Christianity : Sunday’s School மீட்பின் பயணம்

 

Image result for deliverance from egypt

 

அவையோருக்கு அன்பின் வணக்கம். உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு கதையை மறுபடியும் ஒருதடவை உங்களுக்கெல்லாம் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.

உலக அதிசயத்துல ஒண்ணு தான் எகிப்திய பிரமிடு. ஆனா அதைவிடப் பெரிய அதிசயத்தைக் கடவுள் எகிப்தில் நடத்தினார். இது நடந்தப்போ பார்வோன் மன்னன் எகிப்தோட அரசரா இருந்தார். இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டில் சுமார் ஆறு இலட்சம் பேர் இருந்தார்கள்.

எகிப்தியர்கள் இவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் கட்றது, நகர்களை உருவாக்கறது எல்லாம் தான் இவங்க வேலை. ஒரு காலத்துல நல்ல மரியாதையோடு இருந்தவங்க பிறகு அடிமைகளா மாறிப் போனாங்க.

இஸ்ரவேல் மக்கள் கடவுளை நோக்கி மன்றாடினாங்க. அப்போ கடவுள் ஒரு ஹீரோவை க‌ண்டுபிடிச்சு அவ‌ர்க‌ளை மீட்க‌ அனுப்பினார். அவ‌ர் தான் மோசே. மோசே எதையும் த‌னியா செய்ய‌ல‌. க‌ட‌வுள் மோசே மூல‌மா எல்லா அதிச‌ய‌ங்க‌ளையும் செய்தார்.

ப‌த்து வித‌மான‌ வாதைக‌ள் பார‌வோனுடைய‌ நாட்டை மிர‌ட்டிச்சு. வேற‌ வ‌ழியில்லாம‌ பார்வோன் ம‌ன்ன‌ன் இஸ்ர‌யேல் ம‌க்க‌ளை நாட்டை விட்டு அனுப்பி வெச்சான். ம‌க்க‌ள் எகிப்தை விட்டு சுத‌ந்திர‌மா வெளியே வ‌ந்தாங்க‌.

போற‌ வ‌ழியில‌ க‌ட‌ல் குறுக்கே வ‌ந்துச்சு. அங்கே அவ‌ர்க‌ள் ரெஸ்ட் எடுத்தாங்க‌. அப்போ பார்வோன் ம‌ன்ன‌னுடைய‌ அர‌ண்ம‌னையில‌ விவாத‌ம்.

“ஏன் நாம‌ இந்த‌ அடிமைக‌ளை அனுப்பி வெச்சோம் ? இனிமே இந்த‌ வேலைக‌ளையெல்லாம் யாரு செய்ற‌து ?” பார்வோன் ம‌ன்ன‌ன் கேட்டான்

“ஆமா ம‌ன்ன‌ரே.. த‌ப்பு ப‌ண்ணிட்டோம், அவ‌ங்க‌ளை த‌ப்ப‌ விட‌க் கூடாது ” கூட‌ இருந்த‌வ‌ர்க‌ள் மூட்டி விட்டார்க‌ள்.

“என் தேரைப் பூட்டுங்க‌, எல்லா தேர்க‌ளையும் ரெடி ப‌ண்ணுங்க‌. நாம‌ போய் அந்த‌ அடிமைக‌ளை திரும்ப‌ இழுத்துக் கொண்டு வ‌ருவோம்” என்றான் ம‌ன்ன‌ன்.

ம‌ன்ன‌னோட‌ க‌ட்ட‌ளைப்ப‌டியே செய்தார்க‌ள். ப‌டை சீறிப்பாய்ந்த‌து. இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் க‌ட‌ற்க‌ரையில் கூடார‌ம‌டித்திருந்தார்க‌ள். ம‌ன்ன‌னோட‌ ப‌டை வேக‌மா வ‌ர‌தைப் பார்த்த‌தும் அவ‌ர்க‌ள் மிர‌ண்டு போனாங்க‌. மோசேயைப் பார்த்து திட்ட‌ ஆர‌ம்பிச்சாங்க‌.

“யோவ்.. என்ன‌ய்யா ? எகிப்ல‌ க‌ல்ல‌றைத் தோட்ட‌ம் இல்லேன்னா எங்க‌ளை இங்கே கூட்டிட்டு வ‌ந்தீங்க‌ ? என்ன‌ப்பா இப்ப‌டிச் செய்திட்டீங்க‌ளேப்பா” என்று ம‌க்க‌ளெல்லாம் க‌த்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌.

“நீங்க‌ ஏன் க‌வ‌லைப்ப‌ட‌றீங்க‌. க‌ட‌வுள் உங்க‌ளுக்காக‌ போரிடுவார். டென்ஷ‌ன் ஆகாதீங்க‌” என்றார் மோசே. க‌ட‌வுளின் தூத‌ர் இஸ்ர‌வேல‌ருக்கும், எகிப்திய‌ருக்கும் இடையே காவ‌லாய் நின்றார்.

அப்போ க‌ட‌வுள் மோசேயிட‌ம் பேசினார். “உன் கோலை க‌ட‌லின் மீது நீட்டு, கடலும் வ‌ழிவிடும்” என்றார்.

க‌ப்ப‌ல் இருந்தா க‌ட‌ல்ல‌ போலாம், காலால‌ எப்ப‌டி க‌ட‌ல்ல‌ போற‌து ? நீந்திப் போக இதென்ன‌ நீச்ச‌ல் குள‌மா ? என்றெல்லாம் மோசே யோசிக்க‌வில்லை. கையை நீட்டினார். காற்று வ‌ந்த‌து, என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் ! ஒரு க‌ட‌ல் இர‌ண்டாக‌ப் பிரிந்த‌து. க‌த்தியை வெச்சு த‌ண்ணியை ரெண்டா வெட்ட‌ முடியுமா ? காற்றை வெச்சே க‌ட‌வுள் வெட்டிட்டாரு.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ரோட்ல‌ போற‌து மாதிரி க‌ட‌ல் ந‌டுவில‌ ந‌ட‌ந்து போனாங்க‌. பின்னாடியே எகிப்திய‌ர்க‌ள் இதைப் பார்த்து அச‌ந்து போனாங்க‌. ஆனாலும் வில‌கிப் போக‌ல‌. முட்டாள்த‌ன‌மா க‌ட‌லுக்குள்ளே தேர்க‌ளோடு பாய்ந்தாங்க‌. இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ம‌றுக‌ரை அடையும் வ‌ரை க‌ட‌வுள் அமைதியா இருந்தாரு. ம‌று க‌ரையில‌ போய் சேர்ந்த‌தும், மோசே ம‌றுப‌டியும் கோலை க‌ட‌ல்ல‌ நீட்டினார்.

ஒதுங்கி நின்ன‌ த‌ண்ணீர் ம‌தில் உடைஞ்சு பாஞ்ச‌து. சுனாமி மாதிரி சீறி வ‌ந்த‌ த‌ண்ணியைப் பாத்த‌ எகிப்திய‌ர்க‌ள் த‌ப்பிச்சு ஓட‌ டிரை ப‌ண்ணினாங்க‌. ஆனா டூ லேட்.. த‌ண்ணி அவ‌ர்க‌ளை மூழ்க‌டிச்சுடுச்சு, எல்லாரும் செத்துப் போனாங்க‌. ஒருத்த‌ன் கூட‌ த‌ப்ப‌ல

இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் இதைப் பார்த்து விய‌ந்து போனாங்க‌. க‌ட‌வுளிட‌மும் மோசேயிட‌மும் அவ‌ர்க‌ள் ந‌ம்பிக்கை வெச்சாங்க‌.

இந்த‌ க‌தையில் நாம‌ க‌த்துக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்ன‌ன்னா ?

ந‌ம‌க்கு முன்னாடி க‌ட‌ல் போல‌ பிர‌ச்சினை வ‌ந்தாலும் ச‌ரி, ப‌டை போல‌ பிர‌ச்சினை வ‌ந்தாலும் ச‌ரி, தேர் போல‌ பிர‌ச்சினை விர‌ட்டி வ‌ந்தாலும் ச‌ரி க‌ட‌வுளை முழுமையா ந‌ம்பினால் அதிச‌ய‌மான‌ விடுத‌லை நிச்ச‌ய‌ம் கிடைக்கும். ந‌ம் ப‌ல‌த்தை அல்ல‌, இறைவ‌னின் ப‌ல‌த்தை ந‌ம்புவோம்.

என‌ கூறி விடை பெறுகிறேன் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *