தினத்தந்தி வாரம் 1 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

Image result for smart phone virus
செல்போன்கள் பேசுவதற்கானவை எனும் காலம் மலையேறிப் போய்விட்டன‌. செல்போனில் பேசவும் செய்யலாம் என்பது தான் இப்போதையை புது மொழி. காரணம் இன்றைய செல்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் எனும் சின்ன எல்லையிலிருந்து கையடக்கக் கணினி எனும் நிலைக்கு இடம்பெயர்ந்தாகி விட்டது.

வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யணுமா ? சோபாவில் அமர்ந்து கொண்டே ஷாப்பிங் செய்யணுமா ? செல்போன் பில், எலக்ட்ரிக் பில், கேபிள் டிவி பில் என பில்களையெல்லாம் கட்டி முடிக்கணுமா ? ஊருக்கு போக டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், விமான டிக்கட் ஏதாச்சும் புக் பண்ணணுமா ? நேரம் போகாமல் இருக்கும்போ விளையாடணுமா ? சமூக வலைத்தளங்களில் அரட்டையடிக்கணுமா ? இல்லே அலுவலகம் சார்ந்த மின்னஞ்சல் ஏதாச்சும் அனுப்பணுமா ? எந்த வேலையாய் இருந்தாலும் சமத்தாகச் செய்து முடிக்க நமது கைகளில் ஒரு சின்ன மந்திரப் பெட்டி இருக்கிறது. அது தான் ஸ்மார்ட் போன்.

வீட்ல குழந்தைகளோடு சிரித்து விளையாடும் போட்டோக்கள் முதல், நம்முடைய வங்கிக் கணக்கின் ரகசியங்கள் வரை நமது செல்போன்கள் சுமக்கும் தகவல்களின் எண்ணிக்கை வியப்பூட்டக் கூடியது. ஒவ்வொருவருடைய செல்போன்க‌ளுக்குள்ளும் அவ‌ர்க‌ளுடைய‌ ர‌க‌சிய‌ டைரியும், ப‌ர்ச‌ன‌ல் ப‌கிர்வுக‌ளும் நிர‌ம்பியிருக்கின்ற‌ன‌.

ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொரு த‌னித்த‌னி உல‌க‌ம் போல‌ அவ‌ர‌வ‌ர் கைக‌ளில் இருக்கிற‌து இந்த‌ ஜீபூம்பா க‌ருவி. இதை சில‌ நிமிட‌ங்க‌ள் இட‌ம் மாற்றி வைத்து விட்டாலோ, ம‌ற‌ந்து போய் எங்கோ வைத்து விட்டு வ‌ந்து விட்டாலோ இத‌ய‌ம் துடிப்ப‌து ப‌க்க‌த்து வீட்டுக் கார‌னுக்குக் கூட‌ கேட்கும். இள‌சுக‌ளின் கைக‌ளுக்கு இது ஆறாவ‌து விர‌ல் எப்போதும் வில‌குவ‌தேயில்லை. இந்த‌ போனை யாராவ‌து எடுத்து இர‌ண்டு நிமிட‌ம் துழாவினாலே ப‌த‌ட்ட‌ப்ப‌ட்டுப் போய் பிடுங்கி விடுகிறோம். கார‌ண‌ம் அது ந‌ம‌து த‌னிமையும், ர‌க‌சிய‌மும், முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளின் இருப்பிட‌முமாகிப் போன‌து தான்.

இத்த‌கைய‌ செல்போன்க‌ளில் ச‌ட்டென‌ வைர‌ஸ் புகுந்து விளையாட்டுக் காட்டினால் எப்ப‌டி இருக்கும் ? உங்க‌ள் த‌க‌வ‌ல்க‌ளெல்லாம் காணாம‌ல் போனால் எப்ப‌டி இருக்கும் ? நினைத்துப் பார்க்கவே திகிலாக‌ இருக்கிற‌து அல்ல‌வா ? அத‌ற்கான‌ சாத்திய‌ங்க‌ள் உண்டு என்ப‌து தான் இன்றைய‌ ந‌வீன‌ யுக‌த்தின் உண்மை.

ஜெனிஃப‌ர் ஒரு இள‌ம் பெண். ஒரு நாள் காலையில் வ‌ழ‌க்க‌ம் போல‌ காலையில் செல்போனின் முக‌த்தில் க‌ண்விழித்தாள். அவ‌ளுக்கு அதிர்ச்சி காத்திருந்த‌து. அவ‌ளுடைய‌ போன் ‘லாக்’ செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. வ‌ழ‌க்க‌மான‌ லாக் அல்ல‌. புதிய‌ லாக்.

“நீங்கள் சட்ட விரோதமான செயல்களை இந்த செல்போனிலிருந்து செய்ததால் ‘சைபர் கிரைம்’ மூலம் இந்த போன் லாக் ஆக்கப்பட்டுள்ளது. இதை விடுவிக்க $500 க‌ட்ட‌வேண்டும். இல்லையேல் ச‌ட்ட‌பூர்வ‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும்’ என‌ ஒரு செய்தியும் திரையில் ஓடிய‌து. கீழே கிரெடிட் கார்ட் த‌க‌வ‌ல்க‌ள் கேட்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

ப‌த‌றிப் போல் காவ‌ல்துறையில் வ‌ழ‌க்குப் ப‌திவு செய்த‌தால் அவ‌ள் த‌ப்பித்தாள். சில‌ர் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டு சைல‌ண்டாக‌ இருந்து விடுவ‌தும் உண்டு.

தனஞ்செயன் ஒரு தொழில‌திப‌ர். அவ‌ருடைய‌ செல்போனில் ஒருநாள் காலை இதே போல‌ ஒரு த‌க‌வ‌ல். இது காவல் துறைச் செய்தி. உங்க‌ள் செல்போனில் நீங்க‌ள் குழ‌ந்தைக‌ளை ஆபாச‌மாக‌ப் ப‌ட‌ம் எடுத்து வைத்திருப்ப‌தாய் த‌க‌வ‌ல் வ‌ந்திருக்கிற‌து. அது ச‌ட்ட‌ விரோத‌மான‌து. ப‌த்தாண்டு சிறைத்த‌ண்ட‌னைக்கு உரிய‌து. இந்த‌ சிக்க‌லில் இருந்து விடுவிக்க‌ வேண்டுமானால் இத்த‌னை ஆயிர‌ம் டாலர்க‌ள் க‌ட்டுங்க‌ள் என்று கூறிய‌து அந்த‌ செய்தி.

அவ‌ர் அதை பெரிதாக‌ எடுத்துக் கொள்ளாம‌ல் செல்போனுக்குள் நுழைந்தார். செல்போன் முழுவ‌தும் குழ‌ந்தைக‌ளின் ஆபாச‌ப் ப‌ட‌ங்க‌ள் நிர‌ம்பியிருந்த‌ன‌. ச‌ட்டென‌ நெற்றி விய‌ர்க்க‌, அறையைப் பூட்டி விட்டு அழிக்க‌ முய‌ன்றார். ஊஹூம்.. ப‌ட‌ங்க‌ளை அழிக்க‌ முடிய‌வில்லை. இந்த‌ப் ப‌ட‌மெல்லாம் ஒரு நாள் காலையில் பூத‌ம் தூக்கிக் கொண்டு வ‌ந்து போட்ட‌து என்றால் யாராவ‌து ந‌ம்புவார்க‌ளா ? ந‌ம்மை ஏள‌ன‌மாய்ப் பார்ப்பார்க‌ளா ? ஏதாவ‌து ச‌ட்ட‌ சிக்க‌ல்க‌ள் வ‌ருமா ? என‌ ப‌ல‌ கேள்வி ம‌ன‌துக்குள்.

இருந்தாலும் துணிச்ச‌லாக‌ ஒரு காவ‌ல்துறை அதிகாரியைச் சென்று பார்த்த‌தால் த‌ப்பித்தார். இப்ப‌டி ஒரு செல்போனை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ந்து அந்த‌ செல்போன் உரிமையாள‌ரை மிர‌ட்டி ப‌ண‌ம் ப‌றிக்கும் செய‌லைச் செய்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தும் வைர‌ஸ் “ரான்ச‌ம்வேர்” (Ransomware) என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து.

மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் மெயில் அனுப்பி “உங்க‌ளுக்கு உகாண்டாவில் நூறு கோடி விழுந்திருக்கிற‌து”, “ஆப்பிரிக்காவில் ஐம்ப‌து கோடி விழுந்திருக்கிற‌து” என்றெல்லாம் சொல்லி போர‌டித்த‌வ‌ர்க‌ள் இப்போது த‌ங்க‌ள் த‌ள‌த்தை க‌ணினி சார்ந்த‌ விஷ‌ய‌ங்க‌ளிலிருந்து ஸ்மார்ட் போன் சார்ந்த‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு மாற்றியிருக்கிறார்க‌ள். அத‌னால் தான் ந‌ம்முடைய‌ எச்ச‌ரிக்கை உண‌ர்வை ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ளோம் நாம்.

அப்ப‌டி என்னென்ன‌ எச்ச‌ரிக்கைக‌ள்

( தொட‌ர்ந்து அல‌சுவோம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *