பழைய புகைப்படங்கள்

Image result for old photos

பஞ்சத்தில் அடிபட்ட
பல்லிபோல
என்று விமர்சிக்கப்பட்ட
என்னுடைய பழைய புகைப்படங்கள்.

திருவிழாப் பயணத்தில்
சிறுநீர் கழிக்கையில்
யாரோ எடுத்த
சிறுவயதுப் புகைப்படம்.

தலையில் ஆப்பிரிக்க காடுகளை
வளர்த்துத் திரிந்த
கல்லூரிப் புகைப்படங்கள்.

எலும்பும் தோலுமாய்
பரிசோதனைக்கூட
எலும்புக்கூடு கணக்கான
பள்ளிக்கூட புகைப்படங்கள்,

எத்தனையோ
கிண்டல்களைச் சுமந்தாலும்
எல்லாம்
பத்திரமாய் இருக்கின்றன என்னிடம்.

கடந்து வந்த பாதைகள்
தரும் சுகம்
நிகழ்கால சோகங்களை
தரையிறக்க உதவுகின்றன
எப்படியேனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *