அல்வா உலகம்..

 

இது அல்வா உலகம். எப்படா ஒருத்தன் மாட்டுவான்னு வலை வீசிட்டுத் திரியறவங்க அதிகமாயிட்டாங்க. மாட்டினா கந்தல் தான். உஷாரா இருக்க இந்த அட்வைஸ்களைப் புடிங்க !

 1. “ஆஹா நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள், நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்” என்றெல்லாம் வரும் மின்னஞ்சல்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக அழித்துவிடுங்கள்.
 2. “லாட்டரில கோடி ரூபாய் விழுந்திருக்கிறது” என்று உங்களுக்கு யாராவது மெயில் அனுப்பினால் ஒரு சின்ன சிரிப்புடன் டிலீட் செய்து விடுங்கள்.
 3. அது மட்டுமல்ல, “அட்வான்சாய் பணம் அனுப்புங்கள்” என்று சொல்லும் எல்லா பணம் காய்க்கும் மரங்களும் போலியே.
 4. உங்களோட பாங்க், கிரெடிட் கார்ட், விலாசம், போன் நம்பர் இதையெல்லாம் தேவையில்லாம யாருக்கும் குடுக்காதீங்க
 5. எங்கே போனாலும் கையில ஒரு செக் புக்கையும் கூடவே கொண்டு போறதை நிப்பாட்டுங்க.
 6. கிரெடிட் கார்ட், டெபிட்கார்ட் போன்றவை தொலைந்துவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குத் தகவல் கொடுங்கள்.
 7. பழைய கிரெடிட் கார்ட் பில், வங்கி ஸ்டேட்மெண்ட்ஸ், மெடிக்கல் பில் எல்லாம் சும்மா குப்பைல வீசாதீங்க. துண்டு துண்டா வெட்டி வீசுங்க.
 8. டெபிட் கார்ட் பின் நம்பர், பாஸ்வேர்ட் எல்லாம் பர்சிலயே வெச்சிட்டு சுத்தாதீங்க.
 9. உங்களுக்கு வரவேண்டிய பில் ஏதாவது வரவில்லையேல் அலட்சியமாய் இருக்க வேண்டாம். போன் பண்ணி விஷயத்தை அறியுங்கள்.
 10. உங்கள் வீட்டுச் சாவியைக் காணோம் என்றால், இன்னொரு சாவி இருக்கே என நினைக்காமல் ஒரு புதிய பூட்டு வாங்கி மாட்டுங்கள்.
 11. உங்களுக்கு யாரேனும் போன் செய்து கிரெடிக் கார்ட் எண், விலாசம் போன் நம்பர் போன்றவற்றைக் கேட்டால் தயங்காமல் “நோ “ சொல்லிவிடுங்கள்.
 12. ஹோட்டல் போன்ற இடங்களில் தங்க நேர்ந்தால் கிரெடிட் கார்ட் போன்றவற்றை அறையில் விட்டு விட்டுச் செல்லாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *