய‌மைப்ப‌து என்று சொல்ல‌லாம். இத்த‌கைய‌ போன்க‌ளில் வைர‌ஸ்க‌ள் புகுந்தால் மென்பொருள்க‌ளின் அடியாழ‌ம் வ‌ரை சென்று அழித்து நாச‌ம் ப‌ண்ணி விடும். ‘எல்லாம் முடிந்த‌து’ என‌ மூட்டை க‌ட்ட‌ வேண்டிய‌து தான்.

( இன்னும் அல‌சுவோம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *