தமிழ் என் மழலை

Dollarphotoclub_70136808-e1428939423756

ழலையே
என்
கால்நூற்றாண்டுக் கனவுகளின்
மனித வடிவமே,
உன்னை நான்
எப்படிக் கொஞ்சுவேன் ?

என்
மனசின் பதுங்கு குழிகளில்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்துக் கிடக்கும் உன்னை
சிக்கனம் இன்றி
எப்படிக் கொஞ்சுவேன் ?

நீ
சுவர்க்கத்தின் விளக்கவுரை.
உனை
கர்ப்பத்தில் சுமந்தபோதே
கர்ப்பனைகளைச் சுமந்தேன்.

உன்
உதைகளை எல்லாம்
கதைகளாய் எழுதிட
தாய்மை முழுவதும்
தவித்துக் கிடந்தேன்.

இயற்கையின்
இருக்கைகளில் எங்கும்
உனக்கான உவமைகள்
உட்கார்ந்திருக்கவில்லையே.

விலகிப் போனால்
மூச்சுக்கு அணைபோட்டு,
தழுவும் போதெல்லாம்
மனதுக்கு மதகுகட்டி,
பிரபஞ்சத்தை உள்ளங்கைக்குள்
உட்கார வைத்ததாய்
ஓர் உவமை வேண்டுமெனக்கு.

யோசித்து யோசித்து
எதுவும் கிடைக்கவில்லை.
யோசிக்காமல் சொல் என்றால்
தமிழெனச் சொல்வேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *