ரஜினி பற்றி ஷாரூக்.

 

sharuk-254x300

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தவிர்த்து விட்டு இந்திய சினிமாவை எழுதி விட முடியாது. தென்னிந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் முத‌ல் வ‌ட‌ இந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் வ‌ரை விய‌ந்து பார்க்கின்ற‌ ஒரு ந‌டிக‌ர். அவ‌ருட‌ன் ஒரு காட்சியிலாவ‌து த‌லைகாட்டி விட‌ வேண்டுமென்பது பல‌ ந‌டிக‌ர், ந‌டிகைய‌ரின் வாழ்நாள் இல‌ட்சிய‌ம். அவ‌ரை ஒரு முறையேனும் நேரில் பார்க்க‌ வேண்டுமென்ப‌து கோடானுகோடி ர‌சிக‌ர்க‌ளின் வாழ்நாள் ஆசை.

ஒரு சினிமா ர‌சிக‌ராக‌ வ‌ள‌ர்ந்து, க‌ண்ட‌ர்ட‌ராக‌ ப‌ணியை ஆர‌ம்பித்து இன்று ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தை வ‌சீக‌ரித்திருக்கும் ர‌ஜினிகாந்திற்கு இருக்கும் மாபெரும் குணாதிச‌ய‌ங்க‌ளில் ப‌ணிவும், ந‌ட்பு பாராட்டுத‌லும் முக்கிய‌மான‌வை. அவ‌ருடைய‌ இள‌கிய‌ ம‌ன‌தைப் புரிந்து கொண்டு அவ‌ரிட‌மிருந்து ந‌ல‌ன்க‌ளைப் ப‌றித்துக் கொள்ளும் ந‌ப‌ர்க‌ளும் உண்டு. அவ‌ற்றையெல்லாம் அறிந்தாலும் ஒரு சின்ன‌ புன்ன‌கையுட‌ன் க‌ட‌ந்து போய்விடும் ப‌க்குவ‌ம் அவ‌ருடைய‌ டிரேட் மார்க் குணாதிச‌ய‌ம்.

ரா. ஒன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு சின்ன வேடத்தில், ஒரு குட்டிக் காட்சியில் தலை காட்டியிருந்தார். அது ரா.ஒன் திரைப்படம் தமிழகத்தில் புகழ்பெறப் போதுமானதாக இருந்தது. ஷாரூக்கான் மீதான நட்பின் வெளிப்பாடு அது. உயரத்தில் இருக்கும் இரண்டு நண்பர்கள் திரையில் கைகுலுக்கிக் கொள்ளும் அடையாளம் அது.

இந்தக் காட்சியில் அவர் நடிப்பாரா? இல்லையா? என பலத்த சந்தேகம் இருந்தது. காரணம் ரஜினியின் உடல் நிலை சரியில்லை. அவரால் நடிக்க முடியாது எனும் நிலமை ஒரு புறம். நடிக்கவே கூடாது என அடம் பிடித்த குடும்பம் இன்னொரு புறம். ஆனால் கடைசியில், அந்த தடைகளையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் அந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்தார் ரஜினி.

Image result for rajini shahrukh

ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப்போக வைத்துவிட்டது. இதுகுறித்து தனது டுவிட்டரில் ரஜினியைப் புகழ்ந்துத் தள்ளினார் ஷாருக்கான். ‘மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது ரஜினி சார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்’. என அவர் செய்த டுவீட் பல்லாயிரம் ரீ டுவீட்களுடன் திரையுலகை அதிர வைத்தது.

படத்தில், ரஜினி சார் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிந்தார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால். அவர் இந்தப் படத்தில் நடிப்பார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி,’ என்று தனது இதயத்தின் ஆழத்திலிருந்து புகழ் மழையைப் பொழிந்தார் ஷாரூக்.

அந்த நட்பின், ரசனையில் நீட்சியாக தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ரஜினியைப் புகழ்ந்து ஒரு பாடல் வைத்திருந்தார். அதில் ரஜினியின் கட் அவுட்களுக்கு முன்னால் நின்று ஆடிப் பாடுவது போல காட்சி அமைத்திருந்தார். படம் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தக் காட்சியை விளம்பர உத்தியாய் வைத்தார் என விமர்சகர்கள் கரிந்து கொட்டினார்கள். ஆனால் ஷாரூக் கவலைப்படவில்லை. அவர் ரஜினியை ம‌ன‌ம் விட்டுப் பாராட்டினார் ஷாரூக்.

Image result for rajini in Ra1

“உலகின் தலைசிறந்த சினிமா டெக்னீஷியன்களும், நடிகர்களும் தமிழகத்தில் உள்ளனர். இங்கு தயாராகும் படங்கள் உலகத்தரத்தில் உள்ளன. ரஜினி என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். அப்போது அவரை சந்திக்க முடியுமா? என்று ஏங்கியது உண்டு. இன்று அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.

ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது. ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் நடிக்க இயலாது. அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம், அது தான் சென்னை எக்ஸ்பிர‌ஸ்.

தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.  அஜீத் எனக்கு நல்ல நண்பர்.  மணிரத்னம்,சந்தோஷ் சிவன் என்று என் மனசுக்கு பிடித்த  நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கி றார்கள்.

உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான்.  இது எல்லோருக்கும் தெரியும்.   ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.  அதனால்தான் சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன்.  இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும்  ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றை செய்த திருப்தி இருக்கிறது.

ரஜினி, கமல் ஆகிய இரு மாபெரும் நடிகர்களுடன் நடித்த அதிர்ஷ்டசாலி நான். ரஜினி சாரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள விரும்புவது அவருடைய பணிவைத் தான். என்றாவது ஒருநாள் ரஜினி சார் போல நான் அடக்கத்தின் உருவமாக மாற முடியும் என்று கருதுகிறேன். அவர் அற்புதமான மனிதர். என்னை பல வழிகளில் நெகிழச் செய்து விட்டார்.

Image result for Kochadaiyaan shahRukh

ரஜினிகாந்தின் மோஷன் கேப்சரிங் படமான கோச்சடையான் ஆடியோ வெளியானபோது, “நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன்” என மேடையில் பேசி அரங்கை அதிரவைத்தார். “பெரும்பாலான நடிகர்கள் அவங்க அவங்க வேலையைப் பார்த்து விட்டுப் போய்விடுவார்கள். ரஜினி அப்படியல்ல. வேலையை ஆத்மார்த்தமாகச் செய்பவர். தனது வேலையை இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி என்பதைக் குறித்து சிந்திப்பவர். அவரது இந்த கடின உழைப்பு நான் வியந்து பார்க்கும் விஷயம். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டிருக்கும் விஷயம் அது.

இருப‌த்து நான்கு ஆண்டுக‌ளுக்கு முன்பு நான் சென்னை வ‌ந்திருந்தேன். அப்போது ர‌ஜினி சாரைத் தொலைவிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்த‌து. அவ‌ர் சிக‌ரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் காட்சியை க‌ண்ணாடியில் பார்த்து ப‌ழ‌கிக் கொண்டிருந்தார். அவ‌ருடைய‌ தொட‌ர் முய‌ற்சி என்னை விய‌க்க‌ வைத்த‌து. என்றார்.

சென்னைக்கு வரும்போதெல்லாம், சென்னை எனக்கு ஏராளமான நட்பையும், அன்பையும் பரிமாறியிருக்கிறது. எனவே சென்னை வருவது எனக்கு எப்போதுமே சிலிர்ப்பான அனுபவம். பாலசந்தர், ஷங்கர் போல இந்தியத் திரையுலகை வியக்க வைத்த பல இயக்குனர்களில் நகரம் இது. என சென்னையைப்ப் பற்றியும் ஷாரூக் பாராட்டத் தவறவில்லை.

உச்ச‌த்தில் இருக்கும் ஒருவ‌ர், உச்ச‌த்தில் இருக்கும் இன்னொருவ‌ரைப் பாராட்டுவ‌து அபூர்வ‌ நிக‌ழ்ச்சி. ர‌ஜினிகாந்த் பாராட்டு வ‌ழ‌ங்க‌ என்றைக்குமே த‌ய‌ங்காத‌வ‌ர். க‌ம‌ல‌ஹாச‌னை மேடையில் வைத்து உருக‌ உருக‌ உய‌ர்த்திப் பேசி திரையுல‌க‌த்தை விய‌க்க‌ வைத்த‌வ‌ர். அதே குணாதிச‌ய‌ம் ஷாரூக்கானுக்கும் இருப்ப‌தால் தான் அவ‌ர் வ‌ட‌க்கே சூப்ப‌ர் ஸ்டாராய் இருக்கிறார்.

 

( THOZHAMAI PATHIPPAGAM )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *