கொமோடோ டிராகன்

 

Image result for Komodo dragon

ஐயோ இதென்ன கொடிய விலங்கு என்று இதை முதலில் பார்த்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். ஐரோப்பாவில் 1910ம் ஆண்டு இந்த டிராகன் டாக்குமெண்டரியானது. இந்த செய்திப் படம் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வியப்புக்குள் தள்ளியது. இது கண்டுபிடிக்கப் பட்டது கொமோடோ எனும் தீவில். அதனால் தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது என்பது பெயர் புராணம். இந்தத் தீவு இந்தோனேஷியாவிலுள்ள 17508 தீவுகளில் ஒன்று. சுமார் 390 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது.

அதன் பின் பலர் கொமோடோ தீவுக்கு ஓடினார்கள். கிடைத்ததைப் பிடித்து மிருக காட்சி சாலைகளில் போட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். 1933ல் கிங் காங் படத்தில் கொமோடோ டிராகன் தான் ஸ்பெஷல். ஓணான் வகையறாக்களில் பெரிய சைஸ் இது தான்.  இரண்டு மூன்று மீட்டர் நீளமும், எழுபது எண்பது கிலோ எடையும் கொண்டது. வெப்பமும், வறட்சியும் கொண்ட இடங்கள் தான் இவற்றுக்குப் பிரியமானவை.

செத்த விலங்குகளை தின்று வாழும் இந்த டிராகன்கள் உயிருடன் திரிவதையும் விட்டு வைப்பதில்லை. கொடும் விஷமுடைய பாம்புகளைக் கண்டாலும் கூச்சப்படாமல் கடித்துத் தின்னும். கண்டதையும் தின்பதால் இதன் வாயில் கொடிய விஷத்தன்மையுள்ள பாக்டீரியாக்கள் நிரம்பி வழிகின்றன. இந்த டிராகனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பெரிய மிகப்பெரிய ஆபத்து அது தான். இதன் எச்சில் உடலில் பட்டால் நோய் சர்வ நிச்சயம்.

இவை அழிந்து வருகின்றன என்று சொல்லலாம். சுமார் 4000 முதல் 5000 வரையிலான எண்ணிக்கையில் தான் இவை இப்போது இருக்கின்றன. அதிலும் 350 பெண் டிராகன்கள் தான் இனப்பெருக்கம் செய்யும் நிலையில் இருக்கின்றன. இந்த இனத்தைக் காக்க கொமோடோ நேஷனல் பார்க் ஒன்று 1980 ல் உருவாக்கப்பட்டது !. டிராகன் பிரியர்கள் ஒருமுறை டிராவல் பண்ணலாம் கொமோடோவுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *