Poem : உயிர் உலவும் பூமி

Image result for zoo animals
இனிமேலும்
நடந்து பயனில்லையென‌
கூடுகளில்
சோம்பிக் கிடந்தன‌
விலங்குகள்.

அதிகபட்ச
பறத்தலின் தூரம்
பத்தடியென
சிறகுகளைச் சுருட்டி வைத்து
சும்மா கிடந்தன பறவைகள்.

காட்டுக்கு ராஜா
கூட்டுக்குள்
மண்புழுவைப் போல
மடங்கிக் கிடந்தது.

மகளின் விரல் பிடித்து
அனைத்தையும்
கடந்து முடிக்கையில்
காலத்தின் காலடியில்
காலொடிந்து கிடந்தது யதார்த்தம்.

எந்த விலங்கு
புடிச்சிருக்கு உனக்கு ?
மகளின்
செவியருகே
செல்லமாய்க் கேட்டேன்.

ஊர்ல‌
ஓடித்திரியற
ஆட்டுக்குட்டிப்பா என்றாள்
சற்றும் யோசிக்காமல்.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *