கே பாலசந்தர் : வாழ்வும் படைப்பும்

 

KB

அபூர்வ‌ ராக‌ங்க‌ள்

1975ம் ஆண்டு பால‌ச‌ந்த‌ர் இய‌க்க‌த்தில் ஒரே ஒரு திரைப்ப‌ட‌ம் தான் வெளியான‌து அது அபூர்வ‌ ராக‌ங்க‌ள். போதும். திரையுல‌கிற்கு ர‌ஜினிகாந்த் எனும் ம‌ந்திர‌த்தை அறிமுக‌ம் செய்த‌ நாள். ஸ்டைல் அமுத‌சுர‌பியான‌ ர‌ஜினிகாந்த் வெள்ளித் திரையில் தோன்றிய‌ அந்த‌ ஒரு ப‌ட‌ம் போதும் பால‌ச‌ந்த‌ருக்கு 1975ல் என்ப‌து தான் கோடிக்க‌ண‌க்கான‌ ர‌ஜினிர‌சிக‌ர்க‌ளின் குர‌லாய் இருக்கும்.

க‌ம‌ல‌ஹாச‌னும், ஸ்ரீவித்யாவும் முத‌ன்மைக் க‌தாபாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ர‌ஜினிகாந்த் இந்த‌ப் ப‌ட‌த்தில் ஒரு சின்ன‌ வேட‌த்தில் அறிமுக‌மானார். வ‌ழ‌க்க‌ம் போல‌ பால‌ச‌ந்த‌ரின் பிரிய‌த்துக்குரிய‌ இசைய‌மைப்பாள‌ர் எம்.எஸ்.விஸ்வ‌நாத‌னும், க‌விஞ‌ர் க‌ண்ண‌தாச‌னும் ப‌ணியாற்றினார்க‌ள்.

ர‌ஜினிகாந்தை பால‌ச‌ந்த‌ர் த‌விர‌ வேறு ஏதேனும் இய‌க்குன‌ர் அறிமுக‌ப்ப‌டுத்தியிருப்பார்க‌ளா என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான். அதை பால‌ச‌ந்த‌ரே ஒரு முறை இன்டிய‌ன் எக்ஸ்பிர‌ஸ் பேட்டியில் குறிப்பிட்டார். “அந்த‌க் கால‌த்தில் க‌ருப்பு நிற‌த்தில் இருக்கும் ஒருவ‌ரை ஒரு முக்கிய‌மான‌ க‌தாபாத்திர‌த்தில் ந‌டிக்க‌ வைப்ப‌து என்ப‌து எந்த‌ இய‌க்குன‌ருமே நினைக்காத‌ விஷ‌ய‌ம். இன்றைக்கு அவ‌ருடைய‌ நிற‌ம் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து”.

1973ம் ஆண்டு வெளியான‌ 43 கேர‌ட்ஸ் எனும் ஆங்கில‌ப் ப‌ட‌த்தின் மைய‌ம் தான் அபூர்வ‌ராக‌ங்க‌ள் ப‌ட‌த்தின் மைய‌மும். வ‌ழ‌க்க‌ம் போல‌ புயலைக் கிள‌ப்பும் க‌தை. பால‌ச‌ந்த‌ர் என்றாலே ஏதோ விவ‌கார‌மான‌ க‌தையா இருக்கும் எனும் பேச்சு வ‌லுவ‌டைந்திருந்த‌து. பால‌ச‌ந்த‌ரின் வித்தியாச‌மான‌ க‌தைக்காக‌வே ஏக‌ப்ப‌ட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் உருவாகியிருந்தார்க‌ள்.

க‌ம‌ல‌ஹாச‌ன் தன்னை விட அதிக வயதுடைய ஸ்ரீவித்யாவைக் காத‌லிக்கிறார். இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ வேண்டுமென‌ முடிவெடுக்கிறார்க‌ள். க‌ம‌ல‌ஹாச‌னின் த‌ந்தையோ ஒரு சின்ன‌ப் பெண்ணைக் காத‌லிக்கிறார். அந்த‌ப் பெண் ஸ்ரீவித்யாவின் ம‌க‌ள். இதென்ன‌டா புதுக் குழ‌ப்ப‌ம் என‌ ர‌சிக‌ர்க‌ள் குழ‌ம்பும் போது வ‌ருகிறார் ஸ்ரீவித்யாவின் க‌ண‌வ‌ன், ர‌ஜினிகாந்த் ! அத‌ன் பின் ந‌ட‌ந்த‌து என்ன‌ என்ப‌து தான் பாலச‌ந்த‌ர் பாணி அபூர்வ‌ ராக‌ங்க‌ள்.

ர‌ஜினிகாந்தை அந்த‌க் காட்சிக்காக‌த் தேர்வு செய்த‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை. ஏற்க‌ன‌வே ர‌ஜினிகாந்தின் மேடை நாட‌க‌த்தை பால‌ச‌ந்த‌ர் பார்த்திருந்தார். அத‌னால் அவ‌ரை தேர்வுக்காக‌ அழைத்திருந்தார். ர‌ஜினிகாந்த் வ‌ந்தார். வ‌ந்து சிவாஜிக‌ணேச‌னைப் போல‌ ந‌டித்துக் காண்பித்தார். பிர‌மாத‌மாக‌ இருந்த‌து. ஆனால் பால‌ச‌ந்த‌ர் அவ‌ரை தேர்வு செய்ய‌வில்லை.

“உன‌க்கென்று ஒரு ஸ்டைல் உண்டு, அதை என‌க்குக் காட்டு. இரண்டு நாட்க‌ள் டைம் என்றார்”. இர‌ண்டு நாட்க‌ளுக்குப் பின் ர‌ஜினிகாந்த் வ‌ந்தார். கையில் ஒரு சிக‌ரெட்டை எடுத்தார். ப‌டு ஸ்டைலாக‌ அதை வீசி உத‌டுக‌ளில் க‌வ்வினார். அந்த‌ ஸ்டைல் அதுவ‌ரை பால‌ச‌ந்த‌ர் பார்த்திராத‌ புதிய‌ ஸ்டைலாக‌ இருந்த‌து. விய‌ந்தார். அப்ப‌டித் தான் ர‌ஜினிகாந்தை அந்த‌க் க‌தாபாத்திர‌த்துக்காக‌த் தேர்வு செய்தார். தேர்வு செய்தபின் ‘போய் தமிழ் படிச்சுட்டு வா’ என அனுப்பி வைத்தார்.ரஜினி பெங்களூர் திரும்பி நண்பர் ராஜ பகதூரிடம் விஷயத்தைச் சொன்னார். ராஜபகதூருக்கு தமிழ் நன்றாகத் தெரியும் எனவே இருவரும் தமிழிலேயே பேசிப் பேசி விரைவிலேயே தமிழைக் கற்றுக் கொண்டார் ரஜினி.

“ர‌ஜினிகாந்தின் க‌தாபாத்திர‌ம் சின்ன‌தாக‌ இருந்தாலும் அது ரொம்ப‌ ப‌வ‌ர்ஃபுல் ஆன‌து. கிளைமேக்ஸ் ப‌குதியில் வ‌ருவ‌தால் ம‌க்க‌ள் அதை ஞாப‌க‌த்தில் வைத்திருப்பார்க‌ள் என்றும் தெரியும்” என‌ ர‌ஜினிகாந்தின் பாத்திர‌த் தேர்வு குறித்து பால‌ச‌ந்த‌ர் பின்ன‌ர் குறிப்பிட்டார்.

ர‌ஜினியின் இயற்பெய‌ர் சிவாஜிராவ் என்ப‌தை நான் சொல்லித் தெரிய‌வேண்டிய‌தில்லை. ஏற்க‌ன‌வே சிவாஜி என்றொரு ந‌டிக‌ர் இருந்த‌தால் இன்னொரு பெய‌ரை வைக்க‌ பால‌ச‌ந்த‌ர் முடிவு செய்தார். அப்போது அவ‌ருடைய‌ நினைவுக்கு வ‌ந்த‌து அவ‌ருடைய‌ மேஜ‌ர் ச‌ந்திர‌காந்த் நாட‌க‌ம். அதில் ஒரு க‌தாபாத்திர‌த்தின் பெய‌ர் ‘ர‌ஜினிகாந்த்’. இனிமே உன் பெய‌ர் ‘ர‌ஜினிகாந்த்’ என்றார் பால‌ச‌ந்த‌ர். அந்த‌ பெய‌ர் எவ்வ‌ள‌வு வ‌லிமையான‌து என்ப‌து இன்றைய‌ சினிமா ர‌சிக‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரும் அறிந்த‌தே.

அபூர்வ‌ ராக‌ங்க‌ள் ப‌ட‌த்தில் ர‌ஜினிகாந்த் வீட்டு கேட்டைத் திற‌ந்து கொண்டு உள்ளே வ‌ருவார். அந்த‌க் காட்சியிலேயே ர‌ஜினியின் வித்தியாச‌மான‌ ஸ்டைலைப் ப‌ட‌ம்பிடித்திருப்பார் பால‌ச‌ந்த‌ர். ‘ர‌ஜினி சினிமா உல‌குக்குள் நுழைவ‌தை குறிப்பால் காட்டுவ‌து தான் அந்த‌ க‌த‌வு திற‌ந்து உள்ளே நுழையும் காட்சி’ என்றார் பால‌ச‌ந்த‌ர்.

இந்த‌ப் ப‌ட‌ம் தான் க‌ம‌ல‌ஹாச‌ன் எனும் ந‌டிக‌ரின் புதிய‌ ப‌ரிமாண‌த்தைக் காட்டிய‌து. இந்த‌ப் ப‌ட‌த்துக்காக‌ ஏழு மாத‌ங்க‌ள் செல‌விட்டு மிருத‌ங்க‌ம் வாசிக்க‌க் க‌ற்றுக் கொண்டார் க‌ம‌ல‌ஹாச‌ன்.

அபூர்வ‌ ராக‌ங்க‌ள் தான் ஒரு உண்மையான‌ வீட்டில் ப‌ட‌ம் பிடிக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌மிழ் ப‌ட‌ம் என்ப‌து விய‌ப்பாக‌த் தான் இருக்கும். அதுவ‌ரை வீடு என்றால் அத‌ற்கென‌ ஒரு செட் போடுவ‌தே வ‌ழ‌க்க‌ம். இந்த‌ ப‌டத்தில் பயன்படுத்தப்பட்ட வீடு ஏவிஎம் த‌யாரிப்பு நிறுவ‌ன‌த்தின் ஒரு ம‌க‌னுடைய‌ வீடு.

அதிச‌ய‌ ராக‌ம் ‍ எனும் பிர‌ப‌ல‌ பாட‌ல் இந்த‌ப் ப‌ட‌த்தில் இட‌ம்பெற்ற‌து. அதுவ‌ரை பாட‌ல் காட்சிக்கு டிராலி ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தே வ‌ழ‌க்க‌ம். இந்த‌ப் பாட்டில் டிராலி ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் கேம‌ராமேனே கேம‌ராவை எடுத்துக் கொண்டு ந‌ட‌ந்து ந‌ட‌ந்து ப‌ட‌ம்பிடித்தார். ஒரு த‌மிழ்ப் ப‌ட‌த்தில் இந்த‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும் இது தான் முத‌ன் முறை.

இசையை மைய‌ப்ப‌டுத்தி எடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இந்த‌ப் ப‌ட‌த்தில் ஒவ்வொரு க‌தாபாத்திர‌த்துக்கும் ஒவ்வொரு ராக‌த்தின் அடிப்ப‌டையிலான‌ பின்ன‌ணி இசையை அமைத்து பிர‌மிப்பூட்டியிருந்தார் எம்.எஸ்.விஸ்வ‌நாத‌ன். “ஒரு இசைக்க‌ச்சேரி பார்த்த‌ பிர‌மிப்பு” என‌ விக‌ட‌ன் பாராட்டு ம‌ழை தூவிய‌து. “க‌வித்துவ‌மான‌ ப‌ட‌ம். அருமையான‌ க‌தை, அழ‌கான வ‌ச‌ன‌ங்க‌ள், அட்ட‌காச‌மான‌ இய‌க்க‌ம்” என‌ த‌ ஹிந்து நாளித‌ழ் பாராட்டிய‌து.

பேத‌மில்லாம‌ல் எல்லா ப‌த்திரிகைக‌ளும் க‌தையையும், இய‌க்க‌த்தையும், க‌ம‌ல‌ஹாச‌ன் எனும் மாபெரும் ந‌டிக‌னையும் ம‌ன‌ம் திற‌ந்து பாராட்டின. மொத்தம் மூன்று தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ளியது.

சிற‌ந்த‌ த‌மிழ்ப்ப‌ட‌த்துக்கான‌ தேசிய‌ விருது இந்த‌ப் ப‌ட‌த்துக்குக் கிடைத்த‌து. சிற‌ந்த‌ ஒளிப்ப‌திவுக்கான‌ விருது பி.எஸ்.லோக‌நாத‌னுக்குக் கிடைத்த‌து, சிற‌ந்த‌ பின்ன‌ணிப் பாட‌கிக்கான‌ விருது வாணி ஜெய‌ராமுக்குக் கிடைத்த‌து. அபூர்வ ராகங்கள் என்றவுடன் எது நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, வெறும் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் குடிகார‌னாக‌ வ‌ந்து த‌மிழ்த்திரை உல‌கில் ஏற‌க்குறைய‌ நாற்ப‌து ஆண்டுக‌ளாய் ப‌ட்டையைக் கிள‌ப்பிக் கொண்டிருக்கும் ர‌ஜினிகாந்த் நிச்ச‌ய‌ம் ஞாப‌க‌த்துக்கு வ‌ருவார்.

ப‌ட‌ம் த‌யாரான‌ கால‌த்தில் ஒரு பேட்டியில் பால‌ச‌ந்த‌ர் இப்ப‌டிக் குறிப்பிட்டார். “ஒரு புது ந‌டிக‌னை அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கேன். அவ‌ன் த‌மிழ்த் திரையில‌கில் மிக‌ப்பெரிய‌ இட‌த்தைப் பிடிப்பான். இது நிச்ச‌ய‌ம்” என்றார்.

அதை மெய்ப்பிக்கும் விதமாக 1977ம் ஆண்டு ரஜினி 15 படங்களுக்கு ஒப்பந்தமாகி புதிய சாதனை படைத்தார் ! பால‌ச‌ந்த‌ர் எனும் இய‌க்குன‌ரின் க‌ணிப்பும், ஒரு ந‌டிக‌ன் குறித்த‌ அவ‌ருடைய‌ மிக‌த் தெளிவான‌ தீர்க்க‌த் த‌ரிச‌ன‌ப் பார்வையும் தான் அவ‌ரை மிக‌ப்பெரிய‌ வெற்றிக‌ளுக்குக் கூட்டிச் சென்றிருக்கிற‌து என்று தைரிய‌மாய்ச் சொல்ல‌லாம்.

ஆசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை
thozhamaiveliyeedu@gmail.com

6 thoughts on “கே பாலசந்தர் : வாழ்வும் படைப்பும்

 1. The movie you referred to must be 40 Carats not 43 carats.

  1. writerxavier writerxavier says:

   Oh.. Yes… 🙂 Thank you for pointing. Sorry for the mistake.

 2. KNVIJAYAN says:

  ஊடகங்களால் ஊதி பெருக்கப்பட்ட ஒரு பேர்வழிதான் கே.பாலச்சந்தர்,அந்த மனிதருக்கு சுயமான கற்பனை என்பது மருந்துக்கும் கிடையாது.மத்தியில் அவருக்கு வேண்டியவர்கள் இருந்ததால் தான் அவருக்கு தாதா சாஹிப் பால்கே விருது கிடைத்தது,தகுதியில்லா MGR -க்கு அவர் அரசியலால் சிறந்த நடிகர் (பாரத்) விருது கிடைத்தது,அதுபோல் KB -க்கு எதனால் கிடைத்தது என்று நீங்களே யூகியுங்கள்VIJAYAN.

  1. PK says:

   உனக்கென்ன அப்பு அந்த மனுசர் மேலே இவ்வளவு கடுப்பு…….. சரக்கில்லாம 40 வருஷம் காலம் தள்ள முடியாதுப்பா………

 3. Suresh Babu says:

  K B Introduced a Block Diamond. Stil it shines…

 4. Suresh Babu says:

  The Black Diamond still shines..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *