அம்மா

 

Image result for tamil nadu village lady

 

 

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

கல்வியும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா ?
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
மறக்காம
‘மத்தியானம் சாப்பிட வந்துடுப்பா’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *