Sunday’s Class Skit : Christianity

 

பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிற அட்டையுடன் நிற்கிறார்கள்.

Image result for Skit by sunday school

பச்சை 1 : கடவுள் தான் எல்லாத்தையும் படச்சார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அவர் தான். இந்த சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே அவர் படைத்தது தான். இந்த பூமியை அவர் படைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாத்தையும் படைச்சார். பாருங்க, பூமி எப்படி பச்சைப் பசேல்ன்னு இருக்கு.

கடைசில மனுஷனைப் படைச்சார். ஆதாமையும், ஏவாளையும் படைச்சார். நாம அவரை அன்பு செய்யணுங்கறது மட்டும் தான் அவரோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக இந்த உலகத்துல எல்லா வசதிகளையும் செய்து வெச்சார்.

நாம சுதந்திரமா எதை வேணும்ன்னாலும் செய்யற மனசை நமக்குத் தந்தார். ஆனா, அவரை மட்டுமே நேசிக்கணும். அவர் சொல்றதை மட்டுமே கேக்கணும்ன்னு நினைச்சாரு.

ஆனா…ஆனா….

 

கறுப்பு 2 :

ஆதாமும் ஏவாளும் பாவம் செஞ்சாங்க. ஒரே ஒரு ம‌ர‌த்துல‌ இருந்த‌ க‌னியை ம‌ட்டும் சாப்ட‌வேண்டாம்ன்னு சொன்னாரு. அதைத் த‌விர‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌ர‌ங்க‌ள், ப‌ழ‌ங்க‌ள் எல்லாம் இருந்துச்சு. ஆனா ம‌னுஷ‌ன் கேக்க‌ல‌. அந்த‌ ப‌ழ‌த்தைச் சாப்பிட்டு பாவ‌ம் செஞ்சாங்க‌. அவ‌ங்க‌ளை பாவ‌ம் செய்ய‌த் தூண்டின‌து சாத்தான்.

அத‌னால‌ உல‌க‌த்துல‌ பாவ‌ம் வ‌ந்துச்சு. க‌ட‌வுள் ப‌ரிசுத்த‌ர். அவ‌ர் கிட்டே பாவ‌ம் இருக்க‌ முடியாது. அத‌னால‌ ஆதாமும் ஏவாளும் க‌ட‌வுளோட‌ ஏதேன் தோட்ட‌த்தை விட்டு வெளியே துர‌த்த‌ப்ப‌ட்டாங்க‌.

ஆதாமோட‌ பாவ‌ம் ந‌ம‌க்கு த‌லைமுறை த‌லைமுறையா வ‌ருது. அது தான் ஜென்ம‌ பாவ‌ம். ம‌னுஷ‌ இய‌ல்பு. அத‌னால‌ தான் யாரும் சொல்லாம‌லேயே நாம‌ த‌ப்பு செய்ய‌றோம்.

நாம‌ பாவியா இருக்கும் போ, க‌ட‌வுளோட‌ இருக்க‌ முடியாது. அத‌னால‌ தான் ந‌ம்ம‌ பாவ‌த்தையெல்லாம் சொல்லி அவ‌ர் கிட்டே ம‌ன்னிப்பு வாங்க‌ வேண்டிய‌து ரொம்ப‌ முக்கிய‌ம்.

சும்மா.. ம‌ன்னிச்சுக்கோங்க‌ ந்னு சொன்னா ம‌ன்னிப்பு கிடைக்காது. அதுக்கு ஒரு மிக‌ப்பெரிய‌ விலை இருந்துச்சு…

 

 

சிவ‌ப்பு 3 :

அத‌ நான் சொல்றேன்.

ப‌ழைய‌ கால‌த்துல‌ எல்லாம் ஒரு பாவ‌ம் செய்தா, அதோட‌ பிராய‌ச்சித்த‌மா ஒரு ‘ப‌லி’ கொடுக்க‌ வேண்டியிருந்த‌து. அப்போ தான் பாவ‌ம் ம‌ன்னிக்க‌ப்ப‌டும். ஆடு, மாடு, புறா இப்ப‌டி ஏதோ ஒரு உயிர்ப்ப‌லி கொடுத்தா தான் பாவ‌ம் நீங்கும்.

உல‌க‌த்துல‌ பாவ‌ம் பெருகிச்சு. க‌ட‌வுளோட‌ அன்பு ம‌ட்டும் குறைய‌வேயில்ல‌. அவ‌ர் ம‌க்க‌ளோட‌ பாவ‌த்தை நீக்க‌ ஒரு வ‌ழி செஞ்சாரு. த‌ன்னோட‌ ஒரே ம‌க‌னை உல‌குக்கு அனுப்பி, அவ‌ரையே ஒரு ப‌லியா கொடுக்க‌ தீர்மானிச்சாரு. யாராவ‌து த‌ன்னோட‌ சொந்த‌ ம‌க‌னை அடுத்த‌வ‌ங்க‌ளுக்காக‌ ப‌லி கொடுப்பாங்க‌ளா ? க‌ட‌வுள் கொடுத்தாரு.

இயேசு அதுக்காக‌த் தான் உல‌க‌த்துக்கு வ‌ந்தாரு. சிலுவையில‌ தொங்கி ம‌ரிச்சாரு. ந‌ம்ம‌ எல்லாரோட‌ பாவ‌ங்க‌ளுக்காக‌வும் இற‌ந்தாரு. அவ‌ரு துவ‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர். அத‌னால‌ அவ‌ரோட‌ ஒரு ம‌ர‌ண‌ம், உல‌க‌த்திலுள்ள‌ எல்லாரோட‌ பாவ‌ங்க‌ளையும் நீக்கும் வ‌ல்ல‌மை உடைய‌தா இருக்கு.

ஆனா.. அந்த‌ ம‌ன்னிப்பை அடைய‌ ஒரே ஒரு க‌ண்டிஷ‌ன்.

இயேசு ந‌ம்ம‌ பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ரிச்சாருன்னு ந‌ம்ப‌ணும். அவ‌ர் கிட்டே ம‌ன்னிப்பு கேக்க‌ணும். ம‌றுப‌டி பாவ‌ம் செய்யாம‌ இருக்க‌ முய‌ற்சி செய்ய‌ணும்.

 

வெள்ளை 4

ந‌ம‌க்கு க‌ட‌வுள் தீர்மானிக்கும் உரிமையைத் த‌ந்திருக்கிறார். தீர்மான‌த்தை எடுக்க‌ டைம் பாக்க‌ தேவையில்லை. ந‌ம்ம‌ பாவ‌ம் க‌ட‌வுளால் க‌ழுவ‌ முடியாத‌ அள‌வுக்கு பெருசா மாறாது. க‌ட‌வுளோட‌ பார்வையில‌ நாம‌ அவ‌ரோட‌ பிள்ளைக‌ள் தான் எப்ப‌வுமே.

நாம‌ எப்போ ம‌ன‌ம் திரும்பி ம‌ன்னிப்பு கேப்போம்ன்னு அவ‌ரு காத்திட்டிருக்காரு. ம‌ன்னிப்பு கேட்டா அவ‌ர் பிகு ப‌ண்ற‌தில்லை, உட‌ன‌டியா ம‌ன்னிக்கிறார். அத‌ன்பிற‌கு நாம‌ அவ‌ரோட‌ விருப்ப‌ப்ப‌டி வாழ‌ முடிவெடுக்க‌ணும்.

 

ம‌ஞ்ச‌ள் 5 :

க‌ட‌வுளோட‌ பிள்ளையா மாறுவ‌து ரொம்ப‌வே ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம். என் அப்பா பெரிய ஆபீசர் ந்னு சொல்லி நாம சந்தோசப்படுவோம். ஆனா,  உல‌க‌த்தைப் ப‌டைச்ச‌வ‌ரு ந‌ம்ம‌ அப்பான்னு சொல்ற‌து அதைவிட எவ்ளோ பெரிய‌ விஷ‌ய‌ம். இந்த‌ உல‌க‌த்துல‌ பாவ‌மில்லாம‌ வாழ்ந்து சொர்க்க‌த்துல‌ அவ‌ர் கூட‌ வாழ‌ற‌தை விட‌ பெரிய‌ ஆன‌ந்த‌ம் எதுவும் இல்லை.

அது தான் நித்திய‌ ஜீவ‌ன்

முடிவில்லாத‌ வாழ்வு.

 

ப‌ச்சை :

க‌ட‌வுள் ந‌ம்மை அன்புசெய்கிறார். அவ‌ர் ந‌ம்மை ப‌டைச்சார். சுத‌ந்திர‌மா முடிவெடுக்கும் உரிமையை ந‌ம‌க்குத் த‌ந்திருக்கிறார்.

 

க‌ருப்பு :

ம‌னுஷ‌னோ “பாவ‌ம்” செய்ய‌ணுன்னு தீர்மான‌ம் எடுத்தான். கடவுளின் கட்டளையை மீறினான். அத‌னால‌ உல‌க‌த்துல‌ பாவ‌ம் நுழைஞ்சுது

 

சிவ‌ப்பு :

பாவம் எங்கே இருக்கோ அங்கே ஆன்மீகம் செத்து விடும். பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கும். மனிதன் பாவம் செய்தபோது கடவுள் வருந்தினார். ஆனாலும் ந‌ம்மை மீட்க‌ த‌ன‌து ஒரே செல்ல‌ ம‌க‌னை உல‌குக்கு அனுப்பி அவ‌ரைப் ப‌லியாக்கினார்.

வெள்ளை :

நாம‌ க‌ட‌வுளிட‌ம் ந‌ம்ம‌ பாவ‌த்துக்காக‌ ம‌ன்னிப்பு கேக்க‌ணும். க‌ட‌வுள் ந‌ம்ம‌ பாவ‌ங்க‌ளை உட‌ன‌டியா ம‌ன்னிக்க‌ வ‌ல்ல‌வ‌ராய் இருக்கிறார். நாம கடவுளோடு எப்போதும் சேர்ந்தே இருக்கணும்ன்னு கடவுள் விரும்புகிறார்.

ம‌ஞ்ச‌ள்

க‌ட‌வுள் ந‌ம்மை ரொம்ப‌ அன்பு செய்றாரு. நாம‌ அவரோட‌ பிள்ளைக‌ளா, அவ‌ர் கூட‌ அழிவில்லாத‌ விண்ண‌க‌ வாழ்க்கைக்குள்ளே போக‌ணும்ன்னு நினைக்கிறாரு.

 

க‌ருப்பு

 

பாவ‌ம் இல்லாத‌ ம‌னித‌ன் இல்லை. நானும், நீங்க‌ளும், அந்த‌ பெரிய‌ ம‌னுஷ‌னும், இந்த‌ சின்ன‌ ம‌னுஷ‌னும், ஆணும், பெண்ணும் எல்லாருமே பாவிக‌ள் தான். அத‌னால‌ எல்லாருமே க‌ட‌வுள் கிட்டே ம‌ன்னிப்பு கேக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். “நான் பாவி இல்லைன்னு ஒருத்த‌ன் சொன்னா, அது பொய்” ந்னு பைபிள் சொல்லுது.

சிவ‌ப்பு

இயேசு இற‌ந்த‌து யாருக்காக‌வோ இல்லை. உன‌க்காக‌. அவ‌ர் ம‌த‌ம், இன‌ம், மொழி, ஜாதி எல்லாம் பாக்க‌ல‌. எல்லாரும் அவ‌ரோட‌ பிள்ளைங்க‌ தான். இது உங்க‌ளுக்கான‌ இல‌வ‌ச‌ப் ப‌ரிசு. நீங்க‌ விரும்பி, ம‌ன‌ம் திரும்பி பாவ‌ங்க‌ளுக்கு ம‌ன்னிப்பு கேட்டா போதும்.

ப‌ச்சை

மூணு நாளைக்கு அப்புற‌ம் இயேசு உயிர்த்தார். இப்போ க‌ட‌வுளோட‌ தான் இருக்கார். க‌ட‌வுளாயும் இருக்கார்.

வெள்ளை

 

நாம‌ செய்ய‌வேண்டிய‌தெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். அப்பா ந‌ம்ம‌ கிட்டே ஒரு ப‌ரிசை கொடுத்திருக்காரு. அதை ஏற்றுக்கொண்டு பிரிச்சு பாத்து ச‌ந்தோச‌மா வாழ்ற‌து தான். அந்த‌ப் ப‌ரிசு மீட்பு. அதை பிரிக்கிற‌து நாம‌ கேட்கிற‌ ம‌ன்னிப்பு.

சிவ‌ப்பு

உங்க‌ள் மீட்பை இயேசு எளிமையாக்கியிருக்கிறார்.

சிந்திப்போம், இறைவ‌ன் இர‌த்த‌ம் சிந்தி வாங்கிய‌ மீட்பை ந‌ம‌க்கு இல‌வ‌ச‌மாய்த் த‌ருகிறார். பெற்றுக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *