அதிபயங்கர வில்லன், அந்திரேய் சிக்காட்டிலோ .

 

 

Image result for (Andrei Chikatilo

1936ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் ரஷ்யாவின் எல்லையிலுள்ள உக்ரைனில் பிறந்தார் அந்திரேய் சிக்காட்டிலோ. இவர் பிறந்தபோது வரலாற்றில் அவருக்கு கொடூர வில்லன் பெயர் கிடைக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைச் சூழலும், தாழ்வு மனப்பான்மையும் அவரை மகா வில்லனாக்கிவிட்டது.

பதின் வயதை எட்டியபோது தனக்கு ஆண்மையில்லையோ எனும் சந்தேகம் அவனுக்குள் நுழைந்தது. அந்த பயமோ, ஆவேசமோ அவனுடைய செக்ஸ் குற்றங்களைத் துவக்கி வைத்தது. ஒன்பது வயதான ஒரு சிறுமியை தனது பதினைந்தாவது வயதில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினான்.

சோவியத் யூனியனுக்கும் ஜெர்மனிக்கும் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கொண்டிருந்த காலம் அது. ஜெர்மனியர்கள் கண்மூடித் தனமாக ரஷ்யாவின் மீது குண்டுகளை எறிந்து கொண்டிருந்ததில் சிக்காட்டிலோவுக்கு கடும் கோபம். ஜெர்மனியர்களின் மீதான வெறி அவரை சோவியத் ராணுவத்தில் கொண்டு சேர்த்தது அங்கே 1960 வரை பணியாற்றினார். 1963ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றார். ஆனாலும் அவருக்கு போதுமான “ஆண்மை” இல்லை.

1971ல் ரஷ்ய இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆசிரியரானார். என்ன செய்ய ? அவருக்குள் ஊறிக் கிடந்த பாலியல் சிந்தனைகள் அவரை நல்ல ஆசிரியராய் இருக்க விடவில்லை. மாணவிகளிடம் செய்த சில்மிஷங்கள் அவரை பள்ளிக்கூடங்களை விட்டுத் துரத்தியது.

1978ல் ஒரு சிறுமியைக் கடத்தி வந்து பாழடைந்த வீடு ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் அவனுக்கு திருப்தி கிடைக்கவில்லை. அதனால் எரிச்சலடைந்த அவன் சிறுமியைக் கத்தியால் சரமாரியாய் வெட்டி கொலையும் செய்தான். இதுவே அவன் செய்த முதல் கொலை.

Image result for (Andrei Chikatilo

இந்த கொலையும் அது தந்த திருப்தியும் அவனுக்குள் வெறியாய் ஊறியது. 1982லிருந்து தொடர்ச்சியாய்ப் பாலியல் வன்முறையும் கொலைகளைச் செய்ய ஆரம்பித்தான். தனியே இருக்கும் சிறுமிகளை ஆசை காட்டி அழைத்துச் செல்லவது, பின் பலாத்காரம் செய்து அவர்களைக் கொல்வது ! இது ஒரு வழக்கமாகவே மாறிப் போனது. அந்த ஆண்டு மட்டுமே ஏழு சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்தால் மட்டுமே பாலியலில் “திருப்தி” அடையும் நிலைக்கு அவன் சென்று விட்டான்.

பின்னர் சிறுமிகளை மட்டுமன்றி இளம் பெண்களையும் கடத்திக் கொலை செய்து இன்பம் காண ஆரம்பித்தான். தொடர்ச்சியாய் நடந்த கொலைகள் ரஷ்ய அரசுக்கு பெரும் தலைவலியாய் மாறிப் போனது. போலீஸ் ரிக்காட்டில் இருந்த செக்ஸ் குற்றவாளிகளையெல்லாம் சுற்றி வளைத்து விசாரித்தது. யாரும் பிடிபடவில்லை. சிறிது நாட்கள் ஓய்வு பின் மறுபடியும் கொலைகள் என தொடர்ந்தது அவனுடைய படுகொலைப் பயணம்.

1984ல் அந்திரேய்க்கு சிறுவர்களைக் கொல்லும் ஆசை முளைத்தது. பல சிறுவர்கள் உட்பட பதினைந்து பேர் அந்த ஆண்டு மட்டும் மர்மமாய் கொல்லப்பட்டனர். போலீஸ் குழம்பியது. இவன் “ஹோமோ” வாக இருப்பானோ எனும் கண்ணோட்டத்திற்கு விசாரணை திரும்பியது ! சுமார் ஒன்றரை இலட்சம் பேர் விசாரிக்கப்பட்டனர். ஊஹூம் கில்லர் மாட்டவில்லை.

1984ல் ஒரு பஸ் ஸ்டாண்டில் “சந்தேக கேசில்” மாட்டினான் சிக்காட்டிலோ. ஆசிரியர் காலத்தில் செய்த சில்மிஷங்களையெல்லாம் ஒத்துக் கொண்டான். அதற்காக அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. ஆனாலும் 3 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டான். இவன் குற்றவாளியாய் இருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதியது. காரணம் அவனுடைய இரத்த மாதிரிகளும், கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து கிடைத்த உயிரணு மாதிரிகளும் ஒத்துப் போகவில்லை. இரத்த மாதிரிகளும், உயிரணு மாதிரிகளும் வேறுபடலாம் என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

Image result for (Andrei Chikatilo

சிறைக்குச் சென்று திரும்பிய பின்னும் திருந்தவில்லை அவன். தொடந்து கொலைகளில் ஈடுபட்டான். 1990 நவம்பர் ஆறாம் தேதி காட்டுக்குள் ஒரு கொலையைச் செய்து விட்டு ஹயாக வரும் வழியில் அவனைக் கைது செய்தது போலீஸ். அட ! அப்போதும் அவனைச் சும்மா விட்டு விட்டது போலீஸ் ! .

கடைசியில் 1990 நவம்பர் 20ம் தியதி வலுவான சந்தேகங்களுடன் அவனைப் பிடித்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்து “நொங்கு” எடுத்த போதுதான் உண்மையைக் கக்கினான். அவனுடைய ஒவ்வோர் கொலைகளையும் கேட்கக் கேட்க காவல்துறையே நடு நடுங்கியது. மொத்தம் ஐம்பத்து மூன்று கொலைகளைச் செய்திருப்பதை ஒப்புக் கொண்டான்.

1992ல் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. “நான் ஒரு அப்பாவி. என்னை விட்டு விடுங்கள்” எனும் இவருடைய கருணை மனுவை போரிஸ் எல்ஸ்டின் நிராகரித்துவிட்டார். 1992 பிப்ரவரி 14ம் நாள் பின் மண்டையில் துப்பாக்கியை வைத்து சிக்காட்டிலோ சுட்டுக் கொல்லப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *