Christianity : Skit : உல்லாசப் பயணம்

 

Image result for Jesus heaven

 

ந 1 : ரொம்பவே ஜாலியா இருக்கு. எவ்ளோ நாளா எதிர்பார்த்திட்டு இருக்கேன் தெரியுமா ? இந்த டூர்ல ஒரு கலக்கு கலக்கணும்.

ந 2 : நானும் அப்படித் தான். இந்த டூர் தான் செம டூரா இருக்கப் போவுது. நேற்றே போய் நாலஞ்சு செட் டிரஸ் வாங்கிட்டேன். ஸ்டைலான கலர்புல் டிரஸ். போட்டுட்டு போனா செமயா இருக்கும்.

ந 3 ; நானும் போய் ரெண்டு செட் ஷூ வாங்கினேன். இனி ஒரு செப்பல் வாங்கணும். மற்றபடி டிரஸ் எனக்கு நிறையவே இருக்கு.

ந 4 : நான் கொஞ்சம் மெடிசின்ஸ் கூட வாங்கி வெச்சிருக்கேன். ஒரு வேளை நமக்கு ஹெல்த் வீக் ஆனா சாப்டணும்ல.

ந 5 : ஆமா, நமக்கு ஒரு ‘முக்கியத் தகவல்கள்’ ந்னு ஒரு லிஸ்ட் குடுத்தாங்க. பாத்தீங்களா ? அதுல எல்லாம் கிளியரா போட்டிருக்கு. அதன்படி எல்லா பிரிப்பரேஷனும் செஞ்சா ரொம்ப சிம்பிளா இருக்கும்.

ந 6 : ஆமா நானும் பாத்தேன். ஸ்டெப் பை ஸ்டெப்பா நான் எல்லாத்தையும் பண்ணி ரெடியா இருக்கேன்.

ந 1 : அதென்னப்பா ? நான் பாக்கவே இல்லையே.. இன்ஸ்ட்ரக்ஷன் லிஸ்ட் ? ரொம்ப முக்கியமா ?

ந 2 : நான் எத்தனையோ டூர்க்கு போயிருக்கேன். எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை. கலக்கிடுவேன். உங்களை மாதிரி புது பசங்க தான் அதையெல்லாம் படிக்கணும்.

ந 3 : ஆமா, நானும் படிக்கல. அதெல்லாம் தேவையில்லாத விஷயம். பை த வே… உன்னோட எஸ்.எல்.ஆர் கேமரா எடுத்து வெச்சிருக்கியா ? நிறைய ஃபோட்டோ எடுக்கணும்.

ந 4 : ஆமா.. நான் எடுத்து வெச்சிருக்கேன். நாம போடற செல்ஃபில ஃபேஸ் புக்கே கலக்கணும். எல்லாரும் மெரண்டு போணும். யாராச்சும் வீடியோ கேமரா வெச்சிருக்கீங்களா ?

ந 5 : நான் வெச்சிருக்கேன்.. எடுத்துட்டு வரேன். சார்ஜர் எல்லாம் ரெடியா வெச்சிருக்கேன்.

ந 6. நான் நிறைய சாங்ஸ் எல்லாம் பிராக்டிஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதைப் பாடி நாம ஜாலியா இருக்கலாம். கிட்டார் எடுத்துட்டு வரேன். நான் இப்போ சூப்பரா அதையும் பிராக்டிஸ் பண்ணிட்டேன்.

ந 7 : சரி, நான் இன்னொருவாட்டி போய் செக்லிஸ்ட் பாத்து எல்லாம் சரி பண்ணிக்கறேன். நாளை ச‌ந்திப்போம்.

ந 1 & 2 : இவன் என்னடா.. செக்லிஸ்ட்.. பக் லிஸ்ட் ந்னு கடுப்படிக்கிறான். சரி… சரி கெளம்பு.. நாளைக்கு ஏர்போர்ட் ல மீட் பண்ணுவோம்.

( எல்லோரும் சிரிக்கிறார்கள் )

 

*

 

காட்சி 2

 

ஏர் போர்ட்

 

எல்லோரும் வரிசையில் நிற்கிறார்கள்.

 

ஆபீச‌ர் : வாங்க‌ சார்… குட் மார்ணிங்

ந‌ 1 : குட்மார்ணிங்..

ஆ : டிக்க‌ட் குடுங்க‌. செக் ப‌ண்ண‌ணும்

ந‌ 1 : வாட்.. டிக்கெட்டா… டி..டிக்கெட் வாங்க‌லையே…

ஆ : டிக்கெட் வாங்காம‌ எப்ப‌டி ஃபிளைட் ல‌ ஏற‌ முடியும் ?

ந‌ 1 : நான்.. ம‌த்த‌ எல்லா விஷ‌ய‌மும் வாங்கியிருக்கேன்.. டிர‌ஸ், சாப்பாடு, மெடிசின்.. எல்லாம்.

ஆ : டிக்கெட் இல்லாம‌ நுழைய‌வே முடியாது.. த‌ள்ளி நில்லு.

ந‌ 1 : சார்.. பிளீஸ்…

ஆ : நெக்ஸ்ட் ப‌ர்ச‌ன் பிளீஸ்.

ந‌ 2 : சார்.. வ‌ந்து

ஆ : என்ன‌ ? டிக்கெட் குடுங்க‌…

ந‌ 2 : டிக்கெட் எடுக்க‌ல‌ ?

ஆ : நீங்க‌ளும் டிக்கெட் எடுக்க‌லையா ? என்ன‌ தான் நினைச்சிருக்கீங்க‌ ம‌ன‌சுல‌.

ந‌ 2 : பிரிப்ப‌ரேஷ‌ன் ப‌ண்ணி ப‌ண்ணி லேட் ஆயிடுச்சு… டிக்கெட் த‌விர‌ எல்லாமே இருக்கு…

ஆ : டிக்கெட் ம‌ட்டும் இருந்தாலே போதும். அதை ம‌ட்டும் வாங்காம‌ வ‌ந்திருக்கீங்க‌.. கிள‌ம்புங்க‌.

ந‌ 2 : (பாக்கெட் ல‌ இருந்து ப‌ண‌ம் எடுக்கிறார் ) சார்.. ப‌ண‌ம் த‌ரேன். என்னை ம‌ட்டும் உள்ளே விடுங்க‌ பிளீஸ். நான் இந்த‌ டூரை ரொம்ப‌ எதிர்பார்க்கிறேன்.

ஆ : கிள‌ம்பு கிள‌ம்பு.. அடுத்த‌ ஆள் வாங்க‌.

ந3 : சார். நானும் .. டிக்கெட் எடுக்க‌ல‌…

ஆ : அட‌.. என்ன‌ய்யா ப‌ண்றீங்க‌. செக் லிஸ்ட் ப‌டிச்சீங்க‌ளா இல்லையா ?

ந‌ 3 : ப‌டிச்சேன் சார்… ப‌ட்..

ஆ : என்ன‌ய்யா ? முத‌ல் வ‌ரில‌ கொட்டை எழுத்துல‌ டிக்கெட் வேணும்ன்னு போட்டிருந்துதே…

ந 3 : பாத்தேன். ப‌ட்.. வாங்காம‌ விட்டுட்டேன்.

ஆ : அப்போ நீயும் கெள‌ம்பு.. அடுத்த‌ ஆள் வாங்க‌..

ந‌ 4 ; சார்… டிக்கெட்.. நானும் வாங்கல‌.. ம‌த்த‌வ‌ங்க‌ வாங்க‌லையே நாம‌ளும் வாங்க‌ வேண்டாம்ன்னு நினைச்சேன். த‌ப்பு ப‌ண்ணிட்டேன்.

ஆ : அப்போ நீங்க‌ இன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் வாசிக்க‌ல‌..

ந‌ 4 : வாசிச்சேன். ப‌ட்.. ம‌த்த‌வ‌ங்க‌ வாங்காத‌தால‌ நானும் வாங்காம‌ விட்டுட்டேன். த‌ப்பு தான். ம‌ன்னிச்சுடுங்க‌.. உள்ளே விடுங்க‌ பிளீஸ்.

ஆ : இப்போ ம‌ன்னிப்பு கேட்டு என்ன‌ய்யா பிர‌யோச‌ன‌ம். உஷாரா இருந்திருக்க‌ணும்.

ந‌ 4 : ஒரே ஒரு சான்ஸ் குடுங்க‌ சார். க‌டைசியா… அடுத்த‌ த‌ட‌வை நான் க‌ண்டிப்பா வாங்குவேன்.

ஆ : இருக்கிற‌தே ஒரே ஒரு சான்ஸ் தான். கிள‌ம்புப்பா.. அடுத்த‌ ஆள் வாங்க‌.

ந‌ 5 : சார்… ந‌ல்லா இருக்கீங்க‌ளா ?

ஆ : ந‌ல்லா இருக்கேன்பா.. டிக்கெட் குடுங்க‌.

ந‌ 5 : சார் என்னை தெரிய‌லையா ? நான் தான் விவேக் ம‌ல்கோட்டே தொழில‌திப‌ரோட‌ ஒரே பைய‌ன்.

ஆ : அப்ப‌டியா… ச‌ரி அதுக்கென்ன‌ ?

ந‌ 5 : இப்போ சினிமால‌ கூட‌ ந‌டிக்கிறேன் சார். உஷார் ப‌க்கிரி ப‌ட‌த்துல‌ நான் தான் ஹீரோ..

ஆ : அதுக்கென்ன‌ இப்போ ( எரிச்ச‌லுட‌ன் )

ந‌ 5 : இல்லே… அப்பா நினைச்சா இதே மாதிரி நாலு பிளைட் வாங்குவாரு. அவ்ளோ ப‌ண‌ம் இருக்கு. சோ..

ஆ : சோ… என்ன‌ தான் சொல்ல‌ வ‌ரே..

ந‌ 5 : டிக்கெட் வாங்க‌ல‌. உள்ளே விடுங்க‌.

ஆ : ஓ..நீயும் அந்த‌ கேஸ் தானா ? டிக்கெட் இல்லாம‌ இங்கே போக‌வே முடியாது. இங்கே நீ எவ்ளோ பெரிய‌ அப்பாட‌க்க‌ரா இருந்தாலும் டிக்கெட் இல்லாம‌ நோ என்ட்ரி.

ந‌ 5 ; சார்.. என்னைப் ப‌த்தி உங்க‌ளுக்குத் தெரியாது. நான் நினைச்சா என்ன‌ வேணும்ன்னாலும் ப‌ண்ணுவேன்.

ஆ : ஒரு டிக்கெட் வாங்க‌ கூட‌ தெரிய‌ல‌.. பேச்சைப் பாரு.. கெள‌ம்புப்பா.. காத்து வ‌ர‌ட்டும்.. நெக்ஸ்ட்.

ந‌ 6 : வ‌ண‌க்க‌ம் சார்.

ஆ : வ‌ண‌க்க‌ம்.. உன் கிட்டேயாவ‌து டிக்கெட் இருக்கா…

ந‌ 6 : இருக்கு சார்.. இதோ.

ஆ : குட்.. நீ ம‌ட்டும் எப்ப‌டி டிக்கெட் வாங்கினே.

ந‌ 6 : நான் இன்ஸ்ட்ர‌க்ஷ‌னை வாசிச்சு அப்ப‌டியே அதுப‌டி ப‌ண்ணினேன் சார். ஒவ்வொண்ணா.. அதான் நான் ரெடியா வ‌ந்திருக்கேன்.

ஆ : குட்..குட்… இப்ப‌டித் தான் இருக்க‌ணும். உன‌க்கு ம‌ட்டும் தான் அனும‌தி.. உள்ளே போ.

ந‌1 & 3 : சார்.. கொஞ்ச‌ம் வெயிட் ப‌ண்ணுங்க‌ சார்.. நான் உட‌னே போய் டிக்கெட் வாங்கிட்டு வ‌ரேன்.

ஆ : சாரி.. இனிமே டிக்கெட் வாங்கி உள்ளே வ‌ர‌ டைம் இல்லை. கேட் குளோஸ் ப‌ண்ண‌ போறோம்.

ந‌ 2 & 4 : சார்.. எங்க‌ கூட‌வே இருந்து அவ‌ன் எங்க‌ள‌ ஏமாத்திட்டான் சார். அவ‌னையும் வெளியே அனுப்புங்க‌. அவ‌ன் ம‌ட்டும் எப்ப‌டி உள்ளே போலாம்.

ஆ : சாரி… அவ‌ன் லிஸ்ட் ப‌டி ஒழுங்கா எல்லாம் செஞ்சிருக்கான். அவ‌னை வெளியே அனுப்ப‌ முடியாது. நீங்க‌ உள்ளே போக‌வும் முடியாது.

ந‌ 1 & ந‌ 5 : பேசுகிறார்க‌ள்.

ந‌ 5 : நான் இவ்ளோ அழ‌கா இருக்கேன். உல‌க‌த்துல‌ எல்லாருக்கும் என்னைத் தெரியும். என்னை உள்ளே விடாம‌ ப‌ண்ணிட்டாங்க‌ளே..

ந‌ 1 : நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன். எல்லாருக்கும் ந‌ல்ல‌து தான் செஞ்சிருக்கேன். என‌க்கே இந்த‌ நிலைமையா ?

ந‌ 3 : நான் அதை ப‌டிச்சிருக்க‌ணும்.. உங்க‌ பேச்சை கேட்டு என்னோட‌ வாய்ப்பை இழ‌ந்துட்டேன்.

ந‌ 4 : ஏன் எங்க‌ளை குற்ற‌ப்ப‌டுத்த‌றே.. ஷூ வாங்கின‌ உன‌க்கு டிக்கெட் வாங்க‌ தெரிய‌லையா…

( ஆளாளுக்கு ச‌த்த‌ம் போட்டு, க‌த்தி, அடித்துக் கொள்கிறார்க‌ள் )

 

 

காட்சி 3

நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ராய் இருக்க‌லாம். ந‌ல்ல‌ ப‌ண‌ம் உள்ள‌வ‌ராக‌ இருக்க‌லாம். ந‌ல்லா அழ‌காய் இருக்க‌லாம். ஆனால் பிளைட்ல‌ ஏற‌ணும்ன்னா ஒரு டிக்கெட் க‌ட்டாய‌ம் வேணும். அதே போல‌ தான் க‌ட‌வுளோட‌ சொர்க்க‌த்துல‌ நுழைய‌ வேண்டும்ன்னா ஒரு டிக்கெட் வாங்க‌ணும். அதுக்கு பேரு தான் சால்வேஷ‌ன் டிக்கெட். மீட்பின் டிக்கெட்.

அது இல‌வ‌ச‌மா கிடைக்கும். நீங்க‌ போய் இல‌வ‌ச‌மா வாங்கிக்க‌லாம். உங்க‌ டிக்கெட்டுக்கான‌ ப‌ண‌த்தை ஒருத்த‌ர் ஏற்க‌ன‌வே கொடுத்திட்டாரு. அவ‌ரு பேரு இயேசு கிறிஸ்து. நீங்க‌ போய், நான் இயேசுவோட‌ பிள்ளை. என‌க்கு ஒரு டிக்கெட் குடுங்க‌ ந்னு கேட்டா உட‌னே கிடைக்கும்.

உங்க‌ த‌ப்புக‌ளை, பாவ‌ங்க‌ளை ஒத்துக்கொண்டு இயேசுவிட‌ம் ம‌ன்னிப்புக் கேட்டு, அவ‌ர் உன‌க்காக‌ இற‌ந்து உயிர்த்தார் என்ப‌தை நீ ந‌ம்பினால் போதும்.

இன்றே உங்க‌ள் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்க‌ள், இயேசுவோடு ப‌ய‌ணிக்க‌த் த‌யாராகுங்க‌ள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *