Sunday School : Jacob’s Dream

Image result for Jacob's dream

எல்லோருக்கும் அன்பின் வணக்கம்.

எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு கதையை நானும் ஒருதடவை உங்களுக்குச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.

விசுவாசத்தின் தந்தை யாருன்னு கேட்டா ஆபிரகாம்ன்னு டக்குன்னு சொல்லுவீங்க. அவரோட பையன் தான் ஈசாக். ஈராக் ரபேக்காவை கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவருக்கு இரண்டு பசங்க. மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு.

யாக்கோபு அம்மாவோட வயிற்றில இருக்கும்போதே அண்ணன் கூட வம்பு பண்ணிட்டிருந்தான். பிறக்கும்போ, அவனோட காலைப் புடிச்சிட்டே பொறந்தான். வளர்ந்தப்போவும் இரண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை இல்லை. ஏசா டாடி செல்லம். ஏன்னா நல்லா வேட்டையாடி சமைச்சு கொடுப்பான். யாக்கோபு மம்மி செல்லம். வீட்லயே இருப்பான்.

ஈசாக்குக்கு வயசான காலத்துல மூத்த மகனை கூப்டாரு “ஏசா, நீ போய் வேட்டையாடி அதை எனக்கு சமைச்சு கொடு. அதைச் சாப்டுட்டு உனக்கு ஆசி வழங்குவேன்” ந்னு சொன்னாரு. அவன் ஓகே ந்னு சொல்லிட்டு கிளம்பினான். ஆனா அவனோட அம்மா நைஸா ஆட்டுக்கறி சமைச்சு யாக்கோபு கிட்டே கொடுத்தனுப்பி “நான் ஏசா” ந்னு பொய் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிட்டான்.

ஏசா விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டென்ஷனாயிட்டாரு. அதனால யாக்கோபு அந்த நாட்டை விட்டு ஓடி காரான் ங்கற இடத்துக்கு போனாரு. போற வழியில நைட் ஆனதும் படுத்து தூங்கினாரு. ஒரு கல்லை எடுத்து தலையணை மாதிரி வெச்சுட்டு தூங்கினாரு.

த‌லைய‌ணை சாஃப்டா இல்லேன்னா க‌ல்லு மாதிரி இருக்குன்னு நாம‌ சொல்லுவோம். இவ‌ரு க‌ல்லையே த‌லைய‌ணையா வெச்சு தூங்கியிருக்காரு. தூங்கும்போ ஒரு க‌ன‌வு. ஒரு ஏணி பூமியில‌ நிக்குது. ம‌றுமுனை வான‌த்துல‌ நிக்குது. தூத‌ர்க‌ள் அதுல‌ ஏறி இற‌ங்கிட்டே இருக்காங்க‌. ஆண்ட‌வ‌ர் அத‌ன் மேல‌ நின்னுட்டு யாக்கோபுக்கு ஆசி வ‌ழ‌ங்கினார்.

“இந்த‌ நிலத்தை நான் உன‌க்கு த‌ருவேன். உன் ச‌ந்த‌தி ம‌ண‌ல் போல‌ எண்ண‌ முடியாத‌தா இருக்கும். நீ எங்கே போனாலும் நான் உன‌க்கு காவ‌லா இருப்பேன். க‌டைசில‌ இங்கே கொண்டு வ‌ந்து சேப்பேன்” ந்னு சொன்னாரு.

யாக்கோபு தூங்கம் தெளிஞ்சு எழும்பினாரு. “உண்மையிலேயே க‌ட‌வுள் இங்கே இருக்காரு. என‌க்கு அது தெரியாம‌ போயிடுச்சே. இது தான் க‌ட‌வுளோட‌ வீடு. வான‌த்தின் வாச‌ல்” ந்னு சொல்லி த‌ன்னோட த‌லைய‌ணைக் க‌ல்லை அங்கே நாட்டினாரு. “இந்த‌ இட‌த்தை லூசுன்னு சொல்றாங்க‌, உண்மையில் இனிமே இது பெத்தேல்” ந்னு பேரு போட்டாரு.

“நாம் போற‌ வ‌ழியில‌ க‌ட‌வுள் என்னைப் பாதுகாத்து, சாப்பாடெல்லாம் த‌ந்து ப‌த்திர‌மா வீடு திரும்ப‌ வ‌ழி செஞ்சாருன்னா அவ‌ர் தான் என் கட‌வுள். நான் ப‌த்துல‌ ஒரு பாக‌ம் காணிக்கை அவ‌ருக்குக் கொடுப்பேன்” ந்னு யாக்கோபு உறுதி செஞ்சாரு.

த‌ன்னோட‌ அப்பாவையும், ச‌கோத‌ர‌னையும் ஏமாத்திட்டு வ‌ர‌ யாக்கோபை க‌ட‌வுள் திட்ட‌லை. சாப‌ம் கொடுக்க‌ல‌. த‌ன்னோட‌ அன்பும், ஆசீர்வாத‌மும் இருக்கும்ன்னு உறுதி மொழி கொடுத்தாரு. யாக்கோபு செஞ்ச‌ த‌ப்புக்கு பல‌ன் அவ‌ரோட‌ மாமா லாபான் வீட்ல‌ அனுப‌விக்க‌ப் போறாருன்னும் க‌ட‌வுளுக்குத் தெரியும். அந்த‌ க‌ஷ்ட‌த்துக்கு முன்னாடியே த‌ன்னோட‌ முடிவைக் க‌ட‌வுள் யாக்கோபிட‌ம் சொல்லி அவ‌ரை உறுதிப்ப‌டுத்த‌றாரு.

அன்னிக்கு அந்த‌ ஏணியோட‌ மீனிங் என்னான்னு யாக்கோபுக்கு தெரிய‌ல‌. இன்னிக்கு ந‌ம‌க்குத் தெரியும். அந்த‌ ஏணி தான் இயேசு. வான‌த்துக்கும் பூமிக்கும் பால‌ம் போட்ட‌வ‌ர் அவ‌ர் தான். “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” ந்னு இயேசு, யோவான் 1 ‍ 51 ல‌ இதுக்கு விள‌க்க‌ம் சொல்லியிருக்காரு.

அது ம‌ட்டும் இல்லாம‌, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” ந்னும் இயேசு தெளிவா சொல்லியிருக்காரு. வானத்துல இருந்து மனுஷனா இயேசு கீழே இறங்கி வந்தாரு. பூமியில இருந்து நாம அவர் மூலமா வானத்துக்கு ஏறிப் போக முடியும்.

யாக்கோபு க‌ண்ட‌ க‌ன‌வு ந‌ம‌க்கு சொல்ற‌து என்ன‌ன்னா ? இயேசு கிறிஸ்துவாகிய‌ ஏணியை ந‌ம்பி, அவரை அன்பு செய்து ந‌ம்முடைய‌ வாழ்க்கையை வாழ‌ணும். அப்போ ஏஞ்ச‌ல்ஸ் க‌ட‌வுளோட‌ ஆசீர்வாத‌த்தை ந‌ம‌க்கு கொண்டு வ‌ருவாங்க‌. க‌ட‌வுள் கிட்டே போற‌துக்கு ந‌ம‌க்கு வேற‌ ஏணியே கிடையாது.

யாக்கோபு நிறைய‌ வ‌ருஷ‌ம் உல‌க‌ செல்வ‌த்துக்காக‌ ஓடி ஓடி, க‌டைசில‌ இறைவ‌ன் போதும்ன்னு வ‌ந்து நின்னாரு. அப்போ தான் அவ‌ர் பேரு இஸ்ரேல் ஆச்சு.

ச‌ண்டே ஸ்கூல் ஸ்டுட‌ன்ஸ் ஆகிய‌ நாமும் இயேசுவையே ப‌ற்றியிருக்க‌ணும், யாக்கோபு க‌டைசில‌ எல்லாத்தையும் விட்டு க‌ட‌வுளை தேடினாரு. நாம‌ க‌டைசி வ‌ரைக்கும் வெயிட் ப‌ண்ணாம‌ முத‌ல்ல‌யே க‌ட‌வுளைத் தேட‌ணும்.

யாக்கோபின் க‌ன‌வு, ந‌ம‌க்கு விழிப்பைத் த‌ர‌ட்டும்ன்னு சொல்லி விடை பெறுகிறேன், ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *