Christianity : Skit இயேசுவோடு நடப்பேன்

Image result for walking with jesus

 

 

காட்சி 1

( ஒருவன் கையில் இயேசுவின் கட் அவுட்டை வைத்துக் கொண்டு நடக்கிறான் எதிரே அவனுடைய நண்பர்கள் இரண்டு பேர் வருகிறார்கள் )

 

ந 1 : ஹாய் பிரண்ட்ஸ்.. எங்கே போயிட்டு வரீங்க ?

ந 2 : நாங்க ஃபீனிக்ஸ் மால் போயிருந்தோம். ஸ்னோ வேர்ட்ல கொஞ்சம் நேரம் ஜாலியா விளையாடினோம்.

ந 3 : நீ எங்கே போயிட்டிருக்கே… வாக்கிங் ஆ ?

 

ந 1 : ஆமாடா.. கொஞ்ச தூரம் நடக்கலாம்ன்னு கிளம்பினேன். வரீங்களா ?

ந 2 : இல்லேடா.. ரொம்ப டயர்டா இருக்கு. போய் கொஞ்ச நேரம் தூங்கணும். அப்புற‌ம் இன்னிக்கு சாய‌ங்கால‌ம் ச‌ன் டிவி ல‌ ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌ம் போட‌றாங்க‌, பாக்க‌ணும்.

ந‌ 3 : ஆமா, நீ இந்த‌ இயேசுவை தூக்கிட்டு ந‌ட‌க்கிற‌தை இன்னும் நிறுத்த‌லையா ?

 

ந‌ 1 : அதெப்ப‌டி நிறுத்த‌ முடியும் ? ஆல்வேஸ் வாக்கிங் வித் ஜீஸ‌ஸ் தான். அதான் என‌க்கு ச‌ண்டேஸ் கிளாஸ் ல‌ சொல்லிக் குடுத்திருக்காங்க‌.

ந‌ 2 : அதெப்ப‌டிடா உன்னால‌ எப்ப‌வுமே ஜீஸ‌ஸைக் கூட்டிட்டே ந‌ட‌க்க‌ முடியுது ? ச‌ண்டே மார்ணிங் மூணு ம‌ணி நேர‌ம் ச‌ர்ச்ல‌ இருக்கிற‌தே என‌க்கு போர‌டிக்குது.

ந‌ 1 : அப்ப‌டியெல்லாம் சொல்லாதே. உன‌க்கு ரொம்ப‌ப் புடிச்ச‌வ‌ங்க‌ கூட‌ நீ எப்ப‌வுமே இருக்க‌ணும்ன்னு நினைப்பே இல்லையா ? அது தான் இது. என‌க்கு இயேசுவை புடிச்சிருக்கு. அதான் எப்ப‌வும் அவர் கூடவே இருக்கேன்.

ந‌ 3 : ப‌டிக்கும்போதும் கூட‌வே வெச்சிருப்பியா ?

 

ந 1 : க‌ர்த்த‌ருக்குப் ப‌ய‌ப்ப‌டுத‌ல் தான்டா ஞான‌த்தோட‌ இருப்பிட‌ம். அவ‌ர் இல்லாம‌ எப்ப‌டி நான் ப‌டிக்க‌ முடியும் ?

ந‌ 2 : தூங்கும்போ என்ன‌ ப‌ண்ணுவே ?

 

ந‌ 1 : க‌ண்டிப்பா இயேசு கூட‌ தான் இருப்பார். “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” ந்னு அவ‌ர் கிட்டே சொல்லுவேன்.

ந‌ 3 : ஷாப்பிங் போகும்போ என்ன‌ ப‌ண்ணுவே ? ஹோட்ட‌லுக்குப் போகும்போ என்ன‌ ப‌ண்ணுவே ?

 

ந‌ 1 : எப்ப‌வுமே கூட‌ கூட்டிகிட்டு தான் போவேன். அப்போ தான் என்ன‌ வாங்க‌ணும், என்ன‌ வாங்க‌ கூடாது, எப்ப‌டி க‌டைக்கார‌ர் கிட்டே பேச‌ணும் எல்லாம் இயேசு என‌க்கு சொல்லித் த‌ருவாரு.

ந 2 : அப்போ நாளைக்கு இன்டர்வியூ இருக்கே, அங்கேயும் இயேசுவை கூட்டிட்டா போவே…

 

ந 1 : கண்டிப்பா .. இதுல என்ன சந்தேகம் ?

ந‌ 2: ஓவ‌ர் மொக்கை டா நீ. சினிமாக்கு கூப்டா வ‌ர‌மாட்டே, வீட்ல‌ பொய் சொல்லிட்டு வா விளையாட‌லாம்ன்னா ப‌ண்ண‌ மாட்டே.. செம‌ போர். உன் கூட‌ பிர‌ண்டா இருக்கிற‌தே வேஸ்ட் டா.

 

ந‌ 1 : நீங்க‌ளும் இயேசுவை கூட்டிட்டு ந‌ட‌ந்து பாருங்க‌, அது எவ்வ‌ள‌வு ஜாலியான‌ விஷ‌ய‌ம்ன்னு உங்க‌ளுக்கே தெரியும்.

ந‌3  : அட‌ப்போடா.. எங்க‌ளையும் சாமியாராக்கிடாதே. நாங்க‌ ஜாலியா இருக்க‌ தான் க‌ட‌வுள் எங்க‌ளைப் ப‌ட‌ச்சிருக்காரு. சோ, நாங்க‌ ஜாலியா இருக்க‌ போறோம். ஆளை விடு.

 

ந‌ 1 : காட் பிள‌ஸ் யூ மை பிர‌ண்ட்ஸ்…

 

 

காட்சி 2

 

 

இன்ட‌ர்வியூ..

 

ந‌ப‌ர் 4 : குட் மார்ணிங் சார்.

 

இன் : குட்மார்ணிங் வாங்க‌..

ந‌ப‌ர் 4 : தேங்க்யூ சார்.

 

இன் : உங்க‌ளைப் ப‌த்தி கொஞ்ச‌ம் சொல்லுங்க‌.

ந‌ 4 : சார் நான் விக்ட‌ர். எஞ்ஜினிய‌ரிங் முடிச்சிருக்கேன் எல‌க்ட்ரானிக்ஸ் ல‌. 80 ச‌த‌வீத‌ம் மார்க் இருக்கு.

இன் : எவ்ளோ நாளா வேலை தேட‌றீங்க‌ ?

ந‌ 4 : நாலு மாச‌மா தேட‌றேன் சார். இன்னும் ஒண்ணும் கிடைக்க‌ல‌.

 

இன் : ச‌ரி ச‌ரி, உங்க‌ளை சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல‌ போட‌றேன். மூணு மாச‌ம் ப்ரோபேஷ‌ன் பீரிய‌ட். ஒழுங்கா வேலை செஞ்சு டார்கெட் முடிச்சிட்டீங்க‌ன்னா உங்க‌ளை பெர்ம‌னென்ட் ப‌ண்றேன்.

ந‌ 4 : ரொம்ப‌ ந‌ன்றி சார்.

 

இன் : பேரைப் பாத்தா கிறிஸ்டிய‌ன் மாதிரி இருக்கு, ச‌ண்டே லீவ் கீவ் ஏதும் கேப்பீங்க‌ளா /

ந‌ 4 : இல்லே சார். வேலை தான் முக்கிய‌ம். ச‌ர்ச்சை நான் க‌ட்ப‌ண்ணிட‌றேன்.

 

இன் : குட். இப்ப‌டித் தான் வேலைல‌ சின்சிய‌ரா இருக்க‌ணும். நாளைக்கே வ‌ந்து ஜாயின் ப‌ண்ணிடுங்க‌.

ந‌ 4 : ரொம்ப‌ ந‌ன்றி சார். நீங்க‌ என‌க்கு க‌ட‌வுள் மாதிரி சார்.

 

 

( ந‌4 போன‌தும், அடுத்த‌ ந‌ப‌ர் வ‌ருகிறார் )

 

ந‌ 5 : குட்மார்ணிங் சார்.

இன் : குட்மார்ணிங். உக்காருங்க‌. உங்க‌ பேரு

 

ந‌ 5 : ராப‌ர்ட் சார்.

இன் : ஓ.. நீங்க‌ளும் கிறிஸ்டிய‌னா ?

 

ந‌ 5 : சார்.. அப்ப‌டியெல்லாம் ஒண்ணும் இல்லை. என‌க்கு எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌ம் தான். எல்லாரும் க‌ட‌வுளை தான் கும்பிட‌றோம். நான் இந்து கோயிலுக்கெல்லாம் கூட‌ போயிருக்கேன். நோ பிராப்ள‌ம்.

 

இன் : த‌ட்ஸ் குட். சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல‌ தான் ரெண்டு மூணு இட‌ம் காலியா இருக்கு. ஜாயின் ப‌ண்றீங்க‌ளா ?

ந‌ 5 : க‌ண்டிப்பா சார். என்ன‌ வேலைன்னாலும் செய்வேன்.

இன் : வெரி குட்.. வெரி குட்… உங்க‌ பேரை ராப‌ர்ட் ந்னு சொல்லாதீங்க‌. சேல்ஸ் சைட்டுக்கு போகும்போ, டிரை டு யூஸ் டிஃப‌ர‌ன்ட் நேம். ம‌த‌ம் என்ன‌ன்னு க‌ண்டுபிடிக்காத‌ மாதிரி பாத்துக்கோங்க‌. லைக்.. இனிய‌ன், செல்வ‌ன், இப்ப‌டி.

 

ந‌ 5 : க‌ண்டிப்பா சார். பேர்ல‌ என்ன‌ இருக்கு .

இன் : குட் குட்.. நாளைக்கே நீங்க‌ ஜாயின் ப‌ண்ணிடுங்க‌.

 

ந‌ 5 : காலைத் தொட்டு கும்பிட்டு கிள‌ம்புகிறார்

 

( மூன்றாவ‌தாக‌ வாக்கிங் வித் ஜீஸ‌ஸ் ம‌னித‌ர் வ‌ருகிறார் )

 

ந‌ 1 : குட்மார்ணிங் சார்.

 

இன் : குட்மார்ணிங். பிளீஸ் டேக் யுவ‌ர் சீட்.

ந‌ 1 : தேங்க் யூ சார்.

 

இன் : உங்க‌ளைப் ப‌த்தி கொஞ்ச‌ம் சொல்லுங்க‌..

ந‌ 1 : சார் என் பேர் ஜேம்ஸ்…

 

இன் : ஓ.. நீங்க‌ளும் கிறிஸ்டிய‌னா ?

ந‌ 1 : ஆமா சார். ஐம் எ கிறிஸ்டிய‌ன். ஜீஸ‌ஸ் ஈஸ் மை லார்ட்.

 

இன் : அது இருந்துட்டு போக‌ட்டும். என‌க்கு பிர‌ச்சினை இல்லை. உங்க‌ளை சேல்ஸ் டீம்ல‌ போட‌லாம்ன்னு இருக்கேன்.

ந‌ 1 : ந‌ன்றி சார்.

 

இன் : ச‌ண்டே தான் சேல்ஸ் அதிக‌மா இருக்கும். ச‌ர்ச் போவேன்னெல்லாம் சொல்ல‌ மாட்டீங்க‌ன்னு நினைக்கிறேன்.

ந‌ 1 : ஐயோ.. ச‌ண்டே முடியாது சார். ச‌ர்ச் க‌ண்டிப்பா போணும். ச‌ண்டே கிளாஸ் டீச்ச‌ர் நான். மிஸ் ப‌ண்ண‌ முடியாது. ம‌த்த‌ ஆறு நாளும் வ‌ர்க் ப‌ண்றேன் சார்.

 

இன் : என்ன‌ய்யா… முத‌ல்ல‌யே எட‌க்கு ம‌ட‌க்கா பேச‌றே.

ந‌ 1 : சாரி சார். ஐம் எ கிறிஸ்டிய‌ன்.

 

இன் : ( யோசிக்கிறார் ).. ச‌ரி..ச‌ரி.. மூணு மாச‌ம் ப்ரோபேஷ‌ன். ச‌ண்டே லீவ் த‌ரேன். ப‌ட் டார்கெட்டை முடிக்க‌ணும். அதிக‌ விலைக்கு விற்றா அடிஷ‌ன‌ல் க‌மிஷ‌ன் உண்டு.

ந‌ 1 : நோ சார். அதிக‌ விலைக்கு விக்க‌ மாட்டேன். அது பாவ‌ம். ஏமாத்த‌க் கூடாது சார் யாரையும்.

 

இன் : உன‌க்கு தான் ந‌ஷ்ட‌ம் … என‌க்கென்ன‌ ? உன் க‌மிஷ‌ன் தான் குறையும்.

ந‌ 1 : க‌மிஷ‌னுக்காக‌ க‌ட‌வுளை விட‌ முடியுமா சார் ?

 

இன் : என்ன‌வோ போ.. உன் பேர் கிறிஸ்டிய‌ன் பேரா இருக்கு. உன‌க்கு சேல்ஸ் ஆக‌ணும்மா இட‌த்துக்கு த‌க்க‌ப‌டி முருக‌ன், ர‌ஹீம், இனிய‌ன் இப்ப‌டி ஏதாச்சும் வெச்சுக்க‌ ச‌ரியா ?

ந‌ 1 : நோ..நோ.. அதெல்லாம் வேண்டாம் சார். என் பேரு அப்ப‌டியே தான் இருக்கும். நான் கிறிஸ்டிய‌ன்னு சொல்ற‌தால‌ விற்ப‌னை ந‌ட‌க்க‌லேன்னா ப‌ர‌வாயில்லை. க‌ட‌வுள் பாத்துப்பாரு

 

இன் : திஸ் ஈஸ் நாட் குட்… உன‌க்கு வேலை வேணுமா ? இல்ல‌ வேற‌ யாருக்காச்சும் கொடுக்க‌வா ?

ந‌ 1 : சார்.. நேர்மையா செய்ற‌ எந்த‌ வேலைன்னாலும் செய்வேன் சார். பொய் சொல்ற‌து, ஏமாத்த‌ற‌து எல்லாம் க‌ட‌வுளுக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ம் சார். அதெல்லாம் செய்ய‌ மாட்டேன்.

 

இன் : ( கடுப்பில் ) ஓ.. அப்ப‌டியா.. ம்ம்.. ச‌ரி..ச‌ரி.. நான் ரிச‌ல்டை அடுத்த‌ வார‌ம் சொல்றேன். இப்போ கிள‌ம்பு

ந‌ 1 : ந‌ன்றி சார்.

 

 

 

காட்சி 3 :

 

 

ச‌ர்ச்

 

 

ந‌ 6 : அதோ.. இயேசுவோட‌ த‌ம்பி வ‌ராண்டா…

ந‌ 7 : கொசு தொல்ல‌ தாங்க‌ முடிய‌ல‌டா.. எப்ப‌வுமே ஏதாச்சும் க‌ட‌வுள் மாதிரி பேசிட்டே இருப்பான். இம்சை.

ந‌ 6 : ஆமாமா… எதுக்கெடுத்தாலும் இயேசு இப்ப‌டி சொன்னாரு, அப்ப‌டி சொன்னாருன்னு க‌டுப்ப‌டிப்பான். ச‌ரி, ச‌ரி மெதுவா பேசு இதா வ‌ந்துட்டான்.

 

( ந‌ 1 அருகே வ‌ருகிறார் )

 

ந‌ 7 : ஹ‌லோ… பிரைஸ் த‌ லார்ட் பிர‌த‌ர். எப்ப‌டி இருக்கீங்க‌ ?

ந‌ 1 : பிரைஸ் த‌ லார்ட் பிர‌த‌ர். ந‌ல்லா இருக்கேன். நீங்க‌ எப்ப‌டி இருக்கீங்க ?

ந‌ 7 : என்ன‌த்த‌ சொல்ல‌ பிர‌த‌ர். இன்னிக்கு அறுவ‌டை விழா இல்லையா ? அதான் ச‌ர்ச் ல‌ வியாபார‌‌த் துக்கான‌ திங்க்ஸ் எல்லாம் வெக்க‌ணும், நிறைய‌ வேலை இருக்கு. யூத் ப‌ச‌ங்க‌ளை காணோம். நாம‌ தான் ப‌ண்ண‌ணும் போல‌.

ந‌ 1 : அது த‌ப்பில்லையா பிர‌த‌ர். “என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும்  நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” ந்னு இயேசுவே சொன்னாரே.. ச‌ர்ச் ல‌ பிஸின‌ஸ் ப‌ண்ண‌லாமா பிர‌த‌ர் ?

 

ந‌ 6 : ஆர‌ம்பிச்சுட்டான்டா.. போன‌ வார‌ம் வ‌ந்து மெம்ப‌ர்ஷிப் ப‌ண‌ம் வாங்க‌ற‌து கூட‌ த‌ப்புன்னு சொன்னான்.

ந‌ 1 : நான் என்ன‌ பிர‌த‌ர் த‌ப்பா சொன்னேன். க‌ட‌வுள் விருப்ப‌ப்ப‌ட்டு குடுக்க‌ச் சொன்னாரு. நாம‌ மெம்ம‌ர்ஷிப் ப‌ண‌ம் க‌ட்ட‌லேன்னா மெம்ம‌ர்ங்க‌ற‌ உரிமையே இல்லேன்னு சொல்றோம். இயேசு எனும் திராட்சைச் செடில‌ கிளையா இருக்க‌ நாம‌ என்ன மணியா குடுக்கணும் ? ம‌ன‌சைத் தானே குடுக்க‌ணும் ?

ந‌ 7 : ச‌ர்ச் ல‌ பிர‌ச்சினை ப‌ண்ண‌வே வ‌ருவியா நீ ? நீ எந்த‌ குரூப் ? யாரு உங்கிட்டே இப்ப‌டியெல்லாம் பேச‌ சொல்ற‌து.

ந‌1 : பிர‌த‌ர்.. ஐம் வாக்கிங் வித் ஜீஸ‌ஸ். க‌ட‌வுள் சொல்ற‌தை சொல்றேன் அவ்ளோ தான். ம‌த்த‌ப‌டி உங்க‌ இஷ்ட‌ம்.

 

ந‌ 7 : ஆமா.. இப்ப‌டித் தான் ஒவ்வொரு விஷ‌ய‌த்துல‌யும் பிர‌ச்சினை கிள‌ப்பிட்டு திரிய‌றே நீ. கிறிஸ்ம‌ஸ் கொண்டாட‌ கூடாதுன்னு டிச‌ம்ப‌ர்ல‌ நீ தான் பேசினே.

ந‌ 1 : கிறிஸ்ம‌ஸ் ப‌த்தி பைபிள்ல‌ ஏதும் இல்லேன்னு சொன்னேன்.

 

ந‌ 6 : ப‌த்துல‌ ஒரு பாக‌ம் கேக்க‌ற‌து த‌ப்புன்னு சொன்னே….

ந‌ 1 : அள‌வு இல்ல‌, ம‌ன‌சு தான் முக்கிய‌ம்ன்னு சொன்னேன். இர‌ண்டு காசு போட்ட‌ ஏழைப் பெண் போல‌ நாம‌ முழு ம‌ன‌சோட‌ போட‌ணும்ன்னு சொன்னேன்.

 

ந‌ 7 : காணிக்கை வ‌சூலிக்கிற‌து கூட‌ த‌ப்புன்னு சொன்ன‌து நீ தானே ?

ந‌ 1 : விருப்ப‌ப் ப‌ட‌ற‌வ‌ங்க‌ குடுக்க‌ட்டும், நாம‌ளா கேக்க‌ வேண்டாம்ன்னு சொன்னேன்.

 

ந‌ 6 : அப்போ ச‌ர்ச் ல‌ உள்ள‌ தேவையை எல்லாம் நிறைவேற்ற‌ உன் ரிலேட்டிவ்ஸ் ஆ வ‌ருவாங்க‌.

ந‌ 1 : இயேசு வ‌ருவாரு. அவ‌ருக்குரிய‌தை முத‌லில் தேடினா போதும், அவ‌ர் ம‌ற்ற‌ எல்லாத்தையும் ந‌ட‌த்துவாரு.

 

ந‌ 7 : இத‌ பாரு.. ஓவ‌ரா சீன் போடாதே. மென்ட‌ல் மாதிரி பேசாதே. இனிமே இந்த‌ ஜீஸ‌ஸை தூக்கிட்டு ச‌ர்ச்சுக்கு வ‌ராதே. எல்லாரையும் மாதிரி அமைதியா வ‌ந்துட்டு போ, அது தான் உன‌க்கு ந‌ல்ல‌து.

ந‌ 1 : ஜீஸ‌ஸ் இல்லாத‌ இட‌ம் எப்ப‌டி பிர‌த‌ர் ச‌ர்ச்சா இருக்க‌ முடியும். ச‌ரி, நான் கிள‌ம்ப‌றேன். நீங்க‌ கோப‌மா இருக்கீங்க‌. காட் பிள‌ஸ் யூ பிர‌த‌ர்.

( ந‌ 1 செல்கிறார் )

 

ந‌ 6 : ய‌ப்பா.. இவ‌னை வெச்சு எப்ப‌டித் தான் வீட்ல‌ ச‌மாளிக்கிறாங்க‌ளோ !!

 

 

காட்சி 4 :

 

 

( ந‌ 1 , 2 & 3 )

 

 

ந‌ 2 : ஹேய்.. நேற்று போன‌ இன்ட‌ர்வியூ எப்ப‌டி இருந்துச்சு ?

ந‌ 1 : முடிஞ்சுச்சு.. ஆனா, முடிவு தெரிய‌ல‌.

 

ந‌ 3 : ஐ வில் பிரே ஃபார் யூ டா… க‌ண்டிப்பா கிடைக்கும்.

ந‌ 1 : க‌ண்டிப்பா கிடைக்க‌ணும்னு ‍ அப்ப‌டி பிரேய‌ர் ப‌ண்ணாதே. இது என‌க்கு கிடைக்க‌ணுங்க‌ற‌து க‌ட‌வுளோட‌ விருப்ப‌மா இருந்தா, இத‌னால‌ எனக்கும் இயேசுவுக்குமான‌ உற‌வு பாதிக்க‌ப்ப‌டாம‌ இருந்தா ம‌ட்டும் கிடைச்சா போதும்.

 

ந‌ 2 : வேலை இல்லேன்னா க‌ஷ்ட‌ம் டா.

ந‌ 1 : இயேசு இல்லேன்னா மொத்த‌மும் ந‌ஷ்ட‌ம் இல்லையா ?

 

ந‌ 3 : ஒரு வேலை கிடைக்க‌லேன்னா ஒரு ப‌ய‌ ம‌திக்க‌ மாட்டான். வீட்ல‌ கூட‌ தெண்ட‌ச் சோறுன்னு திட்ட‌ ஆர‌ம்பிப்பாங்க‌.

ந‌ 1 : ப‌ர‌வாயில்லை டா.. ப‌சிச்ச‌ வ‌யிறோட‌ இயேசுவோட‌ ந‌ட‌க்கிற‌து, பிரியாணி சாப்பிட்டுட்டு சாத்தானோட ந‌ட‌க்கிற‌தை விட‌ கோடி டைம்ஸ் பெட்ட‌ர் டா..

 

ந‌ 2 : உன்னை நினைச்சா பெருமையா இருக்குடா.. இவ்ளோ தூர‌ம் இயேசுவுக்காக‌ நிக்கிற‌தை நினைச்சா என‌க்கெல்லாம் அவ‌மான‌மா இருக்கு.

ந‌ 1 : இதுல‌ பெருமையும் இல்லை, அவ‌மான‌மும் இல்லை டா. இயேசுவோட‌ நீயும் ந‌ட‌க்க‌ணும்னு தான் நான் நினைக்கிறேன். இயேசுவும் அதான் எப்ப‌வுமே விரும்ப‌றார்.

 

ந‌ 3 : ஐ.. ஆல்ஸோ ஃபீல் த‌ சேம் நௌ…

ந‌ 1 : பிரைஸ் த‌ லார்ட். இயேசுவோட‌ ந‌ட‌க்கிற‌து போர் ந்னு நிறைய‌ பேர் நினைக்கிறாங்க‌. ஆனா அது தான் மோஸ்ட் இன்ட‌ர‌ஸ்டிங், என் ஜாய‌பிள் லைஃப். க‌ட‌வுள் கொடுக்கிற‌ ச‌மாதான‌ம் ம‌னுஷ‌ன் கொடுக்கிற‌ ச‌மாதான‌ம் போல‌ இல்லை. அது தெய்வீக‌ம், அந்த‌ ச‌மாதான‌மும், ஆன‌ந்த‌மும் உங்க‌ வாழ்க்கைல‌ வ‌ர‌ணும்ன்னா அதுக்கு நீங்க‌ இயேசுவோட‌ தின‌மும் ந‌ட‌க்க‌ணும்

 

ந‌ 2 : இனிமே என் வாழ்க்கைல‌, ஒவ்வொரு நிமிச‌மும், ஒவ்வொரு நொடியும், இயேசுவுக்காக‌ செதுக்குவேண்டா..

ந‌ 1 : பிரைஸ் த‌ லார்ட் பிர‌த‌ர்ஸ்

 

( மூவ‌ரும் க‌ட்டி அணைத்துக் கொள்கிறார்க‌ள் )

 

காட்சி 5

 

பின் குர‌ல்

 

இயேசுவோடு வாழும் வாழ்க்கை ஆனந்தமானது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு சிந்தனையிலும் இயேசுவின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அதுவே இயேசுவோடு ந‌ட‌ப்ப‌து. அப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌ய‌ண‌த்தில் சில‌ உல‌க‌ ரீதியிலான‌ இழ‌ப்புக‌ள் வ‌ர‌லாம். ஆனால் ப‌ர‌லோக‌த்தில் செல்வ‌ம் மிகுதியாகும். ம‌ன‌தில் ச‌மாதான‌மும், ஆன‌ந்த‌மும் நிர‌ம்பி வ‌ழியும்.

 

பிளீஸ் வாக் வித் அவ‌ர் லார்ட் ஜீஸ‌ஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *