95 Health Tips

 

1369382045_86880

 

 1. அடிக்கடி போரடிக்கிறது என காபி, டீ குடிக்க கிளம்பாமல் அதற்குப் பதிலாக தூய்மையான தண்ணீரைக் குடியுங்கள்.

 

 1. “தம்” அடிப்பதை நிறுத்துங்கள். தம் அடிக்கத் தோன்றும்போது பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.

 

 

 1. கணினியில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை நிச்சயம் செய்யுங்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது வினாடிகள், இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் இந்த பயிற்சி.

 

 1. கணினியில் வேலை பார்ப்பவர்கள், அவ்வப்போது கண்களைக் கழுவுவது கண்ணுக்கு புத்துணர்ச்சி தரும்.

 

 1. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடங்கள். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமரவேண்டாம்.

 

 1. தவிர்க்க முடியாத சூழல் இல்லையேல் லிப்ட் – ஐப் பயன்படுத்தாதீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

 

 1. வால்நட் வாங்கி தினமும் கொஞ்சம் கொஞ்சம் கொறியுங்கள். உடம்புக்கு நல்லது. இதயத்துக்கும் நல்லது.

 

 1. ஜூஸ் குடிக்க முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடியுங்கள். உடலில் இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத் தன்மை என பல பிரச்சினைகளுக்கு ஒரு எளிய தீர்வு இது.

 

 1. அடர் நிறமுள்ள காய்கறிகளைப் மாறி மாறிப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நிற காய்கறியும் ஒவ்வொரு பயன் கொண்டது.

 

 1. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடாதீர்கள். உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். அதே நேரம், சில்லிடும் குளிரில் ஓடுகிறீர்களெனில் கருப்பே சிறப்பு !

 

 

 1. இரவு வெகு நேரம் உழைக்க வேண்டியிருந்தால், காலையில் ஓடாதீர்கள். அது உடலுக்கு பயனளிப்பதற்குப் பதிலாய் கெடுதலைத் தான் தரும்.

 

 1. தினமும் ஐந்து விதமான பழங்களையும், ஒரு சில காய்கறிகளையும் சாப்பிடும் பெண்மணியா நீங்கள் ? ஆனந்தப் படுங்கள். ஆரோக்கியமும் அழகும் உங்களிடம் தங்கும்.

 

 

 1. தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதும், மிதமான உடற்பயிற்சிகள் செய்வதும் மிகவும் ஆரோக்கியமானது, தேவையானது !

 

 1. கவலையை முதலில் தூர எறியுங்கள். வயது, எடை, உயரம் போன்றவற்றை விடக் கொடுமையானது கவலையே !

 

 

 1. ஆரோக்கியமான நட்பைக் கொண்டிருங்கள். உற்சாகமான உரையாடல் ஆரோக்கியத்தை பந்தி வைத்து அழைக்கும்.

 

 1. நல்ல ஹாபி சிலவற்றைக் கொண்டிருங்கள், வாசித்தல், எழுதுதல், தோட்ட வேலை என எதுவாகவும் இருக்கலாம் அது. அது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சுறுசுறுப்பான மூளை உள்ளவர்களை “அல்சீமர்” போன்ற நோய்கள் அதிகம் தாக்காது.

 

 

 1. சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள். வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாய் மாறிவிடும்.

 

 1. மன்னிப்பு, அன்பு போன்றவையெல்லாம் மனதை வளமாக்கும். வளமான மனது வாழ்க்கையையும், உடலையும் ஆரோக்கியமாக்கும்.

 

 

 1. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சி செய்தால், ஒரு மணி நேரம் கழித்த பின்னரே உண்ணுங்கள். அதேபோல உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் உண்ணலாம்.

 

 1. இளமையாய் இருக்கும் போதே பெண்கள் அதிக கால்சியம் சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் இது காத்துக் கொள்ளும்.

 

 

 1. பெண்களுக்கு சரியான மாதவிலக்கு ஆரோக்கியமான உடலில் அறிகுறி. அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் அவசியம்.

 

 1. நிறைய தண்ணீர் குடியுங்கள் என்பது தான் உலகிலேயே மிக எளிதான, அதிக பயனுள்ள ஆனால் யாரும் ஒழுங்காய் செய்யாத பழக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

 

 1. பாஸ்ட் புட் உணவகங்களை முடிந்தமட்டும் ஒதுக்குங்கள்.
 2. தினமும் எட்டு மணி நேரம் நிம்மதியாய் தூங்குங்கள்.

 

 1. காதுக்குள் பட்ஸ் விட்டுக் குடைவது ஆபத்தானது. பஞ்சு தரமற்றது என்பது ஒன்று. அது காதிலுள்ள அழுக்கை உள்பக்கமாகத் தள்ளிவிடும் என்பது இன்னொன்று. சில மெழுகுப் பொருட்கள் தேவையானவை. தூசுகளிலிருந்து காதைப் பாதுகாக்க உடலே உருவாக்கிக் கொள்ளும் அரேஞ்ச்மெண்ட் அது என்பது மற்றொன்று.

 

 

 1. காதில் அதிக அழுக்கு இருக்கிறது என நீங்கள் நினைத்தால் டாக்டரைப் பார்ப்பதே நல்லது. ஒரு ஈரத் துணியை விரலில் சுற்றி காதின் அழுக்கை எடுக்கலாம். அந்த எல்லையைத் தாண்டி உள்ளே போவது ஆபத்தானது.

 

 1. அதிக சத்தத்தைக் கேட்பதிலிருந்து காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அதிக இசை, திருவிழா வெடிச்சத்தம் போன்றவை. காதுகளை நிரந்தர ஊனமாக்கும் வல்லமை அதற்கு உண்டு.

 

 

 1. குழந்தைகள் அதிக சத்தத்தைக் கேட்காமல் இருப்பது மிக அவசியம்.

 

 1. காது வலி வந்தால் காதில் தான் பிரச்சினை என்பது தவறான கண்ணோட்டம். தொண்டை, குரல்வளை, காதுக்குப் பின்புறம் என பிரச்சினையின் காரணம் வேறாக இருக்கலாம். எனவே மருத்துவரைப் பார்ப்பதே நல்லது.

 

 1. தூசு, மூக்கு ஸ்பிரே, விஷப் புகை போன்றவற்றைச் சுவாசிக்காதீர்கள்.

 

 

 1. ஏசியில் உள்ள எயர் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், மூன்று மாதத்துக்கு மேல் சுத்தம் செய்யாமல் இருப்பது ஆபத்து.

 

 

 1. லெமன் ஜுஸ் பிடிக்குமா உங்களுக்கு ? அடிக்கடி குடியுங்கள். உடலில் நச்சுத் தன்மை நீக்கவும், வைரஸ் தொல்லைகள் அதிகம் வராமல் தடுக்கவும் அது சிறந்தது.
 2. சீனியை உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், நீங்கள் உங்கள் உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம் என்பது ஒரு எளிய ஆலோசனை !
 3. ஏற்கனவே பலமுறை கேட்டிருப்பீர்கள் ! பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். உடலின் வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாகவும், கான்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் பூண்டு கில்லாடி என்பது மருத்துவத் தகவல்.
 4. கிட்னி கல் இருக்கிறதா ? சாப்பாட்டில் கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள் பயன் கிடைக்கும். சாப்பாட்டில் மெக்னீசியம் பொருட்களைச் சேருங்கள். மெக்னீசியம் என்றதும் குழம்பவேண்டாம். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும் ! கோதுமை, ஓட்ஸ், ஆல்மண்ட், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
 5. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் எதிரிகள். உஷாராக இருங்கள். குறிப்பாக கிட்னியில் கல் இருப்பது தெரிந்தால் இவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.
 6. நிறைய தண்ணீர் குடிப்பது சிறு சிறு கிட்னி கற்களை அகற்றிவிடும். கூடவே காரெட் ஜூஸ், திராட்சை ஜூஸ் மற்றும் ஆரஞ்ச் ஜூஸ்களைக் குடித்தால் ரொம்ப நல்லது.
 7. நிறைய காய்கறிகளைச் சாப்பிடுவது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும் ஒரு எளிய முறை.
 8. தினமும் நம்மை அறியாமலேயே அங்கும் இங்கும் நடக்க வேண்டியிருக்கும். இந்த நடை 10,000 அடிகள் என இருந்தால் உடலுக்கு நல்லது.
 9. வெளியில் அதிகம் அலையவேண்டி இருந்தால் அல்ட்ரா வயலட் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். அது கண்ணில் கேட்ராக்ஸ் வருவதைத் தவிர்க்கும், அல்லது தாமதப்படுத்தும்.
 10. மூச்சுப் பயிற்சி மிகவும் எளிதானது. ஆனால் மூளைக்குச் சுறுசுறுப்பு தருவதில் முன்னிலையில் நிற்பதும் அது தான் !
 11. அலர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருந்தால் உங்கள் செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.
 12. கரப்பான் பூச்சி அலர்ஜி நோய்க்கு ஒரு முக்கிய காரணம். கரப்பானை முழுமையாய் ஒழித்து விடுங்கள்.

 

 

 1. கொஞ்சம் குடித்தாலும் பெண்களுக்கு அதிக சிக்கல் தரக்கூடியது மது. சும்மா ஒரு டம்பள் பீர் தினமும் குடித்தாலே லிவர் பாதிப்படையும். கவனம் தேவை.
 2. டூத் பிரஷ், ஷேவிங் செட் இவற்றையெல்லாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொற்று நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
 3. பச்சை குத்தும் பழக்கமுடையவர்கள், அதற்காக நல்ல இடங்களைத் தெரிவு செய்வது அவசியம். சுகாதாரமற்ற பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை வாங்கி வரும்.
 4. புகைப்பதை நிறுத்துவது நீங்கள் செய்யும் தலையாய நல்ல விஷயம். உண்பதற்கான சூரியகாந்தி விதைகள் கடைகளில் கிடைக்கும். அதை உண்ணுங்கள். உடலிலுள்ள நிக்கோட்டின் பாதிப்பு குறையும்.
 5. அன்பாய் அரவணைப்பதும், தொடுதலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயங்காமல் அன்பை அளியுங்கள்.
 6. பீடா காரோடீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக காரெட், முட்டைகோஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள், ஆப்ரிகாட் போன்றவை.
 7. பூண்டு இதயத்துக்கும் ரொம்ப நல்லது !
 8. நீச்சல் தெரியுமா ? அல்லது பிரியமா ? நீச்சல் இதயத்தைக் காக்கும் நல்ல உடற்பயிற்சி.
 9. அடிக்கடி டயட் இருப்பது, சாப்பிடாமல் இருப்பது இதெல்லாம் இதயத்துக்குக் கேடானது. முழு தானியங்கள், காய்கறிகள், பீன்ஸ், கீரைகள், பழங்கள், மீன் போன்ற உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணுங்கள்.
 10. உப்பு பயன்பாட்டைக் குறையுங்கள். உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயத்துக்கு இது பிடிக்காது எனும் நினைப்பு இருக்கட்டும்.
 11. உடல் எடையைக் கவனித்துக் கொள்வது இதயத்துக்கு ரொம்ப முக்கியம். கொழுப்பு சேராமல், உற்சாகமாய் ஓடியாடித் திரியும் உடம்பு இதயத்துக்கு ரொம்ப நல்லது.
 12. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். ஆனந்தமான குடும்ப சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். !
 13. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால் நீங்களும் அடிக்கடி உங்கள் இதயத்தைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

 

 1. பதட்டத்தைக் குறையுங்கள். காலையில் 15 நிமிடங்கள் முன்னாதாக எழுந்தாலே பாதி நிம்மதி இதயத்துக்கு !
 2. எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். மிக முக்கியமானவற்றிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாய் செய்யுங்கள்.
 3. பாசிடிவ் திங்கிங் மற்றும் பேச்சு உங்கள் இதயத்தை வலுவாக்கும்.
 4. சரியான உடற்பயிற்சி பெரும்பாலான நோய்களை விலக்கிவிடும். தினமும் 30 நிமிடங்கள். வாரம் மூன்று முதல் 5 நாட்கள். இதுவே போதுமானது.
 5. மனதுக்குப் பிடித்த செயலை தினமும் கொஞ்ச நேரம் செய்யுங்கள். இதயத்தை அது வலுவாக்கும்.
 6. காய்கறிகள் பழங்கள் கலந்த சரியான உணவு, 30 நிமிட உடற்பயிற்சி, அழுத்தமற்ற மனம், புகைக்காமலும் குடிக்காமலும் இருத்தல், நல்ல தூக்கம் இதுவே சுருக்கமாய் இதயத்தை வளமாக்கத் தேவையானவை !
 7. அடிக்கடி இனிப்பு கலந்த தேனீர், காபி குடிப்பது பல்லுக்கு எதிரி.
 8. சில் தண்ணீரைக் குடிப்பதைத் தவிருங்கள். சாதாரண தண்ணீரைக் குடிப்பதே பல்லுக்கு நல்லது.
 9. சூடான உணவை உண்டு விட்டு, சட்டென சில் உணவுக்கு மாறாதீர்கள். கொஞ்சம் அவகாசம் தேவை. இல்லையேல் உடலும், பல்லும் பாதிப்படையும்.
 10. தினமும் இரண்டு முறை பல் தேய்ப்பது, உணவுக்குப் பின் வாயை சுத்தம் செய்வது எல்லாம் பாட்டி காலம் முதலே சொல்லப்படும் முக்கியமான அறிவுரைகள்.
 11. நல்ல சுத்தமான இயற்கையான இடத்தில் செல்ல நேர்ந்தால் கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு சுகாதாரமான காற்று ரொம்பவே அவசியம்.
 12. வீடுகளில் புகை பிடிப்பதை கண்டிப்பாக விட்டு விடுங்கள். புகைக்காமல் இருக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் புகையால் பெரும் பாதிப்பு வரும்.
 13. சன்னல்களைத் திறந்து விட்டு சமையுங்கள். காஸ் நுரையீரலில் அடிக்கடி போய் வருவதே ஆபத்தானது தான்.
 14. தினமும் கொஞ்ச நேரம் நடப்பது ரொம்பவே நல்லது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
 15. எலும்புகளின் ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்கு கோக் வகையறாக்களை ஒதுக்கி வைத்துவிட்டு பழ ஜூஸ், தண்ணீர், பால் போன்றவற்றைக் குடிக்கவேண்டும்.
 16. அளவுக்கு அதிகமாக உண்பது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். தொடர்ந்து அதிக அளவு சர்க்கரை உடலில் தங்கியிருப்பது டயாபடிக்ஸ் நோயை வரவழைக்கும் !
 17. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது உடலில் சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைக்கும்.

 

 

 1. பாதுகாக்க பெண்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்காமல் இருப்பது தான். அதிக மேக்கப் ஆபத்தானது என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

 

 1. நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தை இளமையாய் வைத்திருக்க உதவும். தோலிலுள்ள சுருக்கங்களைத் தவிர்ப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது.

 

 

 1. முகத்தை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்துவது அவசியமானது. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி சருமத்தின் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன.

 

 1. முகத்தை மிகவும் அழுத்திக் கழுவுவதோ, தேய்ப்பதோ கூடாது. மிகவும் மென்மையாகக் கையாளுங்கள்.

 

 

 1. அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழல் இருந்தால் மாயிஸ்ட்ரைசர்கள் பயன்படுத்துங்கள். உடலில் தண்ணீரின் அளவும் தேவையான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

 

 1. சொல்லவே வேண்டாம். மது, புகை, காபி மூன்றும் பொலிவான சருமத்தின் எதிரிகள்.

 

 

 1. மன அழுத்தம், சோர்வு இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள். யோகா போன்றவற்றைப் பழகுவது தோலுக்கும் நல்லது என்பது ஆச்சரியமான உண்மை.

 

 1. தினமும் இரண்டு முறை முகத்தை வெதுவெதுப்பான நீரிலும் கழுவுங்கள்.

 

 

 1. முகத்தில் முகப்பரு இருந்தால் அதை கிள்ளாதீர்கள். கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால் அமைதி தேவை. ஏனெனில் அவை சிக்கலை எப்போதுமே பெரிதாக்கும்.

 

 1. முகத்தில் மேக்கப் போடும் முன் கைகளை நன்றாகக் கழுவுங்கள். இது எளிய ஆனால் இன்றியமையான ஒன்று.

 

 

 1. இறுக்கமான ஆடை அணிவதைத் தவிருங்கள். சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் கேடு விளைவிக்கிறது.

 

 1. முக்கியமாக இரவு தூங்கப் போகும் முன் மேக்கப்பை முழுதாகக் கலைத்து முகத்தை தூய்மையாக்குங்கள்.

 

 

 1. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆப்பிள் போல அழகிய சருமத்தைப் பெறலாம்.

 

 1. முகப்பருவை நீக்க முதலில் உங்களுக்குத் தேவை பொறுமை. மருத்துவரின் ஆலோசனைப்படி ஏதேனும் கிரீம் பயன்படுத்தினால் கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். முகப்பருவை நிமிடங்களில் நீக்குவது சாத்தியமற்றது.

 

 1. டூத் பேஸ்டை முகப்பருவின் மேல் கொஞ்சம் வைத்து விட்டுப் படுத்தால் அடுத்த நாள் முகப்பரு சிறிதாகும் என்பது அனுபவஸ்தர்களின் வாதம்.

 

 

 1. எண்ணைப் பசை அதிகம் இல்லாத மேக்கப்களை பயன்படுத்துவது முகப்பரு வராமல் தடுக்கும்.

 

 1. நார்ச்சத்து அதிகமுடைய உணவுகளை உண்பது முகப்பரு வராமல் தடுக்கும்.

 

 1. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேறாமல் இருப்பதே முகப்பருவின் முதல் காரணம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *